தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக ஆசிரியர் இணையம் துவக்க நிகழ்ச்சி 06-03-2010 அன்று விநாயக வித்யாலாய பள்ளியில் ஒருநாள் பயிற்சிமுகாமாக நடைபெற்றது, நிகழ்ச்சியை சேலம் மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு பாலசரவணன் ஏற்பாடு செய்திருந்தார், கருத்தாளர்கள் திருமிகு, மாதவன் ( அறிவியல் இயக்க மாநிலகுழு ) அவர்கள் ஆசிரியர்களிடையே , அறிவியல் இயக்க கல்வி உபகுழுவின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால பணிகள் பற்றியும், சமசிர்கல்வி தலையீடு பற்றியும் விளக்கினார், திருமிகு.ஷாஜகான் ( தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் மாநில குழு ) அவர்கள் பாலின சமத்துவம் எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்க செயலரும், அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர், குறிப்பாக தாரமங்கலம், ஆத்தூர், எடப்பாடி, பிளாக் ஆசிரியர்கள் பங்கேற்பு சிறப்புற்றது, மாவட்ட செயலர் திருமிகு, ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு, சிறப்புரையுடன் அறிவியல் இயக்க பாடல்கள் பாடினார், துணை தலைவர் திருமிகு, பாண்டியன் அவர்கள் ஒரிகாமி பயிற்சியளித்தார், துணை தலைவர் திருமிகு.சசிகலா அவர்கள் கருத்துரை வழங்கினார், இணை செயலர் திருமிகு.சுரேஷ் அவர்கள் பாடல்கள் பாடினார்,
அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக