உலகம் இன்று அழிந்துவிடும் என்கிற மூடநம்பிக்கை –மக்களிடையே பீதி
உலகம் இன்று அழிந்துவிடும் என்கிற மூடநம்பிக்கை பொய்யாகியுள்ளது. எனினும் இது குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதி நிலவுவதால் அதனைப் போக்கும் வகையில் அறிவியல் இயக்கத்தினரும் விஞ்ஞானிகளும் வானியல் நிகழ்வுகளை தொலைநோக்கி வாயிலாக மக்களிடம் விவரித்தனர்.
மாயன் நாள்காட்டிபடி உலகம் இன்று அழிந்துவிடும் என்கிற பரபரப்பு கடந்த சில மாதங்களாக உலகமெங்கும் நிலவியது. ஆனால் அந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இந்த பூமி வழக்கம் போல் இன்றும் இயங்கத்தான் செய்கிறது. எனினும் ஆங்காங்கே பொதுமக்கள் சிலரிடம் இது குறித்த பீதி நிலவுகிறது. இதனைப் போக்கும் விதமாக சேலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், தனியார் நகைக்கடை ஒன்றின் ஒத்துழைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகளை பொதுமக்களை நேரிடையாகக் காணச் செய்து அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அறிவியல் இயக்கத்தினரும், விஞ்ஞானிகளும் விளக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக