தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் - சேலம் வானியல் கழகம் மற்றும் கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இணைந்து நடத்திய வான் நோக்குதல் நிகழ்ச்சி, அறிவியல் இயக்க
கிளை அமைப்பு நிகழ்ச்சி மற்றும் பள்ளியின் அறிவியல் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் 24.09.2010 வெள்ளிகிழமை மாலை நடைபெற்றது,
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையேற்றார், கொங்கனாபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவராஜன் துவக்கவுரயற்றினார், அறிவியல் நிகழ்சிகளை அறிவியல் இயக்க நிர்வாகிகள்
G.சுரேஷ் (அறிவியல் பாடல், சர்வதேச பல்லுயிர் வகைமை ஆண்டு 2010 கருத்துரை ) மற்றும்
J.கார்த்திக் (வானியல் விளக்கம் தொலை நோக்கி நிகழ்ச்சி) நிகழ்த்தினர்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் R.ஜெயகுமார் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்..
26 Sep 2010 10:35:52 AM IST
பதிலளிநீக்குகன்னந்தேரி பள்ளியில் அறிவியல் இயக்க வானியல் நிகழ்ச்சி
சேலம், செப். 25: சேலம் மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கொங்கணாபுரம், கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கொங்கணாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன் துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க நிர்வாகி ஜி.சுரேஷ், "சர்வதேசப் பல்லுயிர் வகைமை ஆண்டு 2010' குறித்துப் பேசினார்.
வானியல் விளக்கம், தொலைநோக்கி நிகழ்ச்சிகளை ஜெ.கார்த்திக் நடத்தினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயக்குமார் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© Copyright 2008 தினமணி