இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, செப்டம்பர் 14, 2012

“துளிர்” அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள் – 2012


துளிர் அறிவியல் விழிப்புணர்வுத்  திறனறிதல் போட்டிகள் 2012

அன்புடையீர் வணக்கம்,
பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் எண்ணற்ற பணிகள் ஆற்றி வரும் அறிவியல் இயக்கம் கடந்தாண்டுகளைப் போலவே மாணவர்களின் சிந்திக்கும் திறனையும், காரண காரிய அறிவியல் விழிப்புணர்வு குறித்த புரிதலையும் சோதிக்கும் வகையிலும் மேலும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கப்  பயிற்சி பெறும் வகையிலும் துளிர் திறனறிதல் போட்டியை இவ்வாண்டும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.
 
                    தேர்வு            : மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும்
    தேர்வு நாள் & நேரம் 17.11.2012  (சனிக்கிழமை) காலை 10மணி முதல் மதியம் 12 மணிவரை

வினாத்தாள் விபரம்
பொது அறிவியல், அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்கள், அன்றாட வாழ்வில் அறிவியல், அறிவியல் பயன்பாடு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாத இதழான  துளிரில் வெளிவந்த அறிவியல் செய்திகள் ஆகியவற்றிலிருந்து  100 கொள்குறி வகை வினாக்கள்  தமிழிலும் ஆங்கிலத்திலும் அமையும்,

இளநிலைப் பிரிவு :  6 முதல் 8ம் வகுப்பு வரை 
மேனிலைப் பிரிவு : 9 முதல் 12ம் வகுப்புவரை மேலும் I.T.I மற்றும் தொழில்நுட்ப
  பட்டயப்படிப்பு முதல் மற்றும்  இரண்டாமாண்டு மாணவர்கள்.
பதிவுக் கட்டணம்: 
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் ஒவ்வொருவரும் ரூ100 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு துளிர் அறிவியல் மாத இதழும், ரூ150 செலுத்தினால் ஜந்தர் மந்தர் ஆங்கில இருமாத இதழும் ஒரு வருடம் அனுப்பி வைக்கப்படும். வினாக்கள் 4 விடைகளிலிருந்து ஒரு விடையைத் தெரிவு செய்யும் வகையிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும், எனவே ஆங்கில வழி பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

(50க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்கும் பள்ளிகள் தேர்வு மையமாக செயல்படும்)
மாணவ மாணவியர் பரிசு பெறும் விபரம்: 
*         தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழும்,
*         மாநில அளவில் முதலிடம் பெறும் 10 மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பும், சிறப்புப் பரிசாக அறிவியல் களஞ்சியம் அல்லது கேடயம் வழங்கப்படும்
*         மாவட்ட அளவில் இளநிலை மற்றும் மேல்நிலையில் முதல் இரண்டு இடங்கள் பெறுவோர்க்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
  
பள்ளிகள் பெறும் பரிசுகள் விபரம்: 
100 பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மூன்று அறிவியல் குறுந்தகடு (CD) வழங்கப்படும், 
அதிக பதிவுகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மாநில அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு            : ரூ 5,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
இரண்டாம் பரிசு   : ரூ 3,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு     : ரூ 2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்

பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும், இக் கணக்கீட்டிற்கு துளிர், ஜந்தர் மந்தர் பதிவுகளும் எடுத்துக் கொள்ளப்படும்.

பதிவு செய்யும் முறை: 
தேர்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களது பெயர், வகுப்பு, பள்ளி / நிறுவனம் மற்றும் வீட்டு முகவரி (அஞ்சல் எண்ணுடன்) தொலைபேசி / அலைபேசி  எண்ணுடன் தாங்கள் செலுத்திய பதிவுக் கட்டணத் தொகை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு (கீழுள்ள அட்டவணையில் உள்ளபடி) தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு துளிர் (THULIR) / ஜந்தர் மந்தர் (JANTAR MANTAR) என்ற பெயரில் வரைவோலை (DD) எடுத்து 25.10.2012க்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டுகிறோம், அல்லது ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் பெற்று பிரதி வியாழன் மாலை 7மணி முதல் 9மணி வரை மாவட்ட அலுவலகத்திலோ மற்ற நாட்களில் தங்கள் ஒன்றியத்திலுள்ள அறிவியல் இயக்க கிளை செயலாளரிடமோ கொடுக்கலாம்

No
Name
Std & Class
School  / Institute Address with PINCODE,  Phone  &  Email id
Residential Address with PINCODE
Mobile / Phone No & Email id
THULIR -Tamil (Rs 100)  / JANTAR MANTAR - English (Rs150)  & Junior  / Senior
Mention Where to Receive Magazine, School  ( or ) Home
1
ABCD
7 th C
Abc.. 636 009…
D/S/C/O xxx…
989….
THULIR,Tamil, Junior
To School
2
Abc..
11 - A
Abc…636 603
D/S/C/O xxx…
989….
JANTAR MANTAR, English, Senior
To Home
வாய்ப்புள்ள பள்ளிகள் கட்டாயம் போட்டியில் பங்குப்பெறும் மாணவர்களின் மேற்கண்ட விபரங்களை தட்டச்சு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு அனுப்பவும்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகவரி: 
செங்கோட்டுவேல்.K. 
9-6/15, அகிலாண்டம்மன் தெரு,
ஜலகண்டாபுரம் அஞ்சல்
சேலம் - 636 501.                                                     இவண்
அலைபேசி :    95003 06285                                    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
Email:  senguttuvan84@gmail.com                                                                                               
            tnsfsalem2009@gmail.com                                                               செங்கோட்டுவேல்.K.
                                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக