அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
செவ்வாய், ஏப்ரல் 07, 2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் உருக்காலை (மோகன் நகர்) கிளை சர்.ஐசக்.நியூட்டன் துளிர் இல்ல அறிவியல் சுற்றுலா 04-ஏப்ரல்-2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம், உருக்காலை (மோகன் நகர்) கிளை சர்.ஐசக்.நியூட்டன் துளிர்இல்ல அறிவியல் சுற்றுலா (வேலூர் மாவட்டம் ) ஏலகிரி மற்றும் காவலூர் (ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைவிடம் ) ஆகிய பகுதிகளுக்கு திட்டமிடப்பட்டு 50 பேர் கொண்ட குழு இரண்டு வேனில் 04/04/2009 அன்று திட்டமிட்டபடி சென்றுவந்தனர். இதில் துளிர் இல்ல குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கலந்துகொண்டனர், சுற்றுலாவின் சிறப்பாக வண்டியில் இருத்த தொலைக்காட்சி வாயிலாக சிறப்பு அறிவியல் குறும்படங்கள் மற்றும் சந்திரயான் சிறப்பு குறும்படங்கள் விளக்கங்களுடன் காண்பிக்கப்பட்டது, மேலும் சேது அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சிகள் ஏலகிரியில் அனைவரையும் சிந்திக்கும் வகையில் அமைந்தது , ஆலங்காயம் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் திரு. முருகன் அவர்கள் அனைவரையும் வழிநடத்தினார். இறுதியாக காவலூரில் உள்ள ஆசியாவின் மிக பெரிய தொலைநோக்கியை பார்வையிட்ட அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்தனர் அங்கு வானியல் பற்றியும் வானியல் படிப்புகள் பற்றியும் நிறைய விளக்கங்களை அறிவியல் இயக்க உறுப்பினர்களும் , துளிர் இல்ல குழந்தைகளும் கேட்டறிந்தனர் மொத்தத்தில் இந்த அறிவியல் சுற்றுலா அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அமைந்தது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக