தினமணி நாளிதழில் இயக்க செய்தி
அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் விளக்க நிகழ்ச்சி
First Published : 25 May 2009 08:54:00 AM IST
Last Updated :
சேலம், மே 24: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் குறித்த விளக்க நிகழ்ச்சி, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச வானியல் ஆண்டாக இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் குறித்த உண்மைகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றன.
அறிவியல் இயக்க சேலம் குகை பகுதி கிளை சார்பில் இதற்கான நிகழ்ச்சி மூங்கப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
46-வது டிவிஷன் கவுன்சிலர் இ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். எஸ்க்னோரா சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
அறிவியல் இயக்க கருத்தாளர்களால் வானியல் விளக்க உரை, குறும்படம் திரையிடல், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ஜெயமுருகன், கருத்தாளர் மோகன்ராஜ், பொருளாளர் பவளவள்ளி, கார்த்திக், சுரேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக