தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அம்மாப்பேட்டை கிளை சார்பில் அறிவியல் நிகழ்ச்சி, மாநகராட்சி பாவடி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 07-07-2009 அன்று மாலை4 முதல் 6 வரை நடைபெற்றது, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க அம்மாப்பேட்டை கிளை செயலர் திருமிகு.கார்த்தி, திருமிகு.அருண், அம்மாப்பேட்டை கிளை உறுப்பினர்கள், குகை கிளை உறுப்பினர்கள் திருமிகு.ராம்குமார், திருமிகு.லோகேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்
மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன் கலந்துகொண்டு பள்ளிமாணவர்களுக்கு சர்வதேச வானியல் ஆண்டை பற்றியும் ஜுலை 22 சூரிய கிரகண நிகழ்வை பற்றியும் அதன் மீது உள்ள மூடநம்பிக்கைகளை களையும் வகையில் எளியமுறையில் அறிவியல் பூர்வமாக விளக்கினார். நிகழ்ச்சியில் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டு அறிவியல் விழிப்புணர்வு அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக