தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் மற்றும் விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி இணைந்து நடத்திய அறிவியல் ஆக்கத்திற்கே ! எனும் ஹிரோஷிமா நாகசாகி தின அறிவியல் நிகழ்ச்சி பள்ளியில் 08-08-2009 அன்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற்றது, நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திருமிகு. கீதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார், அறிவியல் இயக்கம் சார்பாக யுத்த எதிர்ப்பு பாடல்கள் பாடப்பட்டது, தொடர்ந்து அறிவியல் ஆசிரியர் உடன் சேர்ந்து அனைவரும் ஹிரோஷிமா நாகசாகி உறுதிமொழியை எடுத்தனர், மாவட்ட செயலர் திருமிகு ஜெயமுருகன் அணுஆயத பேரழிவை பற்றி கருத்துரையுடன் குறும்படம் முலம் ஹிரோஷிமா நாகசாகி பேரழிவை நம் கண்முன் நிறுத்தினார், துணை தலைவர் திருமிகு.பாண்டியன் தலைமையில் சமாதான வெண்புறா மாணவர்களால் செய்யப்பட்டது , இணை செயலர் திருமிகு.சுரேஷ்குமார் கருத்துரை வழங்கினார், கருத்தாளர் திருமிகு.மோகன்ராஜ் கலந்துகொண்டு ஹிரோஷிமா நகசாகி படத்தை வரைந்த மாணவருக்கு பரிசளித்து பாராட்டினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் இயக்கத்தினர், பத்திரிக்கை நண்பர்கள் என 300 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அணு ஆயுத பேரழிவை பற்றின விழிப்புணர்வு பெற்றனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவியல் இயக்கத்தினர், பத்திரிக்கை நண்பர்கள் என 300 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அணு ஆயுத பேரழிவை பற்றின விழிப்புணர்வு பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக