இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, டிசம்பர் 19, 2009

மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009. 27,28 & 29-11-2009 ( 10 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு புதுகோட்டை மாவட்டத்தில் 27,28 & 29-11-2009 ஆகிய தேதிகளில் நடைபெற்றது, மாநிலம் முழுவதும் இருந்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட இளம் விஞானிகள்குழு கலந்து கொண்டு ஆய்வுகளை சமர்ப்பித்து விளக்கினர், மாநாட்டில் சமசீர் கல்வி, மந்திரமா தந்திரம் மற்றும் மரபணு மற்ற கத்தரிபோன்ற தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டது, சேலம் மாவட்டத்தில் தேர்வான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், மேலு அறிவியல் இயக்கம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு.சுரேஷ்குமார், மாவட்ட ஒருகினைப்ப்ளர் திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி, கருத்தாளர் இணையம் ஒருங்கினைப்ப்ளர் திருமிகு.திருநாவுகரசு, கிளை செயலர் திருமிகு.கார்த்தி, திருமிகு.மௌலிஆகியோர் கலந்துகொண்டனர், சேலம் மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட ஆத்தூர் நீர்முள்ளி குட்டை அரசினர் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக