இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஜூலை 21, 2009

கிரகணம் காணலாம் வாங்க மாபெரும் மக்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பு நிகழ்ச்சி 21-07-2009

























தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் மற்றும் யுரேகா அறிவியல் மன்றம் சி. எஸ்.ஐ தொழில்நுட்ப கல்லூரி சேலம் இணைந்து கிரகணம் காணலாம் வாங்க! என்னும் சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி 21-07-2009 அன்று நடைபெற்றது, காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1000 கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர், நிகழ்ச்சியில் கிரகணம் பற்றின மூடநம்பிக்கைகளை அகற்றி அறிவியல் பூர்வமான உண்மைகளை எளிமையாக படங்கள், படக்காட்சிகள், விளக்கங்கள், கையேடுகள், செயல்முறைகள் முலம் விளக்கப்பட்டது, நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புத்தகவிற்பனை நடைபெற்றது.







இயக்க நிகழ்ச்சி தி ஹிந்து நாளிதழில். www.hindu.com/2009/07/22/stories/2009072251840300.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக