இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், மார்ச் 12, 2013

வால்மீன் பான்ஸ்டார்ஸ்

தற்போது வடகோளத்தில் C/2011 L4 என்ற வால்மீன் பிரவேசிக்க ஆரமித்துள்ளது. ஆனால் தொடர்ந்து அடிவானில் மேகமும் பனியும் காணபடுவதால்  நம்நாட்டிலிருந்து இதை இன்னும் பார்த்ததாக செய்தி ஏதும் வரவில்லை. இதை இன்றோ (12.03.2013 /13.03.2013) அல்லது நாளையோ காணும் வாய்ப்புள்ளது.

எங்கே எப்போது காண்பது?
சூரியன் மறையும்போது மாலை சுமார் 5.45 மணிக்கு வானில்சூரியன் இருக்கும் இடத்தை  குறித்துக்கொள்ளுங்கள். அதற்கு சற்று வடக்கே ( ஒரு சூரியன் விட்ட தூரத்தில் ) 6.45லிருந்து  - 7 மணிக்குள் உற்று நோக்கினால் வால்மீன் தெரியும். அந்திவெளிச்சத்தில் இன்னும் நன்கு காணவேண்டுமானால் ஒரு பைனாக்குலர் அவசியம். ( எச்சரிக்கை: உங்கள் கண்கள் பாதிப்படையாமல் இருக்க, சூரியன் மறைந்த பிறகே அப்பகுதியை பைனாக்குலர் கொண்டு பார்க்கவும்.)

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மேற்கு மாவட்டங்களில்  இதைக்காண்பது கடினம். மேலே கூறியவாறு உங்கள் பகுதியிலிருந்து 5.45 மணிக்கு சூரியனை பார்க்கமுடிந்தால் வால்மீனையும் உங்கள் பகுதியிலிருந்து காண இயலும்.

நாளை ( மார்ச் 13) மாலை, பிறை நிலவிற்கு சற்று கீழே தென்மேற்கில் இந்த வால்மீன் தெரியும். எனவே புதன் அன்று அதை வானில் கண்டுபிடிப்பது சற்று எளிது.

பார்பதற்கு வால்மீன் எப்படி இருக்கும்?
இதோ நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து எடுத்த புகைப்படம். தமிழ்நாட்டில் படத்தில் உள்ளவாறு இல்லாமல் இன்னும் சற்று அடிவானத்திற்கு பாதிதூரத்தின் அருகே தோன்றும்.

Inline image 1

மேற்குஅடிவான் மேகம், பனி போன்றவை இல்லாமல் வால்மீனை தெளிவாகக் காண்பதற்கு வாழ்த்துக்கள்!
அன்புடன்,
சே. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக