இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், நவம்பர் 17, 2020

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2020

 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2020

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்பது குழந்தைகளுக்கான ,

அறிவியல் ஆய்வுக்கான செயல்பாடு 1993லிருந்து கடந்த 27 ஆண்டுகளாக

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்படுத்தி வருகிறது.

இச்செயல்பாடு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்

செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்பாட்டினை இந்திய அரசின்

அறிவியல் தொழில் நுட்பத்துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப

பரிமாற்றக் குழுமமும் இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின்

அறிவியல் தொழில் நுட்பக்கழகங்கள் / தன்னார்வ இயக்கங்கள் இதில்

பங்கேற்று ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. இந்தியாவின் மற்ற

மாநிலங் களில், அரசு சார்ந்த அமைப்புகளும், தமிழ்நாட்டிலும் மற்றும்

சில மாநிலங்களில் தன்னார்வல அமைப்பு களும் நடத்துகின்றன. அகில

இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் ஒரு அங்கமான, தமிழ்நாடு

அறிவியல் இயக்கம் தமிழ்நாட்டில் கடந்த 27 ஆண்டுகளாக, சிறப்புடன்

செய்து வருகிறது. இச்செயல்பாட்டின் மூலம் குழந்தைகள் அறிவியல்

முறைகளை பயன்படுத்தி தாங்கள் கற்றுக் கொண்ட, தெரிந்து

கொண்டவற்றை செய்து பார்த்து தீர்வுகளை, முடிவுகளை அறிக்கையாக

சமர்பிப்பர். இதில் 10-17 வயதுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.

பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டும்தான். பள்ளிக் குழந்தைகளும்,

பள்ளிசாராக் குழந்தைகளும், இரவுப் பள்ளியில் படிப்பவர்களும்,

படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளும், துளிர் இல்ல குழந்தைகளும்

இதில் பங்கேற்கலாம். மேலும் இச்செயல்பாட்டின் நோக்கமாக

குழந்தைகள் மத்தியில் குழுச் செயல்பாடு, புதிய கண்டுபிடிப்பு, கள

அளவில் செயல்பாடு, கள தகவல்களை கொண்டு சமூக பிரச்சனைகளை,

அன்றாட வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு அறிவியல் முறைகள் மூலம்

தீர்வு கண்டுபிடித்தல் ஆகும்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஒவ்வொரு இரண்டு

ஆண்டுகளுக்கு ஒருமுறை கருப்பொருள் கொடுக்கப்பட்டு, குழந்தை

களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த இரண்டு வருடத்திற்கான

(2020 – 2021 )  கருப்பொருளாக  நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல்

/ Focal Theme Science for Sustainable Living “  என்பதே.

பல்வேறு வல்லுநர்களின் பங்களிப்புடனும். பேராசிரியர்களின்

ஒத்துழைப்புடனும் இதற்கான செயல்பாட்டு கையேடு தயாராகி

தற்போது உங்கள் கைகளில் உள்ளது

இந்தியா முழுவதிலும் உள்ள குழந்தைகள் அறிவியல் தொழில்

நுட்பக் குழுமம் அறிவித்த மையப்பொருள் பற்றி சுமார் மூன்று மாத

காலம் குழுவாக ஆய்வு செய்ய வேண்டும். குழு உறுப்பினர்களாக 2 பேர்

மட்டுமே பங்கேற்கலாம். இக்குழு ஆய்வினை சுமார் 3 மாத காலம் ஒரு

வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் செய்ய வேண்டும். ஆய்வு

எப்போதும், உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகள்

உள்ளதாய் இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்குறியவர் அடுத்த

மாவட்டத் தகவல்களை எடுத்து ஆய்வு செய்தல் கூடாது. தலைப்பே

தன்னிலை விளக்கம் தருவதாகவும், ஆய்வு சோதனையாகவோ,

கணக்கெடுப்பு முறையாகவோ, மக்களின் பிரச்சனைகளை மையப்

படுத்தியோ இருக்கலாம். ஆனால், உயிர்ப் பொருள்கள், ஆபத்து

விளைவிக்கும் பொருள்கள் மற்றும் மனிதனின் உணவு / பானம்

போன்றவற்றில், ஆய்வுகள் செய்தல்கூடாது. இம் மாநாடு மாணவர்

களின் ஆர்வத்தைத் தூண்டி, சிந்தனையை வளர்த்து, அதற்கு அறிவியல்

கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை

குழந்தைகளுக்குத் தருகிறது. ஆய்வின் கருத்தாக இளநிலை வயதினர் (10-

13) 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும், மேனிலை வயதினர் (14-17), 3,500

வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கையை தயார் செய்யவேண்டும்.

ஆய்வுக்கான செலவு ரூ. 250 க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆய்வின்

போது தினந்தோறும் நாட்காட்டி ( Log Book ) எழுத வேண்டும். ஆய்வு

அறிக்கையை மாணவர்கள், மாவட்ட மாநாட்டில் சமர்ப்பிப்பார்கள்.

அதிலிருந்து ஆய்வு அறிக்கைகள் மாநில மாநாட்டிற்கு தெரிவு

செய்யப்படும். பின்னர் அவற்றிலிருந்து தேசிய மாநாட்டிற்கு குழந்தை

களின் அறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு  ஆண்டும் , #டிசம்பர்

மாதம் 27-31 தேதிகளில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத் தலைநகரில் நடைபெறும்.

இம்மாநாட்டில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பங்கேற்று

மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்குவார்.

எல்லா நிலைகளிலும், பங்கு பெறும் குழந்தைகளுக்கு குழந்தை

விஞ்ஞானி சான்றிதழும், பரிசும் தரப்படும். குழந்தைகள் அறிவியல்

மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் குழந்தைகளை, மதிப்பீட்டாளர்

கள் முன்பு நேர்காணல் செய்யப்படும். இங்கு குழந்தைகள், தங்கள்

ஆய்வறிக்கைக்கான பிரச்சனை மற்றும் தீர்வையும் சொல்லுவார்கள்.

ஒரு மாவட்டத்தில் சுமார் 200 ஆய்வறிக்கைகள் என்றால், ஒவ்வொரு

ஆண்டும் இந்த தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான

குழந்தைகளுக்கு இந்த அறிவுத் தேடல் நடைபெறுகிறது. இச்செயல்

பாட்டினை தமிழ் நாட்டில் பல ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள்,

ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள்,

பள்ளிகள், கல்லூரிகள் என பல லட்சக்கணக்கானோரிடம் சென்று அடைகிறது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறும் இடத்தில்

அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குழந்தைகள் சாதி, மதம், இனம்,

மொழி, கலாச்சாரம், பாலினம் கடந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் .

இங்குதான் உண்மையான தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும்

காணப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு தெற்காசிய நாடுகளான

நேபாளம், பூடான், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் மற்றும்

பிரேசில் என பல நாடுகள் பங்கேற்கின்றன: கடந்த 4 ஆண்டுகளாக சவுதி

அரேபியாவும் (UAE) பங்கேற்கிறது. உலகின் மற்ற மூன்றாம் உலக

நாடுகளும் நம்மைப் போலவே தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

நடத்த திட்டமிட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்

குழந்தைகள் பல அறிஞர்களுடன், விஞ்ஞானிகளுடன் தொடர்பு

கொண்டு தனக்கு ஏற்படும் கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் விடை

காண்பார்கள். இச்செயல்பாடு குழந்தைகளின் வாழ்நாளில் ஒரு மறக்க

முடியாத நிகழ்வாக இருக்கும். என்றும் இந்த நிகழ்வு அவர்களின்

நெஞ்சில் பயணிக்கும் இனிமையான நினைவாக வலம் வரும்.

#

(குறிப்பு: இவ்வருடம் கொரோனா தொற்று காரணமாக ஆய்வு செய்வதற்கான கால அளவு, மாவட்ட மற்றும்  மாநில  மாநாடுகளின் தேதிகளை மாவட்ட மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இடம் உறுதி செய்து கொள்ளுங்கள்)

நன்றி

 

P.ராஜாங்கம், 79042 22932 / 94426 67952   

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2020,  சேலம்.

                                                                                                          

Dr. D.திருநாவுக்கரசு - 9751456001  /  97893 21056

மாநில நிபுணர் குழு,   மாநில இணை முதன்மை ஆய்வாளர்,

 

திருமிகு P. வெங்கடேசன் -  94432 41690 - மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்,

 

திருமிகு.தேவிகா – 97888 58934 - மாவட்ட இணை கல்வி ஒருங்கிணைப்பாளர்,

 

திருமிகு.சத்தியமூர்த்தி  99764 67285 - மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்-1,

 

திருமிகு.கவிதா  88382 54375 / 80158 99224 - மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்-2,

 

சேலம் கல்வி மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள்:

 

திருமிகு.கலைச்செல்வன் - 96553 00204 & திருமிகு.மகாலட்சுமி - 94429 80145

சேலம் (நகர்ப்புறம் மற்றும் ஊரகம் இணைந்து) கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,

 

திருமிகு.சந்தோஷ் குமார் - 98439 15648 & திருமிகு.முருகன் - 98425 30789

சங்ககிரி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,

 

திருமிகு.நல்லதம்பி - 94425 64519 & திருமிகு.யுவராஜ் -  97918 21945

எடப்பாடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,

 

திருமிகு.செந்தில்- 8056617143 & திருமிகு.கோபிநாத்  -  8531094649

ஆத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக