தமிழ்நாடு அறிவியல் இயக்க மேற்கு மண்டல வினாடி - வினா போட்டி
சேலம் ஜெய்ராம் கலை, அறிவியல் கல்லூரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சேலம், கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வு பெற்ற மாணவ-மாணவிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
தமிழ், ஆங்கில வழிகளில், இளையோர், மூத்தோர், மேல்மூத்தோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ் வழி இளையோர் பிரிவில் கோவை சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
மூத்தோர் பிரிவில் திருப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், மேல்மூத்தோர் பிரிவில் கோவை கதிர்மில்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் முதலிடம் பிடித்தனர்.
ஆங்கில வழி வினாடி-வினா போட்டியில் உடுமலைப்பேட்டை ஸ்ரீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இளையோர் பிரிவிலும், இதே ஊரைச் சேர்ந்த எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளி மூத்தோர் பிரிவிலும், குன்னூர் ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மேல் மூத்தோர் பிரிவிலும் முதலிடம் பிடித்தனர்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும், சிறப்பாக பதிலளித்த மாணவ-மாணவிகளுக்கும் கல்லூரித் தாளாளர் ராஜேந்திர பிரசாத் பரிசுகள் வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் சகஸ்ரநாமம் மாணவ மாணவிகளை பாராட்டி பேசினார், மாவட்டச் செயலர் ஜெயமுருகன் நன்றி உரையாற்றினார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக