தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் 10 வது மாவட்ட மாநாடு 24-07-2011, ஞாயிறு அன்று ஜான்சன் பேட்டையிலுள்ள சுனில் மைத்ரா நினைவரங்கில் நடைபெற்றது,
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முனைவர். R.சாம்சன் ரவீந்திரன் தலைமைவகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.P.சகஸ்ரநாமம் துவக்க உரையாற்றினார், மாவட்ட செயலாளர் திருமிகு.V.ராமமூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற வேலையறிக்கையை சமர்ப்பித்தார், மாவட்ட பொருளாளர் திருமிகு.G.சுரேஷ் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார், அறிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது,
மாநாட்டில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், கோம்பைப்பட்டி, சட்டக்கல்லுரி, அசோக் நகர்,செட்டிச்சாவடி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள குன்றுகள் சமூகவிரோதிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டு மலை வளமும், மழைப் பொழிவும் குறைந்து எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படுவதால் இயற்கை வளத்தை பாதுகாக்கப்பட வேண்டும், மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்திய அளவில் நடத்தப்பட இருக்கும் ஒருங்கிணைத்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், மாவட்ட நிர்வாகம் மாநகர் அறிவியல் மையம் அமைக்க வேண்டும், நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துதல் வேண்டும், ஏற்காடு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், உயர் கல்வியில் ஆங்கிலப் பாட தேர்ச்சி விழுக்காடு மிகவும் குறைவாக உள்ளதால், இதனை மேம்படுத்த பாடத்திட்டதிலும் தேர்வு முறையிலும் உரிய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது,
தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டுகள் அறிவியல் இயக்க பணிகளை செயல்படுத்த புதிய பொதுக்குழு, செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு தேர்வுசெய்யப்பட்டது.
நிர்வாகிகள் : தலைவர் முனைவர்.R.சாம்சன்ரவீந்திரன். செயலாளர் திருமிகு.V.ராமமூர்த்தி, பொருளாளர் திருமிகு.G.சுரேஷ், துணைத்தலைவர்கள் திருமிகு.பவளவள்ளி, திருமிகு.K.P.சுரேஷ்குமார், திருமிகு.K.சந்திரசேகர், திருமிகு.V.சீனிவாசன், இணை செயலாளர்கள் திருமிகு.M.கற்பகம், திருமிகு.J.பாலசரவணன், திருமிகு.D.திருநாவுக்கரசு, திருமிகு.N.கோபால். கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு.R.சசிகலா, திருமிகு.T.அந்தோணி ஜோதி நம்பி.
மாநாட்டில் மாவட்டத்தின் பல்வேறுக் கிளைகளில் இருந்து உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் என 75 பேர் கலந்துக்கொண்டனர், மாநகரக் கிளை தலைவர் திருமிகு.M.கற்பகம் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக