தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்றாவது இளைஞர் அறிவியல் திருவிழா
2012 அக்டோபர் 6 மற்றும் 7ந் தேதிகளில் மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது.
2012 அக்டோபர் 6ந் தேதி காலை திருமிகு K P சுரேஷ்குமார் மற்றும் திருமிகு மனோஜ் அவர்கள் இளைஞர்களின் பதிவுகளை பதிவு செய்தனர்.
துவக்க விழா காலை 10.30 மணிக்கு மகேந்திரா பொறியியல்
கல்லூரி முதல்வரும் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முனைவர் இரா.
சாம்சன் ரவீந்தரன் தலமையில் தொடங்கியது. மாநிலச்
செயற்குழு உறுப்பினர் திருமிகு ச கிருஷ்ணசாமி, மதுரை காமராஜர்
பல்கலைக் கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் திருமிகு
என். மணி ஆகியோர் சிறப்புரையுடன், மகேந்திரா
பொறியியல் கல்லூரி இயக்குநர் – ஆராய்ச்சி துறை முனைவர் வீ அருள்மொழி
அவர்களின் நன்றியுரையுடன் துவக்க விழா முடிந்தது.
அறிவியல்
திருவிழா சிறப்புரை 1
மதியம் 12.00 மணிக்கு அறிவியல் எழுத்தாளர் திருமிகு ஏற்காடு
இளங்கோ அவர்கள் தலமையில் மாநிலத் துணைத் தலைவர் திருமிகு சோ மோகனா அவர்களின் “வானவியலும் சோதிடமும்” என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது.
ஆய்வறிக்கை
சமர்பித்தல்
ஆய்வுகளை மதிப்பீடு செய்யும் பணி திருமிகு கே.பி.
சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார். நடுவர்கள் துவக்க விழா மற்றும் சிறப்புரை
நடைபெறும் போது ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்தனர். பிறகு மதிய
உணவிற்கு பிறகு 4 அறைகளில் இளைஞர்கள் குழு தங்கள் ஆய்வறிக்கை
சமர்பித்தது. நடுவர்கள் மதிப்பீடு செய்து சிறந்த 9 குழுக்களை தேர்ந்தெடுத்தனர்.
நடுவர்களாக Dr பாலசுப்ரமணியம், திருமிகு Y பால் ராஜய்யா, திருமிகு R திரவியம், திருமிகு
பெலிக்ஸ் அடைகல்ராஜ், திருமிகு D திருநாவுக்கரசு, திருமிகு
பாபு குமார், திருமிகு பார்வதி பழனியப்பன் ஆகியோரும், மகேந்திரா
பொறியியல் கல்லூரியிலிருந்து Dr K M கோவிந்தராஜ் தலைமையில்
Dr B ஆனந்த், Dr M ஜெயேந்திரன், Dr சொக்கலிங்கம், திருமிகு D சித்ரா,
திருமிகு N ராதா, திருமிகு
B M பாலகிருஷ்ணன், திருமிகு C K
முருகேசன், Dr T மேனகா,
திருமிகு S சித்ரா, திருமிகு தனவிஸ்னு மூர்த்தி, திருமிகு A
R சசிகுமார், திருமிகு P கவிதா, திருமிகு S
காயத்ரி திருமிகு P மோகன் ஆகியோரும் மதிப்பீடு
செய்து 9 ஆய்வுகளை தேர்வு செய்தனர்.
11 மாவட்டங்களை சேர்ந்த 56 பதிவுகள், கலந்து கொண்டது 39 பதிவுகள்.
மதுரை மாவட்டத்திலிருந்து
அதிகபட்சமாக 25 பதிவுகள், கலந்து கொண்டது
14 பதிவுகள்.
மதுரை லேடி
டோக் கல்லூரி அதிகபட்சமாக 9பதிவுகள், கலந்து கொண்டது
6 பதிவுகள்.
மதுரை மாவட்டத்திலிருந்து அதிக பதிவுகள் வந்தது மற்றும் கலந்து கொண்டதற்கு காரணம்
முனைவர் தினகரன் அவர்கள். அவர்களுடைய முயற்சி மற்ற மாவட்டங்களிலும் இருந்திருந்தால்
மூன்றாவது இளைஞர் அறிவியல் திருவிழா 2012 இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
எண்
|
துறை
|
பதிவு எண்ணிக்கை
|
ஆய்வுக்கு வந்தது
|
ஆண்
|
பெண்
|
மொத்தம்
|
தேர்வு செய்யப்பட்ட ஆய்வு
|
1
|
பொறியியல்
|
17
|
11
|
35
|
7
|
42
|
4
|
2
|
அறிவியல்
|
15
|
10
|
7
|
22
|
29
|
2
|
3
|
சமூகம்
|
13
|
10
|
4
|
33
|
37
|
2
|
4
|
சுற்று சூழல்
|
11
|
8
|
12
|
14
|
26
|
1
|
மொத்தம்
|
56
|
39
|
58
|
76
|
134
|
9
|
அறிவியல்
திருவிழா சிறப்புரை 2
மாலை 6 மணிக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு
உதயன் அவர்கள் தலமையில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு
P சகஸ்ரநாமம் அவர்களின் “மனிதக்கதை” நழுவுப்படத்துடன் கூடிய சிறப்புரை நடைபெற்றது.
வான்நோக்குதல்
சிறப்புரை 2 முடிந்த பிறகு மாநிலத் துணைத் தலைவர் திருமிகு சோ மோகனா மற்றும் மாவட்டச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு டி ஜெயமுருகன் அவர்களின் வான்நோக்குதல் நிகழ்ச்சி தொலைநோக்கி
மற்றும் பைனாகுலர் மூலம் நடைபெற்றது. இரவு உணவு முடிந்த பிறகும்
இரவு 12.00 மணி வரையிலும், 07ந் தேதி காலை
04.30 முதல் 06.30 மணி வரையிலும் வான் நோக்கு நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்வில் மகேந்திரா பொறியியல் கல்லூரி விடுதி
மாணவர்கள், ஆய்வறிக்கை சமர்பித்த இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து
கொண்டதுடன், கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றனர்.
அறிவியல்
திருவிழா சிறப்புரை 3
2012 அக்டோபர் 7ந் தேதி காலை 10.00 மணிக்கு
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு டி ஜெயமுருகன் அவர்கள் தலைமையில் முனைவர்
த வி வெங்கடேஸ்வரன், முதன்மை அறிவியல் அலுவலர், மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை, புது டெல்லி அவர்களின்
“கடவுள் துகள்”
பற்றிய சிறப்புரை நடைபெற்றது.
பயிற்சி
முகாம்
இரண்டு பயிற்சி முகாம் இணையமர்வாக இரண்டு அறைகளில் நடைபெற்றது. முதல் பயிற்சி முகாமில் மாவட்டப் பொருளாளர் திருமிகு ஜி சுரேஷ் தலைமையில் குறும்பட
இயக்குநர் வி ஜி ஆன்டோ அவர்கள் போட்டோ பற்றிய ஒரு பயிற்சி முகாம் நடத்தினார்.
இரண்டாவது பயிற்சி முகாமில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு அய்யணார்
அவர்கள் தலைமையில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமிகு
இரா செல்வம் “நம்மை
சுற்றி இயற்கை” என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றவர்கள் தங்கள் சந்தேகங்களை கலந்துரையாடல்
மூலம் தீர்த்து கொண்டனர்.
நிறைவு
விழா
மதிய உணவிற்கு பிறகு மாலை 03.00 மணிக்கு நிறைவு விழா
நடைபெற்றது. மகேந்திரா கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு மா
க பாரத் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மகேந்திரா
கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமிகு மா க பாரத் குமார், மகேந்திரா
பொறியியல் கல்லூரி முதல்வரும் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முனைவர்
இரா. சாம்சன் ரவீந்தரன், மகேந்திரா பொறியியல்
கல்லூரி டைரக்டர் திருமிகு எஸ் இராஜமாணிக்கம், தமிழ்நாடு அறிவியல்
இயக்க மாநிலத் தலைவர் திருமிகு என். மணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பிறகு முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம்
அவர்களின் அறிவியல் ஆலோசகர் முனைவர் வை பொன்ராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
உடல்தான
நிகழ்ச்சி
அறிவியல்
எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோவும் அவர்களின் தந்தையார் P சண்முகம் அவர்களின் “உடல்தானம்” வழங்கும் நிகழ்ச்சி, அதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
“பாராட்டு சான்றிதழ்” வழங்கும் நிகழ்ச்சி
மற்றும் அறிவியல் எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்களின் 43 வது 44வது புத்தகங்களான “ ” வெளியீடு நிகழ்ச்சி ஆகியவை
முனைவர் வை பொன்ராஜ் அவர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக
மாவட்டச் செயலாளர் திருமிகு வீ ராமமூர்த்தி அவர்கள் நன்றியுரை வழங்க மூன்றாவது இளைஞர்
அறிவியல் திருவிழா 2012 இனிதாக நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில்
சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திருமிகு சசிகலா, திருமிகு பவளவள்ளி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்
திருமிகு இமயபாலன், திருமிகு செங்கோடன், திருமிகு செங்கோட்டுவேல், திருமிகு ராம்பாபு குடும்பத்துடன்,
திருமிகு நேதாஜி, திருமிகு கேசவன், திருமிகு ராஜேந்திரச் சோழன் மற்றும் திருமிகு குரு ஆறுமுகம் ஆகியோர் கலந்து
கொண்டு உதவிகள் செய்தனர்.
மாவட்டச்
செயற்குழு உறுப்பினர் திருமிகு அய்யணார், திருமிகு கலையரசன், திருமிகு
கார்த்திகேயன், திருமிகு தினேஷ்குமார் மற்றும் திருமிகு சாஹிரா
பேகம் ஆகியோர் இரண்டு நாட்களும் முழுமையாக இருந்து நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய
வேலகளை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ்நாடு
அறிவியல் இயக்கத்தின் சார்பில் திருமிகு P சகஸ்ரநாமம் அவர்கள் நிகழ்ச்சிகளை,
இந்நிகழ்விற்கான கல்லூரி ஒருங்கிணைப்பாளர் Dr ராஜராஜன் அவர்களுடன்
சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
நன்றி
இப்படிக்கு,
வெ. ராமமூர்த்தி,
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.சேலம் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியலுக்கான நிகழ்ச்சிகளை எனது அறிவுக்கு எட்டியவரையில் மிகச்சிறப்பாகச் செய்தும்,செய்வித்தும்,அறிவியல் பரப்புதலையும் மிகச்சிறப்பாகச் செய்தும் வருகிறதுங்க! நாங்கள் தங்களது செயல்பாடுகளைக் காப்பியடித்து செயல்படத்தூண்டுகிறதுங்க!தன்னலமற்ற! பொதுச்சேவைக்கு வணக்கங்களும்,பாராட்டுக்களும் பல!பல!! என வாழ்த்தும் PARAMES DRIVER // TAMIL NADU SCIENCE FORUM // THALAVADY - ERODE Dt.
பதிலளிநீக்கு