I - வளங்குன்றா நிலைத்த நீட்டித்த வாழ்க்கைக்கான சுற்றுச் சூழல் அமைப்பு
Eco System for Sustainable Living
வளங்குன்றா நிலைத்த நீட்டித்த வாழ்க்கைக்கான சுற்றுச் சூழல் அமைப்பு
”நாம் ஒன்றை உருவாக்கும்போது கொண்டிருந்த அதே கருத்தைக் கொண்டு நமக்கான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டிட முடியாது” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இயற்கையான வாழிடமே சுற்றுச்சூழல் என்று அழைக்கப்படுகிறது. உயிரியல் சமூகம் அதாவது உயிரினங்கள் தங்களின் இயல்பான வாழிடத்தை இயற்கையான சூழல்களுடன் தொடர்பு கொள்ளும் அமைப்பு என்றும் சுற்றுச் சூழலை விளக்கிடலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் இதற உயிரிகள் உள்ளிட்ட உயிர் பொருட்கள் அவைகளுக்கிடையிலும், அவற்றை சுற்றியுள்ள வானிலை, சூரியன், பூமி, மண், காலநிலை, வளிமண்டலம், நிலம் உள்ளிட்ட உயிரற்றவைகளுடனும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கும் அமைப்பையே சுற்றுச்சூழல் என்கின்றோம். இந்த உயிருள்ள மற்றும் உயிற்றவைகள் உணவு சுழற்சி மூலமும், ஆற்றல் ஒட்டம் (பகிர்வு) மூலமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது. பூமியில் உள்ள அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகள் (நுண்ணுயிர் முதல் பெரிய உயிரினம் வரை) உணவு மற்றும் வாழிடத்திற்கு அந்தந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை சார்ந்தே உள்ளன, எனவே, சுற்றுச்சூழல் அமைப்புக்கள் உயிரோட்டமாக இருக்க ஒரு நுட்பமான சமநிலையை பராமரிக்க வேண்டும். மற்ற உயிரினங்களைப் போலவே மனிதர்களும் தங்களுக்கான உணவிற்கும், இயற்கை ஆதாரங்களுக்கும் (வளங்களுக்கும்) அதற்கான சூழல் அமைப்பைச் சார்ந்தே வாழ முடியும் என பல்வேறு பண்புகள் அம்சங்களைக் கணக்கில் கொண்டு சூழலியல் அமைப்புகள் நிலம் சார்ந்து, நீர் சார்ந்து என்று பிரிக்கப்பட்டிருந்தது. கீழ் உள்ள கட்டத்தில் உள்ளது போல பல துணைக் குழுக்களாகவும் உள்ளது.
ஒரு சூழலமைப்பில் இருந்து இயற்கை வளங்கள் எடுத்துக்கொள்ளப்படும் போது, பாரபட்சமற்ற மற்றும் பொறுப்பான வழியில் செயல்பாடுகள் இல்லை என்றால் நுட்பமான இயற்கை சமநிலையை அது பாதிக்கக்கூடும் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
பின்வரும் (படம் 1:1 சூழலியலின் பல்வேறு கூறுகளைக் காட்டுகிறது. படம் 1:2 இந்தியாவின் வளமான சூழல் மண்டலங்கள்).)
உலகின் மிகவும் வளமான சூழல் அல்லது சுற்றுச்சூழல் மண்டலங்களை இந்தியா கொண்டுள்ளது என்பது படம் 1:2ல் காட்டப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பல்வேறு புற அம்சங்கள் மற்றும் காலநிலை அம்சங்களால் பலவகையான சூழல் மண்டலங்கள் அமைந்துள்ளன. இந்த சூழலியல் அமைப்புகளின் விளைவாக சூழல் அமைப்புகள் அதிகமான பல்லுயிர் பல்வகைமையைத் தாங்கி, மனித மற்றும் விலங்கினங்களின் ஒட்டுமொத்த நல வாழ்விற்கு பங்களிப்பதாக உள்ளது. ஆனால் காலநிலை மாற்றமும், மாசுபாடும், இதர சுற்றுச்சூழல் காரணிகளும் சூழ்லியல் செயல்முறைகளையும் (செயல்பாடுகளை மற்றும் சேவைகள்) மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. பிரதானமாக, நிலைப்புறுத் தன்மை என்பது நிலம், காற்று மற்றும் கடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை உள்ளடக்கியதாகும்.
சுற்றுச்சூழல் நமக்கு எவ்வாறு உதவுகிறது:
சுற்றுச் சூழலானது இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழிடத்தை வழங்குகிறது. பல்வேறு உணவுச் சங்கிலிகள் மற்றும் உணவு வலைகளுக்கு சாதகமாக உதவுகிறது, அத்தியவசியமான சுற்றுச்சூழல் செயல்முறைகளுக்கு உதவி புரிந்து உயிரினங்களுக்கு இடையேயான உயிர்புவி வேதியியல் சூழற்சி மூலம் ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்யவும் உதவுகிறது. இச்செயல்பாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் எனப்படுகின்றன. அடிப்படையில் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் என்பது உணவு சங்கிலியின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்களை பரிமாரிக் கொண்டு தாவரங்கள், விலங்குகள், மற்றும் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களை இந்தப் புவியில் வாழ வைக்கிறது. அங்ககப் பொருட்கள் மட்குவதும், தாவரங்கள் வளர்ந்து பெருகுவதும் கூட சுற்றுச்சூழல் செயல்பாடுகளின் விளைவே ஆகும். சுற்றுச்சூழலுக்குள் நிகழும் இத்தகைய செயல்பாடுகள் பூமியின் இயற்கை சமன்பாடுகளை காப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இது நமது உயிர் வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். இத்தகைய செயல்பாடுகளின் விளைவாக, பூமியில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெரிதும் பயன்பெறுகிறார்கள். இந்தப் பயன்பாடுகளையே நாம் சுற்றுச்சூழலின் சேவைகள் என்று அழைக்கிறோம். சூழல் அமைப்புகளில் இருந்து பெறப்படும் பொருட்களை உணவு, நீர் போன்றவை என சேவைப் பொருட்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை இயக்கும் செயல்பாடுகளான வெள்ளம், பூச்சிகள் மற்றும் நோய்கள், கலாச்சார சேவைகளான ஆன்மீகம் மற்றும் பொழுது போக்கு போன்றவைகள், மற்றும் ஊட்டச்சத்து (உணவு) சுழற்சி, மண் உருவாக்கம், கார்பனை பிரித்தெடுத்தல், இயற்கையின் முதன்மை உற்பத்தி போன்ற துணைச் சேவைகளையும் சுற்றுச் சூழல் அமைப்பு வழங்குகிறது.
இந்த சுற்றுச்சூழல் சேவைகள் அனைத்தும் பிரதானமாக, மண், விலங்குகள், தாவரங்கள், நீர் மற்றும் காற்று முதலியவற்றிற்கு இடையிலான தொடர் செயல்பாடுகளின் விளைவே ஆகும். இதன் பயன்கள் மக்களின் நல்வாழ்விற்கு மட்டுமின்றி, எதிர்கால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும்.
ஆரோக்கியமான சுற்றுச்சூழல் நமது நீரை சுத்தப்படுத்துகிறது, நமது காற்றை தூய்மையாகிறது, நமது மண்ணின் வளத்தை பராமரிக்கிறது, பருவ நிலையை இயக்குகிறது, ஊட்டச்சத்தை மறுசுழற்சி செய்கிறது, நமக்கு உணவையும் அளிக்கிறது. மேலும் நமது வீடு கட்டுவதற்கும், தொழிற்சாலைகளைக் கட்டமைப்பதற்கும் மூலப் பொருட்களை வழங்குவதோடு, நம்முடைய பல தேவைகளையும் நிறைவு செய்கிறது. சுற்றுச்சூழல் அமைப்பானது அனைத்து நாகரீக வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்குமான அடித்தளமாக விளங்குகிறது.
சுற்றுச்சுழல் பாதிப்புக்குள்ளாவதன் விளைவுகள்:
மனிதகுளம் தொன்று தொட்டே உயிர்வாழவும், வாழ்வாதாரத்திற்கும் சூற்றுச்சுழல் வளங்களை பயன்படுத்தி வந்துள்ளது. இயற்கை வளங்களை சுரண்டுவது என்பது மனிதகுல வரலாறு முழுவதும் மனிதன் வாழ்விற்கு இன்றியமையாததாக இருந்து வந்துள்ளது. மனிதர்கள் வளர்ந்து வரும் மக்கள் தொகையை நிலைநிறுத்தத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய இயற்கை வளங்களை சுரண்டுகின்றனர். ஆனால் இயற்கை வளங்களை பயன்படுத்தும் விதமானது சுற்றுச்சூழல் மறுபடியும் தன்னை புரைமைத்துக்கொள்ள இயலாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் சுற்றுச்சூழல் மதிப்பீட்டின்படி இந்த பூமியிலுள்ள 60% வளங்கள் புதுப்பித்துக்கொள்ள இயலாத வேகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனம்.
ஒழுங்கமைக்கப்பட்ட சேவைகள்:
சுற்றுச்சூழல் பயன்பாடு மற்றும் சேவைகளை முறைப்படுத்துவதால் வெள்ளப்பெருக்கு தடுப்பு, காலநிலை கட்டுப்பாடு, பூச்சி மற்றும் நோய் கிருமிகளின் கட்டுப்பாடு முதலியவை நன்மைகள் விளைகின்றன.
ஆதரவு சேவைகள்: மற்ற அனைத்து சுற்றுச்சூழல் சேவைகளுக்கும் அவசியமான உயிரி பல்வகைமை பராமரிப்பு, ஊட்டச்சத்து மறுசுழற்சி மற்றும் பிரதான/முதன்மை உற்பத்தித்திறன்.
கலாச்சார சேவைகள்: சுற்றுச்சூழல், கல்வி, பொழுதுபோக்கு, பாரம்பரியம், ஆன்மீகப்பணி முதலியவைகள் சுற்றுச்சூழலின் கலாச்சாரச் சேவையாக உள்ளது.
சுற்றுச்சூழல் சேவைகள்: சுற்றுச்சூழல் சேவைகளிலிருந்து பெறப்பட்டவைகளான ஆற்றல், கடல், உணவு, உயிரி மருந்துகள், போக்குவரத்து மற்றும் தேசிய பாதுகாப்பு போன்றவை சுற்றுச்சூழல் சேவைகளாகும்.
சுற்றுச்சூழலை சீரழிப்பது என்பது உயிரினங்களின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும். இந்தச் சீரழிவு பல்வேறு வழிகளில் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் சீரழிப்பானது சுற்றுச்சூழல் வளத்தையும், உயிரி பல்வகைமையையும் அவை தரும் பயன்களையும் அதன் மூலம் உள்நாட்டு மற்றும் வளசை போகும் உயிரினங்களையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். குறுகிய கால பொருளாதார ஆதாயத்திற்காக அதீதமாக இயற்கை வளங்களை சுரண்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீரழிவுகள் சமூக நலன்களில் நேரடியான எதிர்மறை விளைவுகளையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. விவசாயத்திற்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் அளவுக்கு அதிகமாக காடுகளின் வளங்கள் சுரண்டப்படுவதால் ஏற்படும் வனப்பகுதி அழிவானது சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது. வணிக வேளாண்மைக்காகவும், கால்நடை வளர்ப்பிற்கும் வனப்பகுதி மிகுதியாக அழிக்கப்படுவதும், விறகு, ஆற்றல் மற்றும் நகர்மயமாதலுக்கும் அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் சீர்கேடடைவது நான்கு பெரிய இழப்புக்களை ஏற்படுத்துகிறது. காரணமின்றியும், அர்த்தமற்ற முறையிலும் காடுகள் அழிக்கப்படுவது சமூக மற்றும் வேலை வாய்ப்புக்கள், உயிரி பல்வகைமை மற்றும் பொருளாதார இழப்பு, சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் சுற்றுச் சூழல் செயலிழப்பின் காரணமாக வேலை வாய்ப்பு, உயிரி பல்வகைமை அர்த்தமற்ற செயல்கள் என பல இழப்புக்களை ஏற்படுத்துகிறது. இயல்பாக உள்ள சுற்றுச்சூழல் அழிவுக்குள்ளானால், அதன் மூலம் அதன் சேவைகள் மற்றும் பலனை தர இயலாமல் போனால், போகப் போக சுற்றுச்சூழல் இழப்புக்கள் அதிகரித்தவண்ணமே இருக்கும்.
சுற்றுச் சூழலானது அழிவின்றி பாதுகாக்கப்படுமேயானால், அது அந்த சமூகத்தின் வளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும். எனவே சுற்றுச்சூழலை சீரழிக்காமல் நல்ல நிலையில் பராமரித்து பாதுகக்க வேண்டும். உயிரி பல்வகைமையானது ஒவ்வொரு உயிரியும் அது எவ்வளவு சிறிய உயிரியாக இருந்தாலும், சுற்றுச்சுழலின் ஆக்க சக்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக அதிக அளவிலான தாவர வகைகள் இருக்கும் பட்சத்தில் அது அதிக வகையிலான பயிர்கள் இருப்பதை உணர்த்தும். அதிகப்படியான உயிரின வகைகள் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குமான நிலைத்த, நீடித்த தன்மையை உறுதிப்படுத்தும்.
சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்த நீடித்த வாழ்க்கை:
பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் தனிப்பட்ட வளங்களை ஒரு தனி மனிதனின் அல்லது சமூகம் பயன்படுத்துவதை குறைக்க முயற்சிக்கும் ஒரு வாழ்க்கை முறையே நிலைத்த நீடித்த வாழ்க்கை முறையாகும். அதனை பயன்படுத்துபவர்களும், பயனாளிகளும் தங்களின் சுற்றுச்சூழல் அடிச்சுவடுகளை குறைக்க முயற்சிப்பது(கார்பன் அடிச்சுவடு உட்பட) தங்களது போக்குவரத்து முறைகள், ஆற்றல் பயன்பாடு, மற்றும் உணவு முறைகளை மாற்றிக்கொள்வதன் மூலம், பெரும்பாலான தங்களது சுற்றுச்சூழல் அடிச்சுவடுகளை குறைக்க முயற்சிக்கின்றனர். இதனை செயல்படுத்த விழைபவர்கள் வளங்குன்றா நிலைத்த தன்மையுடன், இயற்கையாகவே சம நிலையான மற்றும் இயற்கை சூழலியலுடன் மரியாதையான, ஒத்திசைவான உறவுடன், தங்களது வாழ்க்கையை நடத்துவதற்கான குறிக்கோள்களைக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை நடைமுறைகளும், வழிகாட்டுதல்களும் வளங்குன்றா வாழ்க்கையை மேம்படுத்தும் கோட்பாடுகளை நெருக்கமாகக் கொண்டிருக்கிறது. மேலும் நிலைத்த நீடித்த பொருளாதார வளர்ச்சியானது. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் பொருளாதாரத்தை மேம்படுத்தியது. இயல்பாக, நிலைத்த நீடித்த சமூகமானது காலவரையின்றி தொடரக்கூடியதே ஆகும். அதன் நுகர்வு அளவு என்பது சுற்றுப்புற, மன மற்றும் வள சமநிலையையே பிரதிபளிக்க வேண்டும். அது தனது குடிமக்களுக்கு சமத்துவம், சுதந்திரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்திட வேண்டும். எனவே, தனிப்பட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை தெளிவாக வரையறுக்கும் அளவீடு தரநிலைகளை வளர்ப்பது இன்றைய தேவையாகும். இதற்கான பொறுப்பானது எதிர்காலத் தலைமுறையிடம் உள்ளது. அவர்கள் சார்ந்துள்ள சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அவர்கள் சிந்திப்பதும் செயல்படுதலும் வேண்டும்.
ஆவு வடிவமைப்பு:
நாம் உயிர்வாழ வளங்குன்றா வாழ்வினைப் பெற அடிப்படை வளம் மற்றும் தேவைகளை அளிக்கும் சுற்றுச் சூழலின் அமைப்பையும் செயல்பாடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புக்களையும், அவற்றின் சேவைகளையும் மதிப்பீடு செய்ய விரைவான மற்றும் நீண்ட கால அனுபவ ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும். இதன்மூலம்தான் இன்றைய சந்ததியினரும், எதிர்கால சந்ததியினரும் சுற்றுச் சூழல் அமைப்புகளை சிறப்பாக நிர்வகித்திட முடியும். இதனை கருத்தில் கோண்டு கீழ் கண்ட கட்டமைப்பு உருவக்கப்பட்டுள்ளது.
படம்.1.5 முறையான சுற்றுச் சூழல் கட்டமைப்பு
சூழல் மண்டலங்களின் வகைகள்
பொதுவாக இரண்டு வகை சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன. 1. நிலச் சூழல் மண்டலம், 2. நீர்ச் சூழல் மண்டலம். நிலச் சூழல்மண்டலத்தினை, காடுகள், பாலைவனம், புல்வெளி, மலைகள் என துணைப் பிரிவுகளாக பிரிக்கலாம்.
அ) காடுகள்: மிகச் சிறிய குறுகிய நிலப் பகுதியில் அடர்ந்த, தாவரங்களும், விலங்கினங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு அடர்ந்த காடுகளில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், அது முழுமையான சூழல் செயல்பாடுகளை பாதித்துவிடும். காடுகளை கீழ்க்கண்டவாறு பிரிக்க இயலும்.
ஆ) வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்: வெவ்வேறு விதமான உயரங்களில், ஒவ்வொரு குறிப்பிட்ட விலங்கின் வாழிடமாக அமைந்துள்ள தாவரங்கள் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன.
இ) வெப்பமண்டல இலையுதிர்காடுகள்: தேந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட மரங்களுக்கிடையில், புதர்களுடன், குறுஞ்செடிகள் காணப்படுகின்றன. உலகின் வெகு சில பகுதியில் அமைந்துள்ள இக்காடுகளில் பல்வேறு தாவர விலங்குகள் காணப்படுகின்றன.
குளிர்கால பசுமை மாறாக்காடுகள்: மிகக்குறைந்த எண்ணிக்கை கொண்ட மரங்களுக்கிடையில் பாசி, பெரணி போன்ற தாவரங்கள் உள்ளன. மிகச்சிறிய, குறுகிய இலைகள், நீராவிப் போக்கினை குறைவாக செயபடுத்துமளவில் மரங்களில் உள்ளன.
ஈ) குளிர் இளையுதிர்:
காடுகள்: இவ்வகைக் காடுகள் ஈரமான குளிர் பகுதிகளில் தேவையான மழை பெறக்கூடிய வகையில் அமைந்துள்ளன. குளிர் காலத்தில் இவை இலைகளை உதிர்க்கின்றன.
உ) புல்வெளிகள்: வெப்பமண்டல பகுதி, குளிர்பிரதேச பகுதி ஆகிய இரண்டிலும் உலக முழுவதும் புல்வெளிகள் காணப்படுகின்றன. அதிகமான புல், மற்றும் குறைவான செடி, மரங்கள் குறிப்பாக “லெகுயூம்” தாவரங்களைக் கொண்டுள்ளதால் மேய்ச்சல் விலங்குகள் பூச்சிகள் உண்ணும் விலங்குகள், தாவர உண்ணிகள் காணப்படுகின்றன.
ஊ) மலைப்பகுதிகள்: வெவ்வேறு இடங்களில், ஆங்காங்கே பல்வேறு வித வாழிடங்கள், அதிக எண்ணிக்கையிலான விலங்குகள், தாவரங்களுடன் மலைகள் பெற்றுள்ளன. மிக உயரமான சுழல்களில், கடுமையான தட்பவெப்ப நிலையில், பைன்மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இங்குள்ள விலங்குகளில் உடலில் ரோமம் போர்த்தப்பட்டுள்ளன. குளிரிலிருந்து பாதுகாக்க அவை உதவுகின்றன. மலைகளின் கீழ்ப்பகுதிகள் கூம்பு வகை மரக்காடுகளை கொண்டுள்ளன.
எ) டைகா: ஆர்டிக் பகுதிகளுக்கு கீழே அமைந்த்துள்ள பசுமை மாறா கூம்பு இலை தாவரங்கள் கொண்டவை. மிகக்குறைந்த வெப்பம் (பூஜ்ய்த்திற்கு கீழே) அரை ஆண்டுகாலத்தில் உள்பகுதியாகவும், மீதமுள்ள காலத்தில், வலசை வரும் பறவைகள், பூச்சிகள் இக்காட்டிற்கு வருகின்றன.
ஏ) பாலைவனம்: 25 செ.மீ.க்கு குறைவாக ஆண்டு தோறும் மழை பெறும் பகுதிகள் பாலைவனமாகும். நமது புவியின் 17% பகுதிகளில் பாலைவனம் அமைந்துள்ளது. மிக அதிகமான வெப்பம், நீர்பற்றாக்குறை, தீவிர சூரிய ஒளி போன்ற காரணங்களால் தாவர விலங்குகள் இங்கு மிகக் குறைவாக உள்ளது. குற்றுச்செடிகள், புதர்கள், சில புல்வகைகள், மிக அரிதாக மரங்கள் ஆகியவையே இங்கு தாவரங்களாக உள்ளன. தாவரங்களின் தண்டு, இலைகள் போன்றவை நீரினை சேமிக்க ஏதுவாக தகவமைப்பு பெற்றுள்ளன. “காக்டை” என்ற கள்ளி தாவரங்கள் நீர் சேமிப்பிற்காக முட்களைக் கொண்டுள்ளன. பூச்சிகள், பறவைகள், ஊர்வன ஒட்டகங்கள் ஆகியன பாலைவனச்சூழலுக்கு ஏற்றபடி தகவமைப்புகள் பெற்றுள்ளன.
II. நீர்ச்சூழல் மண்டலங்கள்: நீரினை முழுமையாக கொண்டுள்ள பகுதியில் நீர்த் தாவரங்கள், விலங்குகள் கொண்ட இச்சூழலினை பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன.
(அ) கடல் சூழல் அமைப்பு: கடல் என்பது மிகப் பெரிய, அகன்ற சூழல் ஆகும். 71% பூமியின் பகுதியில் 97% நீரினைப் பெற்றுள்ளது. இங்குள்ள நீரில் அதிக அளவில் தாது உப்புக்கள், கனிமங்கள் காணப்படுகின்றன. இக்கடல் சூழலை,
பெருங்கடல் பகுதி: கண்டப் பகுதிகளில் தாழ்வாக அமைந்துள்ள தாழ் நிலைப் பகுதி.
ஆழ்கடல் பகுதி: மிக ஆழமான நீர்ப் பகுதி
அலையிடைப் பகுதி: இரு உயரமான அலைகளுக்கிடையில் உள்ள பகுதி.
கழிமுகங்கள், பவளப் பாறைகள், உப்பளங்கள், சேற்று நிலங்கள், உணவு ஆதாரங்களை உருவாக்கக் கூடிய வேதி பாக்டீரியாக்கள் அமைந்துள்ள நீர் வெப்பமுள்ள வழிகள்.
கடல் சூழலில் மீன்களைத் தவிற பழுப்புப் பாசி, பவளப் பாறைகள், செபலோபோட் மெல்லுடலிகள், முள்ளுடலிகள், டைனொ ஃப்ளாஜெல்லேட் மிதவை உயிரிகள் மற்றும் சுறாக்கள் வசிக்கின்றன.
(ஆ) நன்னீர் சூழல்: கடல் சூழலுக்கு மாறாக நன்னீர் சூழல் 0.8% பகுதியினை உலக அளவில் கொண்டுள்ளது. மொத்தத்தில் 0.09% னன்னீர் மட்டுமே இங்கிருந்து கிடைக்கிறது. மூன்று வெவ்வேறு அடிப்படை நன்னீர் சூழல் அமைப்புக்கள் கீழ் கண்டவாறு அமைந்துள்ளது.
நிலைத்த நன்னீர் சூழல்: மிக மெதுவாக நகரும் நீராதாரம், அல்லது நிலையாக அமைந்துள்ளவை. எ.கா. குளம், ஏரி, நீர்ச்சுனை
நிலையில்லாத நன்னீர் சூழல்: ஆறு, ஓடைகள் போன்றவை இதில் அடங்கும்.
ஈர நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள்: இங்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீரானது மண்ணில் மூழ்கி, கலந்து இருக்கும் பகுதியாகும். அது கடற்கரையாகவும், அலை வரும் பகுதியாகவும் இருக்கலாம். இச்சூழல்களில் ஊர்வன, நீர் நில வாழ்வன மற்றும் 41% உலக மீன் சிற்றினங்கள் காணப்படுகின்றன.
எவ்வாறு ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்வது:
நீடித்த நிலையான வாழ்க்கைக்கு, துணைத் தலைப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ள, சூழல் மண்டல செயல்பாடுகள் வாழ்க்கையுடன் தொடர்புள்ள நிலையில் சில சிறு ஆய்வுகளை மேற்கொள்ள இயலும். எனினும் அறிவியல் பூர்வ கோட்பாடுகளடிப்படையில் சூழல் செயல்பாடுகள் புரிந்துகொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும். சூழல் மண்டல பாதிப்புகள் எவ்வாறு நிலையான, நீடித்த வாழ்க்கையினை பாதிக்கின்றன என்பது தெளிவாக அதில் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான சில ஆலோசணைப் பகுதிகளாவன.
சூழல் மண்டல பகுதிகளை புரிந்து கொள்ளுதல்
மேம்பட்ட வேளாண்மையில் சூழல் பாதிப்புகள்,
உணவு பகிர்வும், போக்குவரத்தும்
உள்ளூர் பருவகால உணவுகளின் பாதிப்புகள், கரிம உணவு பயிரிடுதல், உணவு பதப்படுத்துதல், சேமித்தல், வீட்டிற்குள் இயந்திரங்கள், புதுப்பிக்கும் ஆற்றல் உருவாக்கம்
போன்றவற்றை குழந்தைகள் செயல்பாட்டாளர்களாக மாறி நீடித்த நிலையான வாழ்வினை அனுபவித்து உணருதல் நன்று. இதனால் “கார்பன் காலடித் தடம்” குறைக்கப்பட்டு, உணவு முறை, போக்குவரத்து ஆற்றல் நுகர்வு, உணவு போன்றவற்றில் ஏற்கத் தக்க மாற்றங்கள் உருவாகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக