அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
மாவட்ட நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்ட நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், மார்ச் 04, 2010
தேசிய அறிவியல்தின கொண்டாட்டம் பல்லுயிர்ம நடைபயணம் 28-02-2010 ( 54 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்வாகவும், சர்வதேச பல்லுயிர்ம ஆண்டு 2010 தொடர் நிகழ்வாகவும், 28-02-2010 அன்று பல்லுயர்ம நடைபயணம் ஏற்காடு மலை காட்டு வழியில் கல்லுரி மாணவர்கள் 500 பேர் வரை கலந்துகொண்டு நடைபயணம் மேற்கொண்டனர். பல்வேறு அறிவியல் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி டயட் 25-02-2010 ( 53 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக டயட் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25-02-2010 மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சகஸ்ரநாமம் மற்றும் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் ஆகியோர்கலந்துகொண்டு அறிவியல் கருத்துரைகளை வழங்கினர் , அறிவியல் வெளியீடு ஒருகினைபாளர் திருமிகு.கோபால அவர்கள் தலைமையில் புத்தகவிற்பனை நடைபெற்றது
சர்வதேச பல்லுயிர்ம ஆண்டு 2010 சேலம் மாவட்ட துவக்க நிகழ்வு 21-02-2010 ( 52 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக சர்வதேச பல்லுயிர்ம ஆண்டு 2010 துவக்க விழா 21-02-2010 அன்று அம்மாபேட்டை பகுதி, காமராஜர் காலனியில் பொதுமக்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் பல்லுயிர் படுகப்பு மற்றும் புவி வெப்பமாதல் குறித்து சிறப்புரைகளை மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சஹஸ்ரநாமம், கருத்தாளர்இனைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு ஆகியோரே உரையாற்றினர், அறிவியல் இயக்க வரலாறு மற்றும் செயல்பாடுகள் பற்றி துணை தலைவர் திருமிகு.சசிகலா அவர்கள் உரையாற்றினார், மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அறிவியல் பாடல்கள் மற்றும் சிறப்பு அறிவியல் குறும்படங்கள்திரையிட்டு விளக்கினார், மேலும் தொலைநோக்கிவயிலாக நிலா நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியை துணை தலைவர் திருமிகு.சுப்பிரமணி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், மேலும் நிகழ்ச்சியில் இணை செயலர் திருமிகு.சுரேஷ்குமார், இணை செயலர் திருமிகு,சுரேஷ், அறிவியல் வெளியிடுகள் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கோபால் , அம்மாபேட்டை கிளை செயலர் திருமிகு.கார்த்தி, நிர்வாகிகள் திருமிகு,மௌலி, அருண், குகை கிளை சார்பாக திருமிகு.ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புசெய்தனர்.
ஆசிரியர் கலந்துரையாடல் மற்றும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி 13-02-2010 ( 51 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மேசேரியில் நடைபெற்ற B.R.T ஆசியர்கள் கூட்டத்தில் அறிவியல் நிகழ்ச்சி 13-02-2010 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருமிகு,ஜெயமுருகன், துணை தலைவர், திருமிகு. சுப்ரமணி, இணை செயலர். திருமிகு.K.P. சுரேஷ் குமார், இணை செயலர் திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி , மற்றும் திருமிகு.வின்சென்ட் ஆகியோரே கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அறிவியல் கருத்தரங்கம் C.S.I தொழில்நுட்ப கல்லூரியில் 06-02-2010 ( 50 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக C.S.I தொழில்நுட்ப கல்லூரியில் அறிவியல் நிகழ்ச்சியில் 06-02-2010 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருமிகு,ஜெயமுருகன் கலந்துகொண்டு ( future mission in space )அறிவியல் கருத்துரை வழங்கினார் ,
செவ்வாய், பிப்ரவரி 09, 2010
நிலவு நோக்கு நிகழ்ச்சி 30-01-2010 ( 49 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நிலவு நோக்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் நகரமலை அடிவாரம் பகுதியில் அறிவியல் இயக்க ஆர்வலர் திருமிகு.காந்தி அவர்களின் இல்லம் அருகே 30-01-2010 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் இணை செயலாளர் திருமிகு,சுரேஷ் கலந்துகொண்டு விளக்கினார், தொலைநோக்கி வாயிலாக பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நிலவை பார்த்து மகிழ்ந்தனர்.
நிலவு நோக்கு நிகழ்ச்சி 30-01-2010 ( 48 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நிலவு நோக்கும் நிகழ்ச்சி சூரமங்கலம் பகுதியில் மாவட்ட இணை செயலர் திருமிகு.பாலசரவணன் அவர்களின் இல்லம் அருகே 30-01-2010 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் துணை தலைவர் திருமிகு,பாண்டியன் கலந்துகொண்டு விளக்கினார், தொலைநோக்கி வாயிலாக பொதுமக்கள் நிலவை பார்த்து மகிழ்ந்தனர்.
திங்கள், பிப்ரவரி 08, 2010
கிரகண பொங்கல் கொண்டாட்டம் 15-01-2010 ( 47 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுதும் கிரகண பொங்கல் கொண்டாடப்பட்டது, சேலம் மாவட்டத்தின் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாகிகள் ஆர்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் கிரகணம் காண்பிக்கப்பட்டது , பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான கிரகணம் காணும் நிகழ்ச்சி சிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது, சூரிய ஒளிவடிகட்டி கண்ணாடிகள் வாயிலாகவும், தொலைநோக்கி உதவியுடன் பிம்பத்தை திரையிட்டும் பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது ஏராளமான மக்கள் பங்கேற்று ஆர்வமுடன் பார்வையிட்டனர், நிகழ்ச்சியில் பொங்கல் விநியோகிக்கப்பட்டு அனைவரும் சுவைத்துகொண்டே கிரகணம் கண்டுரசித்தனர், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் என மக்கள் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கர்ப்பிணி பெண் கலந்துகொண்டார் மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன், மாவட்ட தலைவர் திருமிகு. சாம்சன் ரவீந்திரன், பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி, துணை தலைவர் திருமிகு.ராம்பாபு, இணை செயலாளர் திருமிகு, சுரேஷ், துளிர் இல்ல குழந்தைகள், மற்றும், அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
சூரிய கிரகண விளக்கநிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் 12-01-2010 ( 46 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் சார்பாக 12-01-2010 அன்று சி.எஸ்.ஐ தொழில்நுட்ப கல்லுரி மாணவர்கள் விடுதி கருத்தரங்கில் நடைபெற்ற கிரகணம் பற்றின விளக்க நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டானர் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் விளக்கமளித்தார், புத்தக விற்பனையில் மாவட்ட பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி மற்றும் ஆர்வலர் திருமிகு.சாந்தஷீலாஆகியோர் கலந்துகொண்டனர்.
சூரிய கிரகண விளக்க அறிவியல் நிகழ்ச்சி திருச்சங்கோட்டில் 12-01-2010 ( 45 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் சார்பாக சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி திருச்சங்கோட்டில் 12-01-2010 அன்று அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கருதாளர் இணையஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு அவர்கள் கலந்துகொண்டு சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கினார்மாவட்ட துணை தலைவர் திருமிகு.பாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு அறிவியல் சிறப்புரை வழங்கினார்
சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி 12-01-2010 ( 44 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக 12-01-2010 அன்று இளம்பிள்ளை , ஜோதி வித்யாலய மேல்நிலை பள்ளியில் நடை பெற்ற அறிவியல் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட இணை செயலாளர் திருமிகு. கே.பி.சுரேஷ்குமார் அவர்கள் சூரிய கிராகணம் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கினார் , இரு அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 108 இகும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி 11-01-2010 ( 43 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக 11-01-2010 அன்று பாகல்பட்டி, புனித ஜோசப் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேலம் மாவட்ட இணை செயலாளர் திருமிகு. கே.பி.சுரேஷ்குமார் அவர்கள் சூரிய கிராகணம் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கினார் , இரு அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 220 இகும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வியாழன், ஜனவரி 14, 2010
எழுத்து சிற்பி ஏற்காடு இளங்கோ புத்தக வெளியீடு 26-12-2009 ( 42 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைங்கர்கள் சங்கம் இணைந்து 26-12-2009 அன்று எழுத்து சிற்பி ஏற்காடு இளங்கோ அவர்களின் 25 ஆவது படைப்பான " வெற்றி கலிலியோவிற்கே ! " புத்தக வெளியீட்டு விழா சேலம் தமிழ்சங்கம் மேல் மாடியில் நடைபெற்றது, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுசெயலாளர் திருமிகு.எஸ்.டி.பாலகிருஷ்ணன் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள், செயற்குழு உறுபினர்கள், உறுபினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திங்கள், டிசம்பர் 21, 2009
கிளை அமைப்பு மற்றும் பயிற்சிமுகாம் திட்டமிடல் 17-12-2009 ( 41 )
ஜனவரி மாத பயிற்சிமுகாமுக்கான ஏற்பாடுக்கு மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் மற்றும் எடப்பாடி கிளை நிர்வாகி திருமிகு.ஸ்டாலின் ஆகியோர் பயிற்சிமுகாம் பகுதிகளை பார்வையிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர்
நிர்வாக மற்றும் புத்தகவிற்பனை வேலைகள் 14-12-2009 ( 40 )
சேலம் மாவட்ட அறிவியல் இயக்க புத்தக விற்பனைகான அனுமதிக்காக சேலம் மாநகர மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை 14-12-2009 அன்று மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.
அறிவியல் இயக்க வக்கிகணக்கு மாற்றம் செய்ய வங்கி அலுவலரை சந்தித்தனர்.
அறிவியல் இயக்க வக்கிகணக்கு மாற்றம் செய்ய வங்கி அலுவலரை சந்தித்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையம் காணும் நிகழ்ச்சி 05 & 07-12-2009 ( 39 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் சார்பாக சி.எஸ்.ஐ தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையம் காணும் நிகழ்ச்சி 05 மற்றும் 07-12-2009 ஆகிய நாட்கள் அதிகாலையில் நடைபெற்றது, நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கை செய்தி, குறுந்தகவல் மூலம் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கபட்டிருந்தது, அதிகாலையிலேயே பாரவலாக பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியை சேலம் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் முனைவர்.சாம்சன்ரவீந்திரன், செயலாளர்.திருமிகு.ஜெயமுருகன் ஒருங்கிணைத்து விளக்கினர், குறும்படம் காண்பிக்கப்பட்டது, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று அறிவியல் இயக்கத்திலும் இணைந்துகொண்டனர், அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியில் இந்நிகழ்வு இடம்பிடித்தது.
அறிவியல் இயக்க அம்மாபேட்டை கிளை செயலர் திருமிகு.கார்த்தி நிகழ்வில் உதவினார்.
அறிவியல் இயக்க அம்மாபேட்டை கிளை செயலர் திருமிகு.கார்த்தி நிகழ்வில் உதவினார்.
ஞாயிறு, டிசம்பர் 20, 2009
மரபணு மாற்ற கத்தரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 30-11-2009 ( 38 )
சேலம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 30-11-2009 அன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்க கூட்டத்தில், மரபணு மாற்ற கத்தரி குறித்த கருத்துரைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முனைவர்.கிருஷ்ணசாமி அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார், சேலம் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி, துணை தலைவர்,திருமிகு. ராம்பாபு, கருத்தாளர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு, அறிவியல் வெளியீடு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கோபால், இனைசெயலர்திருமிகு.சுரேஷ், செயற்குழு உறுப்பினர் திருமிகு.லால், உறுப்பினர் திருமிகு.ஐடா பிரிசில்லாஎன பலரும் கலந்துகொண்டானர்
சனி, டிசம்பர் 19, 2009
அறிவியல் எழுத்தாளர் பயிற்சிமுகாம் 24 to 28-11-2009 ( 37 )
மயிலை திருவள்ளுவர் தமிழ்சங்கம் மற்றும் அறிவியல் கூட்டமைப்பு இணைந்து நடத்திய அறிவியல் எழுத்தாளர் பயிற்சிமுகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆத்தூர் வடசென்னிமலை சீனிவாசகர்மற்றும் சி.எஸ்.ஐ தொழிநுட்ப கல்லுரி விரிவுரையாளர் திருமிகு.ஆறுமுகம் ஆக்கியோர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்
துளிர் திறனறிதல் தேர்வு 2009 21-11-2009 ( 36 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் துளிர் திறனறிதல் போட்டி 2009 21-11-2009 அன்று நடைபெற்றது சேலம் மாவட்டத்தில், சேலம் நகரம், மோகன் நகர், ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர் ஆகியபகுதிகளில் சுமார் 509 மாணவர்கள் தேர்வெழுதினர்
துளிர் திறனறிதல் தேர்வு குறித்து விளக்க நிகழ்ச்சி 17-12-2009 ( 35 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் துளிர் திறனறிதல் தேர்வு குறித்து காயத்திரி பள்ளியில் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் விளக்கமளித்து, சிறப்புரை ஆற்றினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)