அன்பார்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர்கள் - ஆசிரியர்கள் - பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
இன்று
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாரமங்கலம் கிளை சார்பாக அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று(01/06/2018) வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் தாரமங்கலம் பேருந்து நிலையம் நடைபெற்றது.💐💐💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
இந்நிகழ்விற்கு எங்கள் மரியாதைக்குரிய தலைமையாசிரியர்கள் திருமிகு.பழனிவேல் ஐயா அவர்களும் & திருமிகு.செந்தில்குமார் அவர்களும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அதைத்தொடர்ந்து அறிவியல் இயக்க உறுப்பினர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களிடமும் , கடைகளிலும் , கல்லூரி மாணவர்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐
அதற்கு முன்னதாகவே 800 துண்டு பிரசுரங்கள் தினத்தந்தி செய்திதாளில் இணைத்து விடியற் காலை 5 மணிக்கு செய்தித்தாள் வாங்கும் கடைகளுக்கும் , வீடுகளுக்கும் அனுப்பப்பட்டது.
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐💐💐
*இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்கள் திருமிகு.பழனிவேல்
திருமிகு.செந்தில்குமார்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் & ஆசிரியர் திருமிகு.சுந்தரலிங்கம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ரமேஷ்
வட்டாரச் செயலாளர் திருமிகு.சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி்னர்.
💐💐💐💐💐
அரசுப்பள்ளி நம் பள்ளி - அரசுப்பள்ளி மக்கள் பள்ளி
அரசுப்பள்ளியை பாதுகாப்போம் - கல்வி வியாபாரமயமாய் மாறுவதை தடுப்போம்
மாணவர் நலன் காப்போம் - சமூக மாற்றத்தை உருவாக்குவோம்
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
அன்பால் இணைவோம் ..!
அறிவியல் பரப்புவோம்..!
😊😊😊😊😊😊
சி.சந்தோஷ் குமார் / செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் / தாரமங்கலம் கிளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக