இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, ஆகஸ்ட் 11, 2012

Saturday, August 11, 2012 10:33 AM IST

Dharmapuri

உலக புகைப்பட தினம்: மாணவ, மாணவிகளுக்கு போட்டி

First Published : 08 Aug 2012 01:39:38 PM IST


 சேலம், ஆக. 7: உலக புகைப்பட தினத்தையொட்டி (ஆக.19) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு புகைப்படப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 இதுகுறித்து சேலம் மாவட்ட அறிவியல் இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புகைப்படங்களின் சிறப்புகள், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புகைப்படப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 அதன்படி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இயற்கைக் காட்சி என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சமூகப் பிரச்னை என்ற தலைப்பிலும், பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற தலைப்பிலும் புகைப்படப் போட்டி நடத்தப்பட உள்ளது.
 போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் அண்மையில் எடுக்கப்பட்டதாகவும், எடுக்கப்பட்ட நாள், நேரம், இடம், சொந்தப் படைப்பு என்பதற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழி, போட்டியாளரின் சுய விவரக் குறிப்புகள் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
 புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட புகைப்படக் கருவியின் பெயர், சிறப்புகள், மாணவர் என்பதற்காக பள்ளி, கல்லூரி முதல்வரின் கடிதம் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
 போட்டிக்கான புகைப்படங்கள் அனைத்தும், ஆர்.ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், புகைப்படத் தினப் போட்டிகள், கன்னந்தேரி, சங்ககிரி 637 102 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
 வெற்றி பெறுபவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
 மேலும், தேர்வு செய்யப்படும் புகைப்படங்கள் மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் அக்டோபர் 6, 7-ம் தேதிகளில் நடைபெறும் மாநில இளைஞர் அறிவியல் திரு விழா, அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
 புகைப்படப் போட்டிகள் குறித்த மேலும் விவரங்களுக்கு 99651 61995 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவியல் இயக்க செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Dharmapuri&artid=641348&SectionID=225&MainSectionID=225&SEO=&Title

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக