இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, ஜனவரி 13, 2012


புகையில்லா போகி கொண்டாடுவோம்.
Ø  பழையன கழிதலும் புதியன புகுதலும், வழிவழி வந்தவையாம் என்ற பொருளுக்கேற்ப நாமும் போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்.
Ø  பழயன கழிதல் என்பது மாற்றம் என்பதுதான், அதாவது அவற்றின் பயன்பாட்டையோ தோற்றத்தையோ மாற்றி அமைப்பதுதான். அவற்றை எரிப்பதென்பாகாது.
Ø  ஆனால் தற்போது நாமும் கூட பிளாஸ்டிக், டயர், ரப்பர் என எரித்து  கிராமிய மணத்தை  மூழ்கடித்து நகரத்துக்கு ஈடாக பூமி சூடாக காரணமாகின்றோம்.
Ø  நீண்ட நேரம் எரியும் இவைகளினால் நச்சு வாயுக்கள் வெளிப்பட்டு சுற்று சூழல் கெட்டு பலவித இன்னல்களாக அதாவது சுனாமி, பூகம்பம், தற்போது ஏற்பட்ட தானே புயல் போன்றவை  ஏற்படுகிறது.
Ø  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள புள்ளிவிவரத்தில் தற்போது புகையால் ஆண்டுதோறும் 3.3 பில்லியன் மக்க்கள் இறந்து வருகின்றனர்.  நம் நாட்டில் இப் புகையால் 12,000 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறக்கின்றனர், 15,000 பேர் இதய நோயால் இறக்கின்றனர், 6000 பேர் ஆஸ்த்துமா, 8,900 பேர் மூச்சு சுவாசம், 3800 பேர் கருவிலேயே இறப்பு என தொடரும் துயரத்திற்கு நாம் காரணமாகலாமா?
Ø  வாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்சைடு,தொழிற்
சாலைகள் வெளியிடும் சல்ஃபர் டைஆக்சைடு, நவின விவசாயத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களினால் ஏற்படும் அம்மோனியா, அழகு சாதனப்பொருகளில் உள்ள குளோரொ ஃப்புளோரோ கார்பன்  போன்றவை நம்மை காக்கும் ஓசோன் படலத்தை சேதமாக்கும் போது இவைகளுக்கு ஈடாக நாமும் குப்பைகளை எரித்து பூமியை சூடாக்குவதுடன் நோய்களுக்கு ஆளாக வேண்டுமா?
Ø எரித்தல் என்பன வற்றிற்கு பதிலாக நாம் புதைத்தல் என்பதை நவீன அறிவியல் உலகத்தில் கடைபிடிப்போம், ஒருவருக்கு பல செருப்புகள் என்பவற்றிற்கு பதிலாக ஒரு செருப்பு என பயன்பாட்டை குறைத்தல், கிழிந்த பெட்ஷீட்டை டவலாக பயன்படுத்துதல் என்ற மறுபயன்பாடு, பிளாஸ்டிக் பொம்மை போன்றவற்றை சேகரித்து வைத்து கடைகார்ர்களிடம் கொடுத்து மறுசுழற்சி ஏற்படுத்துதல், மட்கக்கூடிய குப்பைகளை மட்க வைத்து இயற்கை உரமாக்கள் என்ற திரும்பப்பெறல் முறைகளை பயன்படுத்துவோம்.      (Reduce, Reuse, Recyle, Recover )
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்வள்ளளார்

எல்லா உயிர்களும் என்புற்று இருப்பதே யல்லாமல்
வேறொன்றும்  வேண்டேன் பராபரமே -  தாயுமானவர்   

 போன்ற ஆன்றோர்களின் கருத்துக்களுக்கேற்ப இன்றும் நாம் பழைய கருத்துக்களை நினைவு கூர்ந்து

இந்த உலகம் இனியது, எங்கள் வாழ்வும் இனியது
எல்லோருக்கும் நல்ல நீரும் நல்ல காற்றும் உரியது    

என்ற அறிவியல் பாடலுக்கேற்ப  சுற்று சூழலை பாதிக்கும் புகையைத் தவிர்த்து புகையில்லா போகி கொண்டாடுவோம்.

   
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்:  
நன்றி :  
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம்
Munusamy G munustnsf@gmail.com



_________________________
I added cool smileys to this message... if you don't see them go to: http://s.exps.me

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக