இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், நவம்பர் 14, 2011

அக்டோபர் மாத வேலை அறிக்கை


1.அமைப்பு
              வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற வேலைகள் மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது . மாவட்ட அலுவலகம் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருமிகு நமசிவாயம் அவர்கள் பார்த்து கொள்கிறார்.
                  
2. அறிவியல் கல்வி பிரச்சாரம்     
IYC
           IYC யின் நிகழ்ச்சியாக விஞ்ஞான் பிரச்சார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சேர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 09,10 & 11 நவம்பரில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு சேலம் மாவட்டத்தின் சார்பாக திருமிகு டோமினிக், திருமிகு ராஜேந்திரசோழன், திருமிகு கணபதி ராணி மற்றும் திருமிகு சகிராபேகம் ஆசிரியர்களுக்கு அனுமதி கடிதம் வந்துள்ளது.
பயிற்சிமுகாம்
      ஒரு நாள் எளிய அறிவியல் மற்றும் கணித பயிற்சி முகாம் 09/10/2011 அன்று அரசு கலைக் கல்லூரியில் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த திருமிகு நிறைமதி  அவர்கள் வாழ்த்துரையுடன் துவங்கி நடைபெற்றது. மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார் கருத்தாளராக பயிற்சி கொடுத்தார். ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தானாரி, செயலாளர் திருமிகு ஸ்ரீனிவாசன், திருமிகு மணவழகன் ஆகியோருடன் மொத்தம் 20 பேர் கலந்து  கொண்டனர்.
அறிவியல் நிகழ்ச்சி
       13/10/2011 அன்று அரசு கலைக் கல்லூரியில் DRDO விஞ்ஞானி ராஜ்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் திருமிகு ஜெயமுருகன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சுப்ரமணி, மேட்டூர் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
துளிர் வினாடி வினா                                                                                          
      மாவட்ட துளிர் வினாடி வினா 13/10/11 அன்று உருக்காலை வித்யாமந்திர் பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P.சுரேஷ்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
                18 பள்ளிகள் கலந்து கொண்டது. திருமிகு திரவியம், மோகன் நகர் கிளை தலைவர் திருமிகு சர்மா, திருமிகு டோமினிக், திருமிகு ஆண்டனி ஜோதி நம்பி, முன்னாள் மாவட்ட செயலாளார் திருமிகு ஜெயமுருகன் ஆகியோர் க்விஸ் மாஸ்டர்களாக செயல்பட்டனர். 
      வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P. சகஸ்ரநாமம், ஸ்ரீவித்யாமந்திர் மேனிலைப் பள்ளி முதல்வர் Dr. கண்ணபிரான் மற்றும் உதவி முதல்வர் திருமிகு நாவலி அவர்களும் பரிசு வழங்கினார்கள்.  
      நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் மோகன் நகர் கிளைத் தலைவர் திருமிகு சர்மா, வேலுச்சாமி, உறுப்பினர்கள் திருமிகு பாலாஜி, திருமிகு அண்ணாதுரை, திருமிகு பார்த்திபன் மற்றும் திருமிகு மனோஜ்குமார் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
      இந்நிகழ்ச்சியில் புத்தக விற்பனை ரூ710, உறுப்பினர் 2, துளிர் சந்தா 4.             
      துளிர் வினாடி வினா நடைபெறும்போது ஆசிர்யர் மற்றும் பெற்றோர்களுக்கு தனியாக நிகழ்ச்சி நடத்த வாராந்திர கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.


பிரிவு



இளையோர்
முதியோர்
மூத்த முதியோர்

தமிழ்
முதலாமிடம்  
ஜெயராகினி,
சேலம்.  
நிர்மலா மேனிலைப் பள்ளி, கொளத்தூர்.
சிஎஸ்ஐ,கோட்டை, சேலம்.
தமிழ்
இராண்டாமிடம்
செயின்பால்ஸ் மேனிலைப் பள்ளி
ஜெயராகினி,
சேலம்.  
ஜெயராகினி,
சேலம்.  
ஆங்கிலம்
முதலாமிடம்  
ஸ்ரீவித்யா மந்திர் மேனிலைப் பள்ளி, சேலம் உருக்காலை
ஸ்ரீவித்யா மந்திர் மேனிலைப் பள்ளி, சேலம் உருக்காலை
ஹோலி ஏஞ்சல்ஸ் மேனிலைப்  பள்ளி சேலம்
ஆங்கிலம்
இராண்டாமிடம்
குலூனி மேனிலைப் பள்ளி, சேலம்
க்ளேசி ப்ருக் பள்ளி,
சேலம்.           
குலூனி மேனிலைப் பள்ளி, சேலம்
   
       மாநில துளிர் வினாடி வினா போட்டிக்கு மேற்கண்ட 8 பள்ளிகளைச் சேர்ந்த 36 குழந்தைகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சாந்தஷீலா கலந்து கொண்டனர்.
       மாநில போட்டியில் குலூனி மேனிலை பள்ளி மாணவர்கள் மூத்த முதியோர் பிரிவில் முதல் இடமும், ஸ்ரீவித்யா மந்திர் மேனிலைப் பள்ளி, சேலம் உருக்காலை இளையோர் பிரிவில் இராண்டாம் இடமும் பெற்றனர்.
                                
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
       மாவட்ட மாநாட்டிற்கு தேவைபடும் நிதிக்கு நிதிவசூல் செய்யப்பட்டது. கலந்து கொண்டவர்கள் திருமிகு சகஸ்ரநாமம், திருமிகு ராமமூர்த்தி மற்றும் திருமிகு G.சுரேஷ்.           
       15/10/2011 அன்று திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. திருமிகு T.அந்தோணி ஜோதி நம்பி, திருமிகு S.ராம்பாபு, திருமிகு.K.செங்கோட்டுவேல் மற்றும் திருமிகு G. சுரேஷ் கலந்து கொண்டனர். அதில் மாவட்ட மாநாட்டில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி திட்டமிடப்பட்டது.
       மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை திருமிகு கார்த்திக் பெரியார் பல்கலைகழகத்தில் கல்லூரி பேராசிரியர்களிடம் கொடுத்து மதிப்பீடு செய்து வாங்கி வந்தார்.
       அழைப்பிதழ்கள் திருமிகு ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு அருண்குமார், திருமிகு மௌலீதரன்  மற்றும் திருமிகு கார்த்திக் ஆகியோரால் கொடுக்கபட்டது.
       22/10/2011 அன்று நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு சென்று முன்னேற்பாடுகளை பார்த்து, வேண்டிய வசதிகளை கல்லூரி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து திருமிகு K.செங்கோட்டுவேல், திருமிகு K.சந்திரசேகர், திருமிகு அருண்குமார், திருமிகு மௌலீதரன்  மற்றும் திருமிகு கார்த்திக் ஆகியோர் செய்தனர்.
            கடந்த 23-10-2011 அன்று தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட அளவிலான மாநாடு காக்கப்பாளையம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
            காலை நடைபெற்ற துவக்க விழாவில் அறிவியல் எழுத்தாளர் திருமிகு.ஏற்காடு இளங்கோ, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தலைமையில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில செயலாக்கக் குழு உறுப்பினரும், மாவட்டத் துணைத் தலைவருமான திருமிகு K.P. சுரேஷ்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்தது. மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.சந்திரசேகர் வரவேற்றுப் பேசினார் மாநாட்டைப் பற்றி மாவட்டப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.அந்தோனி ஜோதி நம்பி உரையாற்றினார், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரித் தலைவர் திருமிகு.T.மாரப்பன், கல்லூரி முதல்வர் முனைவர் P.S.S.சீனிவாசன், கல்லூரி துணை முதலவர்  ஆகியோர் உரையாற்றினர்கள். மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.N.கோபால் நன்றியுரையாற்றினார்.
          தொடர்ந்து இணை நிகழ்வுகளாக மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கல்வியும் குழந்தைகளும் எனும் தலைப்பில் மாவட்டக் கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. R.சசிகலா அவர்கள் கருத்துரையாற்ற, மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.J.பாலசரவணன் ஒருங்கிணைத்தார். மக்களுக்கான மருத்துவம் எனும் தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.S.ராம்பாபு அவர்கள் கலந்துரையாட மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.N.கோபால் ஒருங்கிணைத்தார்.  மதியம் மாநில செயற்குழு உறுப்பினரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மண்டல  ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.S.சேதுராமன்  அவர்களின் ந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை நிகழ்த்தினார்.  நிகழ்வை மாவட்டத் துணைத் தலைவர் திருமிகு.R.பவளவல்லி ஒருங்கிணைத்தார்.
           மாலை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியை மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம் தலைமையேற்று நடத்தினார். கல்லூரித் தலைவர் திருமிகு.T.மாரப்பன், கல்லூரி முதல்வர் முனைவர் P.S.S.சீனிவாசன் மாணவர்களை வாழ்த்திப் பேசினார்கள். தொடர்ந்து சேலம் மாவட்டப் பத்திரிகையாளர்கள் மன்ற மாவட்ட தலைவர் திருமிகு. வை.கதிரவன் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் மரக்கன்றுகளை வளர்க்கும், பராமரிக்கும் புதிய முறைகளை ஆத்தூர் கிளை செயலாளர் திருமிகு.P.ஸ்ரீநிவாசன் விளக்கினார்.  தேசிய அளவிலான மாநாட்டில் பங்கேற்ற இளம் விஞ்ஞானி கணேஷ் தன் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ் முடிவுகளை அறிவித்தார். தொடர்ந்து ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்கள், பள்ளிகள், வழிகாட்டி ஆசிரியர்கள், நடுவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திருமிகு.K.செங்கோட்டுவேல் நன்றி உரையாற்றினார்.
              கல்லூரியின் சார்பில் பல்வேறு வகைகளில் திருமிகு.ஞானவேல் மற்றும் நண்பர்கள் உதவினார். அறிவியல் புத்தக கண்காட்சியில் திருமிகு.S.நமசிவாயம் அவர்கள் சிறப்புற செயல்பட்டு புத்தக விற்பனை மற்றும் உறுப்பினர், துளிர், ஜந்தர் மந்தர் சாந்த சேகரித்தார். ஆய்வு அறிக்கைகளை தொகுத்தல், பதிவேற்றுதல், பத்திரிக்கை செய்தி ஆகிய வேலைகளையும் மற்றும் மாநாடு நடைபெற்ற நாள் காலை முதல் மாலைவரை முழுவதும் வேலைகளில் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்  திருமிகு.S.அய்யனார், திருமிகு.J.கார்த்திக், திருமிகு.மௌலிதரன், திருமிகு.அருண்குமார், திருமிகு.மூர்த்தி மற்றும் நண்பர்கள் திருமிகு M கலையரசன் திருமிகு D தனசேகர், திருமிகு கேசவன் ஆகியோர் சிறப்புடன் செயல்பட்டனர். 
ந் நிகழ்வின் மூலம் சேலம் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து 26 பள்ளிகளை [அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 12 (இதில் மேல்நிலைப்பள்ளி 2, உயர்நிலைப்பள்ளி 2, நடுநிலைப்பள்ளி 8), மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 8, ஆங்கிலோ இந்தியன் பள்ளி 1, முறைசாரப் பள்ளிகள் 5 (கஸ்துரிபா காந்தி பாலிக வித்யாலாயா உண்டு உறைவிடப் பள்ளி 3,  உண்டு உறைவிடப்  பள்ளி சிறப்பு பயிற்சிமுகாம் 2)] சார்ந்த 143 பெண் குழந்தைகளும் 140 ஆண் குழந்தைகளும்  மொத்தம் 283 மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.  இவர்களில் முறையே 153 பேர் கிராமப்புறங்களில் இருந்தும் 120 பேர் நகர்ப்புறங்களில் இருந்தும் (10 முதல்13 வயதுடையோர் 180 பேர், 14 முதல்17 வயதுடையோர் 103 பேர்) கலந்துக்கொண்டனர்.
 மாநாட்டின் சிறப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் இடைநின்ற குழந்தைகள் பயிலும் முறைசாராக்  கல்வி பயிலகங்களான  கஸ்துரிபா காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி (KGBV) மற்றும்  உண்டு உறைவிடப் பள்ளி சிறப்பு பயிற்சி முகாம்களை (RSTC) சார்ந்த ஏழு குழுவினர் (35 குழந்தைகள்) விஞ்ஞானிகள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்து பயனடைந்தனர்.  
மற்றும் இவர்கள் அனைவருக்கும் பள்ளியில் கல்வி கற்பித்தலையும் தாண்டி  தன்னார்வத்துடன் குழந்தைகளுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள வழிகாட்டிய ஆசிரியர்கள் 44 பேர் கலந்துக்கொண்டனர்.
மேலும் பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை ஆராய்ச்சி படிப்பு பயிலும்  மாணவர்களும், தமிழ்நாடு அரசின் மண்பரிசோதனை மைய வல்லுனரும், ஓய்வுப்பெற்ற தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர்களும், சேலம் உருக்காலை தரக்கட்டுப்பாட்டு  அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை உதவி பொறியாளரும்  என பலரும் நடுவர்களாக  செயல்பட்டு உதவிபுரிந்தனர்

சேலம் விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த K.தீட்சிதா குழுவினர் தமிழ் முதுநிலைப்  பிரிவிலும்,  தாரமங்கலம் லட்சிமியாயூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சார்ந்த M.செல்வராஜ் குழுவினர்,  ஆத்தூர் திரு சின்னசாமி ஐய்யா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியை சார்ந்த D.விமலேஸ் குழுவினர் மற்றும் ஏற்காடு புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியை சார்ந்த V.கமலேஷ் குழுவினர் தமிழ் இளநிலைப் பிரிவிலும், சேலம் குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த R.ரேஷ்மி குழுவினர், சேலம் உருக்காலை ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த J.ராகுல் குழுவினர் ஆங்கிலம்  முதுநிலைப் பிரிவிலும், மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த T.பவன் கல்யான்  குழுவினர்  ஆங்கிலம் இளநிலைப் பிரிவிலும்  நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு மாநில மாநாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 
     மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியில் நவம்பர் மாதம்  24 வியாழன் 25 வெள்ளி  மற்றும் 26 சனி ஆகிய தேதிகளிலும், தேசிய அளவிலான மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டிசம்பர்  27-31 தேதிகளில் நடைபெற உள்ளது.
3.கல்வி
      மாநில கல்வி உபக்குழு கூட்டம் 09/10/2011 அன்று திருப்பத்தூரில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு பாலசரவணன் அவர்கள் கலந்து கொண்டார். அதில் 6,7,8 வகுப்புகளின் சமூக அறிவியல் பாடத்தை மறுஆய்வை சேலம் மாவட்டம் செய்வது.
மாலைநேர வகுப்புகள்
      மழை காரணமாக இடையில் தடைபட்டுள்ளது.

4.அறிவியல் வெளியீடு
மாநில அறிவியல் வெளியீடு உபகுழு கூட்டம் திருச்சி உறையூரில் 20/10/2011 அன்று
நடைபெற்றது. அதில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம் கலந்து கொண்டார்.
30 அறிவுதென்றல் வாங்கப்பட்டது.
துளிர் 13 ஆண்டு சந்தா, 2 ஜந்தர் மந்தா ஆண்டு சந்தா மற்றும் 54 உறுப்பினர் ஆண்டு சந்தா
அனுப்பப்பட்டது.
            45 விழுது சந்தா (இதில் 20 தாரமங்கலம் கிளை) அனுப்ப்பபட்டது.
      பாரதி புத்தகலாயத்தில் இருந்து ரூ 8200க்கு புத்தகங்கள் வாஙகப்பட்டது.
மாநில மாநாட்டில் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால் ஆர்டர் செய்யபட்ட துணிப்பை மற்றும் பாரதி புத்தகலாயம் புத்தகம் இன்னும் வரவில்லை.
மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் மற்றும் தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு. சந்தோஷ், ரமேஷ், கார்த்திக், ஸ்ரீனிவாசகர் மற்றும் ராஜேந்திரசோழன்  ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 220 துளிர் விற்பனை செய்கின்றனர்.

புத்தக விற்பனை
அரசு ஊழியர்கள் சங்க மாநாட்டில் ரூ 405, மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ரூ 2830 மாவட்ட துளிர் வினாடி வினா நிகழ்ச்சியில் ரூ710 இக்கு புத்தக விற்ப்பனை நடைபெற்றது,
5.சமம்
      03/10/2011 அன்று பெண்களும் வேதியியலும் எனும் சர்வதேச மகளிர் தின கட்டுரைப் போட்டியில்  மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற கைலாஷ் கல்லூரி மாணவி திருமிகு P நிரோஷா அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் கல்லூரி முதல்வர் திருமிகு ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட சர்வதேச மகளிர் தினப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான திருமிகு செங்கோட்டுவேல் கலந்து கொண்டனர்.
6.வளர்ச்சி

7.இதர
குடும்ப சந்திப்பு விழா
       06/10/2011 அன்று மாலை 4.30 மணிக்கு சேலம் உருக்காலை வளாகத்தில் உள்ள நேரு பூங்காவில் அறிவியல் இயக்க நிர்வாககுழு உறுப்பினர்களின் குடுமப சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் திருமிகு N.மணி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P. சகஸ்ரநாமம், மாவட்டச் செயலாளர் திருமிகு V. ராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ், மாவட்டத் துணைத்தலைவர்கள் திருமிகு K.P. சுரேஷ்குமார், திருமிகு R. பவளவள்ளி, திருமிகு K. சந்திரசேகர்,  திருமிகு V. சீனிவாசன்,  மாவட்ட இணைச் செயலாளர்கள் திருமிகு D. திருநாவுக்கரசு, திருமிகு N. கோபால்திருமிகு M. கற்பகம் கருத்தாளர் இணைய ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு T.அந்தோணி ஜோதி நம்பி, திருமிகு R. சசிகலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு கார்த்திக் அம்மாப்பேட்டை, திருமிகு அய்யணார்,  திருமிகு மீனாட்சி சுந்திரம் (மோகன்நகர் கிளைச் செயலாளர்), திருமிகு பத்மனாபன் (மோகன் நகர் கிளைப் பொருளாளர்), மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமிகு சர்மா (மோகன்நகர் கிளைத்தலைவர்), அம்மாப்பேட்டை திருமிகு அருண்குமார், திருமிகு மௌலீதரன், திருமிகு கண்ணன் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்ட குடும்ப சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 38 பேர் கலந்து கொண்டனர்.
        இந்நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை மோகன் நகர் கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம், பொருளாளர் திருமிகு பத்மனாபன், தலைவர் திருமிகு சர்மா உதவியுடன் மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார் செய்தார். இரவு சிற்றுண்டி மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால் திருமிகு K.P. சுரேஷ்குமார் வீட்டில் ஏற்பாடு செய்யபட்டது.   


நவம்பர் மாதம் செய்ய திட்டமிட்ட வேலைகள்
       இந்த வருடமும் தேசிய புத்தக தினத்தை (14/11/2011) முன்னிட்டு மாதம் முழுவதும் புத்தக விற்பனை நடத்துவது. பொறுப்பு திருமிகு N. கோபால்.
              துளிர் திறனறிதல் தேர்வு 26/11/2011 அன்று நடைபெற உள்ளது. பதிவுக்கு 15/11/2011 இறுதி நாள்.  மாவட்ட இலக்கு 3000. ஆகையால் தங்கள் கிளைகளில் பதிவுகளை அதிகம் பதிவு செய்யும்படிக் கேட்டு கொள்கிறோம்.
       அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் நடத்துவது. திருமிகு பாலசரவணன், திருமிகு லால், திருமிகு சசிகலா ஆகியோர் ஒருங்கிணைப்பில் சேலம் நகரக் கிளை உதவியுடன் நடத்துவது. ஆளுக்கொருக்கிணறுஎன்ற புத்தகம் வாசிக்க எடுத்து கொள்வது.
      அக்டோபர் மாதம் திட்டமிடப்பட்டு செய்யாமல் உள்ள கீழ்கண்ட வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்துவது.
       உள்ளாட்சி மன்ற தேர்தல் மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டின் காரணமாக அக்டோபர் மாதம் திட்டமிட்டு செய்ய முடியாமல் போன கீழ்கண்ட வேலைகளை அந்தந்த குழு பொறுப்பாளர்கள் ஆவண செய்யும்படிக் கேட்டுகொள்ளபடுகிற்து.
       உபகுழுக்கள் மற்றும் தாலுக்கா குழுக்கள் கூட்டம் நடத்துவது.   
       பெரியார் பல்கலை கழகத்தில் கிளை மற்றும் துளிர் இல்லம் துவக்குவது. பொறுப்பு திருமிகு P.சகஸ்ரநாமம்.
       மரக்கன்று நடுவது. பொறுப்பு திருமிகு K.P. சுரேஷ்குமார்.
       மகேந்திரா கல்லூரி நிகழ்ச்சி. பொறுப்பு திருமிகு K.P. சுரேஷ்குமார்.
       ஜேஸிஸ் உடன் விஜயகுமார் உடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துவது. பொறுப்பு திருமிகு K.P. சுரேஷ்குமார்.
       மாவட்ட அலுவலகத்தின் பெயர் பலகை இல்லை. பெயர் பலகையை மேட்டூர் சுப்ரமணி அவர்கள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
              சென்னையில் வேலை செய்யும் தங்கள் குழந்தைகள் அல்லது தெரிந்தவர்களின் பெயர் கைப்பேசி மற்றும் முகவரிகளை என்னிடம் 15/11/2011க்குள் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.


      
       
அன்புடன்



வெ.ராமமூர்த்தி - 94864 86755
மாவட்ட செயலாளர்,
சேலம் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக