அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
மேட்டூர் கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேட்டூர் கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், பிப்ரவரி 09, 2010
நிர்மலா மேல்நிலை பள்ளி விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி, மேட்டூர் கிளை 30-01-2010 ( 4 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டுர் கிளை சார்பாக 30-01-2010 அன்று கொளத்தூர் நிர்மலா பள்ளியில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி பெற்றோர் அசிரியர் கழகத்துடன் இணைத்து நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு நெல்லை சு.முத்துஅவர்கள் கலந்துகொண்டு அறிவியல் உரையாற்றி கருத்துரைகள் வழங்கினார் , மாணவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலளித்தார், அறிவியல் இயக்கம் சார்பில் சேலம் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், துணை தலைவர் திருமிகு.சுப்ரமணி, செயற்குழு உறுப்பினர் திருமிகு.டோமினிக்மற்றும் மேட்டூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
திங்கள், நவம்பர் 09, 2009
கொளத்தூர் கிளை அமைப்புக் கூட்டம் ( 14-10-2009 ) ( 3 )
மேட்டூர் பகுதி கொளத்தூரில் கிளை அமைப்பதற்க்கான அமைப்புக் கூட்டம் 14-10-2009 அன்று நடைபெற்றது, தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார், கொளத்தூர் நிர்மலா பள்ளி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர், கூட்டத்தை மேட்டுர் கிளை நிர்வாகியும், சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான திருமிகு.டோமினிக் செய்திருந்தார்
புதன், அக்டோபர் 21, 2009
மேட்டூர் அறிவியல் நிகழ்ச்சிகள் 26-09-2009 ( 2 )
சேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மேட்டூர் கிளை சார்பாக 26-09-2009 அன்று கொளத்தூரில் ( குரும்பனுர் ) ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்களின் அறிவியல் சிறப்புரைகளுடன்கூடிய தொலைநோக்கி நிகழ்ச்சி மற்றும் அறிவியல் இயக்க கருத்தாளர் திருமிகு.மோகன்ராஜ் அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வியாழன், ஆகஸ்ட் 20, 2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பாக பன்றிக்கய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 17-08-2009 ( 1 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பாக பன்றிக்கய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நிர்மலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கொளத்தூரில் 17-08-2009 அன்று காலையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருமிகு.D.திருநாவுகரசு,உதவி பேராசிரியர், Medical Microbiologist,(அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி, சேலம்.) மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட கருதாளர் இணைய ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியை திருமிகு.டோமினிக் மேட்டுர் கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து சிறப்பித்தனர் 250 இகும் மேற்பட்ட மாணவவர்கள் கலந்துகொண்டனர்
வியாழன், ஜூலை 23, 2009
சூரியகிரகண நேரடி விளக்க நிகழ்ச்சி 22-07-2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பில் சூரியகிரகண விளக்க நிகழ்ச்சி திருமிகு.ராமமூர்த்தி அவர்களால் கெம்பிளாஸ்ட் தொழிற்சாலையிலும், திருமிகு.மோகன்ராஜ் அவர்களால் தொழிற்சாலை குடியிருப்பு பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு கிரகணத்தை பாதுகாப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.
ஞாயிறு, ஜூலை 19, 2009
மேட்டூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கொளத்தூரில் "கிரகணம் காணலாம் வாங்க" அறிவியல் விளக்க நிகழ்ச்சி 17-07-2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பாக கிரகணம் காணலாம் வாங்க! சிறப்பு வானியல் நிகழ்ச்சி 17-07-2009 அன்று மேட்டூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி கொளத்தூரில் காலை 10.30 முதல் மதியம் 12.00 மணிவரையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட செயலாளர் திரு. ஜெயமுருகன் கலந்துகொண்டு கிரகணங்கள் பற்றியும், இந்த நுற்றாண்டின் கிரகண முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவியர் இடையே விளக்கினார், நிகழ்ச்சியை மேட்டூர் கிளை சார்பாக திரு. சுப்ரமணி, திரு.ஆண்டனி ஜோதி நம்பி, திரு.டோம்னிக் என அணைத்து மேட்டூர் கிளை உறுப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் திருமிகு.K.P.பால் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் , நிகழ்ச்சியில் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
ஞாயிறு, ஜூலை 12, 2009
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009, வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 11-07-2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுக்கான, வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம், மேட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-07-2009 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியை மேட்டுர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர், மேட்டூர், கொளத்தூர், சங்ககிரி, நங்கவள்ளி மற்றும் ஓமலூர் பகுதிகளிலுள்ள 50 கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், புவிக்கோள்-அறிவோம் , பாதுகாப்போம், பகிர்ந்துகொள்வோம் என்ற பொது தலைப்பின் கீழ் கருத்தாளர்கள் திருமிகு,ஆர்.சுரேஷ்குமார் பெரியார் பல்கலைகழக பேராசிரியர், திருமிகு.பி.தங்கராஜ் நீரியல் வல்லுநர், செயலர் திருமிகு.ஜெயமுருகன், திருமிகு.நாகராஜன் பேராசிரியர், திருமிகு.எல்.என்.ராமகிருஷ்ணன் உருக்காலை, திருமிகு. அஜித் எஸ் பத்மநாபன் ஆகியோர் உரையாற்றினர் , கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதல் மற்றும் கையேடுவழங்கப்பட்டது.
செவ்வாய், ஜூன் 30, 2009
சர்வதேச வானியல் ஆண்டு 2009 வானியல் நிகழ்ச்சி மேட்டூர் நிர்மலா பள்ளியில் 29-06-2009
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பாக சர்வதேச வானியல் ஆண்டு 2009 இய் முன்னிட்டு, சிறப்பு வானியல் நிகழ்ச்சி 29-06-2009 அன்று மேட்டூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி கொளத்தூரில் காலை 10.30 முதல் மதியம் 12.00 மணிவரையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட செயலாளர் திரு. ஜெயமுருகன் கலந்துகொண்டு அறிவியல் இயக்க நிகழ்வுகள் பற்றி விவரித்தார், மேலும் சிறப்பு அழைப்பாளராக பாரிசில் நடைபெற்ற சர்வதேச வானியல் ஆண்டு 2009 துவக்க விழாவுக்கு நேரில் கலந்துகொண்ட இந்தியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினரும் ஆனா திரு.அஜித் எஸ் பத்மநாபன் அவர்கள் கலந்து கொண்டு சர்வதேச வானியல் ஆண்டின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவியர் இடையே விளக்கினார், நிகழ்ச்சியை மேட்டூர் கிளை சார்பாக திரு. சுப்ரமணி, திரு.ஆண்டனி ஜோதி நம்பி, திரு.டோம்னிக் என அணைத்து மேட்டூர் கிளை உறுப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் இருநுருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
வியாழன், ஜூன் 18, 2009
பொது சுகாதாரம் மற்றும் தூய்மை அறிவியல் சிறப்புரை, மேட்டூர், 18-06-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேட்டூர் கிளை சார்பில் மேட்டூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் (11 ஆம் வகுப்பு) மாணவ, மாணவியர்களுக்கான பொது சுகாதாரம் மற்றும் தூய்மை அறிவியல் சிறப்புரை நிகழ்ச்சி 18-06-2009 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் திரு, திருநாவுகரசர் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றி உரையாற்றினார், சேலம் மாவட்ட செயலாளர் திருஜெயமுருகன், திரு. சுப்ரமணி, திரு.ஆண்டனி ஜோதிநம்பி, மேட்டூர் கிளை நிர்வாகிகள் மற்றும் மேட்டூர் கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் 100 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
வெள்ளி, மார்ச் 06, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)