இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், செப்டம்பர் 06, 2010

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, அவர்களுக்கு "அறிவியல் மாமணி" விருது



"துளிர்" அறிவியல் மாத இதழ் ஆசிரியர் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுகுழு உறுப்பினருமான திருமிகு. ஏற்காடு இளங்கோ, அவர்களுக்கு "அறிவியல் மாமணி" எனும் அருவினை விருதினை அவரது அறிவியல் நூலாக்கப்பணிகளை பாராட்டி, சேலம் கே.ஆர்.ஜீ. நாகப்பன் - இராஜம்மாள் அறக்கட்டளயின் சார்பாக ( 05/09/2010) ஞாயிறு அன்று நடைபெற்ற இலக்கிய விழா 2010 இல் வழங்கப்பட்டது,

2000 ஆம் ஆண்டு தொடாங்கி 2010 வரையில் 44 நூல்களை எழுதியுள்ளார், இவற்றில் 25 அறிவியல் நூல்களும் , 13 அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள் , சர்வதேச தினங்கள் குறித்தவை 4 , ஒரு குறு நாவலும் படைத்துள்ளார், பி.எட் படிப்பவர்களுக்கு உதவும் வகையில் சுற்று சூழல் ஒரு பார்வை நூலும் எழுதியுள்ளார்,

ஏற்காடு இளங்கோ அவர்கள் ஏற்புரையின் போது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு என்பது தேவையான அளவில் இல்லை என்பதை மனதில் கொண்டு , குறிப்பாக தொலைகாட்சியில் fair & lovely, coca cola போன்ற பல விளம்பரங்களில் பார்த்து விட்டு அதை பயன்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது , ஆனால் அதன் உண்மை தன்மைகளை பற்றியோ, அறிவியல் பின்னனியையோ பார்ப்பதில்லை, எனவேதான் அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்களை எழுத துவங்கியதாக குறிபிட்டார்,
மேலும் மனைவி திருமிகு தில்லைக்கரசி (தமிழ்நாடு அறிவியல் இயக்க மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி கருத்தாளர்) அவர்களும், தனது மகன்களும், பல்வேறுவகைகளில் ( தலைப்புகளுக்கேற்ற படங்களை தேர்வுசெய்தல் போன்று ) உதவுவதால் இந்த பணியை சிறப்பாக செய்யமுடிவதாகவும், இதுபோன்ற விருதுகளும் பாராட்டுகளும் படைப்பாளிகளை மேலும் பல புத்தகங்களை எழுத உற்சாகத்தை கொடுக்கும் என்றும் கூறினார்.

விழாவில்
ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ அவர்களின் பன்முக தொண்டை பாராட்டி "அறிவியல் அண்ணல்" விருதும்,
வீ.மலர் மன்னன் அவர்களின் இலக்கிய தொண்டை போற்றி "மனிதநேய மாமணி" விருதும்
ம.பலராமன் அவர்களின் பல்வேறு தொண்டை போற்றி "பன்முக செம்மல்" விருதும்,
ஓவியபாவலர். அமுதபாரதி அவர்களின் படைப்பிற்கு இலக்கிய பரிசு ரூபாய் 5000 மும்,
முனைவர்.தீ.உமாதேவி அவர்களின் ஆய்வு நூலுக்கு இலக்கிய பரிசு ரூபாய் 5000 வழங்கி பாராட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

1 கருத்து: