இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வியாழன், நவம்பர் 22, 2012

சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் - துளிர் வெள்ளி விழா (25ஆம் ஆண்டு) மாநாடு நவம்பர் 24 சனிக்கிழமை சென்னையில்

வணக்கம்,

சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் - துளிர் வெள்ளி விழா (25ஆம் ஆண்டு) மாநாடு நவம்பர் 24 சனிக்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

இடம் : சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர். ( பனகல் பூங்காவிலிருந்து வாணி மகால் வரும் வழியில் 3நிமிட நடை தூரத்தில் உள்ளது.ரோகிணி இண்டர்நேஷனல் ஹோட்டல் & கண்ணதாசன் சிலை அருகில் )

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை

மதிய உணவு வழங்கப்படும்.





பங்கேற்பாளர்கள்:

விஞ்ஞானி முனைவர் . இராமானுஜம்
பேராசிரியர் மணி
சி.இராமலிங்கம்
உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு
முனைவர். பாலசுப்ரமணியன்( இயக்குநர், கணித அறிவியல் நிறுவனம் IMSC - சென்னை )
முனைவர் அய்யம்பெருமாள்( செயல் இயக்குநர், பெரியார் தொழில்நுட்ப மையம்,சென்னை )
என்.ராம் ( முதுநிலை முதன்மை ஆசிரியர், இந்து நாளிதழ் )
பேரா. ஆத்ரேயா
தமிழ்ச்செல்வன்(தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
பாரதி கிருஷ்ணகுமார் ( திரைப்பட இயக்குநர்)
கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி
முனைவர்.இராமசாமி ( இயக்குநர், அறிவியல் தொழில் நுட்பத்துறை-புதுடெல்லி)
பேரா.மாடசாமி
விஞ்ஞானி த,வி.வென்கடெஸ்வரன்( விக்யான் பிரச்சார், புதுடெல்லி)
அறிவியல் எழுத்தாளர். ஆயிசா இரா.நடராசன்
கமலாலயன்
தாமஸ் பிராங்கோ
டாகடர் சுந்தரராமன்
செந்தமிழ்ச்செல்வன்
ஸ்டீபன் நாதன்
எஸ்.டி.பாலகிருஷ்ணன்

மேலும்
* சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
* துளிர் 25 ஆண்டு இதழ்கள் சிடி வெளியீடு
* புத்தக வெளியீடு
* அனுபவப் பகிர்வு


நீங்களும், உங்கள் நண்பர்களுடன், உறவினர்களுடன் வந்து முழுமையாக பங்கேற்க வேண்டுகிறோம்

இந்த மின் அஞ்சலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

வெளி மாவட்டங்களிலிருந்து வரும் ந்ணபர்கள் குளிக்க , ஓய்வுவெடுக்க அருகில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு: 
சி. இராமலிங்கம் -9444247658
ஜெகதீஷ் : 9750547470
பி.கிருஷ்ணமூர்த்தி - 9444816352
உதயன் - 9444453588


அன்புடன்,
உதயன்


துளிர் வெள்ளிவிழாவை ஒட்டி 'இந்திய அறிவியல் பத்திரிக்கை முன்னுள்ள சவால்கள்' என்ற ஒரு நாள் கருத்தரங்கம் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறுகின்றது. அதற்கான அழைப்பிதழ் & நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




Umanath Selvan umanaths@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக