இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வியாழன், செப்டம்பர் 02, 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம்



சேலம் மாவட்ட ஒருநாள் வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம் கடந்த 24-07-2010 (சனிகிழமை) அன்று (சேலம் நகரம் மற்றும் ஆத்தூர் என இரண்டு பகுதிகளில்) நடைபெற்றது.

சேலம்
நாள் : 24 - 07 - 2010
இடம் : ஸ்ரீ விநாயக வித்யாலாய மெட்ரிக் மேல்நிலை பள்ளி, அழகாபுரம், சேலம்.
நேரம் : காலை 9.45 முதல் மாலை 4.45 வரை
துவக்க விழா
நிகழ்ச்சி தொகுப்பு ( NCSC ) : திருமிகு.சேதுராமன் - மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்,
முன்னிலை: திருமிகு.ராமமூர்த்தி - மாவட்ட பொருளாளர்.
வரவேற்பு ( பாடல் ) : திருமிகு.சுரேஷ் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை ( TNSF ) : திருமிகு. சகஸ்ரநாமம் - மாநில செயற்குழு உறுப்பினர்
வாழ்த்துரை - திருமிகு. கீதா - பள்ளி முதல்வர்.

கருத்துரை (1) : அக்ரி. இராம.சுப்பிரமணியன்,( கருத்தாளர் ) தோட்டகலை உதவி இயக்குனர், சென்னிமலை, ஈரோடு,

கருத்துரை (2) : முனைவர். என்.விஜயகுமார் , புவியியல் துறை, உதவி பேராசிரியர், அரசு கலைக் கல்லுரி, சேலம்.

கருத்துரை (3) : திருமிகு. கே.பி.சுரேஷ்குமார், (செயலாக்க குழு), இணைசெயலாளர், சேலம்.

கருத்துரை (4) : முனைவர்.வெ.பாலசுப்ரமணியன், வேளாண்மை அலுவலர். மண்பரிசோதனை நிலையம், சேலம்.

அனுபவ பகிர்வு : 2009 சேலம் மாவட்ட இளம் விஞ்ஞானி, அஜித்குமார் மற்றும் குழுவினர்.
கருத்துரை (5) : திருமிகு.உமாசங்கர், (கருத்தாளர்), தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு.

பயிற்சிமுகமில் 54 பள்ளிகள் ( மெட்ரிக் பள்ளிகள் 24 + அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 28 ), தொழில்நுட்ப கல்லுரி 3 + கோச்சிங் செனட்டர் 1, களிலிருந்து 80 ஆசிரியர்கள் மற்றும் 17 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் அறிவியல் எழுத்தாளர் திருமிகு,இளங்கோ, துணை தலைவர், திருமிகு.சசிகலா, தாலுக்கா
ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு. ராம்குமார், திருமிகு, சண்முகம், திருமிகு.நமசிவாயம். திருமிகு. ஜெயக்குமார், மற்றும் உறுப்பினர்கள் திருமிகு, அருண், திருமிகு.மௌலிதரன் மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆத்தூர்
நாள் : 24 - 07 - 2010
இடம் : சி.எஸ்.ஐ சமுதாயக்கூடம், ஆத்தூர்,
நேரம் : காலை 9.45 முதல் மாலை 4.45 வரை
துவக்க விழா
நிகழ்ச்சி தொகுப்பு ( NCSC விரிவுரை ) : திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி - மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர்,
தலைமை:திருமிகு.அர்த்தனாரி, ஆத்தூர் கிளை, தலைவர்,
முன்னிலை: திருமிகு.பா.சீனிவாசன் - ஆத்தூர் கிளை, செயலாளர் .
வரவேற்பு : திருமிகு,வே.சீனிவாசன் - ஆத்தூர் தாலுக்க ஒருங்கிணைப்பாளர்
அறிமுகவுரை ( NCSC ) : திருமிகு. சுவாமிநாதன் - கெங்கவல்லி தாலுக்க ஒருங்கிணைப்பாளர்

கருத்துரை (1) : முனைவர்.வெ.பாலசுப்ரமணியன், வேளாண்மை அலுவலர். மண்பரிசோதனை நிலையம், சேலம்.

கருத்துரை (2) : திருமிகு.உமாசங்கர், (கருத்தாளர்), அறிவியல் இயக்கம், ஈரோடு.

அனுபவ பகிர்வு : 2009 சேலம் மாவட்ட இளம் விஞ்ஞானி, அஜித்குமார் மற்றும் குழுவினர்.

கருத்துரை (3) : திருமிகு. மணவழகன், வேளாண்மை அலுவலர், ஆத்தூர்

கருத்துரை (4) : திருமிகு.திருநாவுகரசு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம். சேலம்.

பயிற்சிமுகமில் 13 பள்ளிகள் ( மெட்ரிக் பள்ளிகள் 3 + அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 10 ), களிலிருந்து 16 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் அறிவியல் ஆத்தூர் கிளை நிர்வாகிகள், தாலுக்கா
ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு. கார்த்தி , திருமிகு, வே.சீனிவாசன், திருமிகு.கோபால். திருமிகு. சுவாமிநாதன், மற்றும் உறுப்பினர்கள் திருமிகு, பழனி, திருமிகு.சத்யமூர்த்தி மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக