இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

மாநில நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநில நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 19, 2010

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேற்கு மண்டல (அறிவியல் வெளியீடு) நவம்பர் புத்தக வாரத்திற்கான கூட்டம்



தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மேற்கு மண்டல (அறிவியல் வெளியீடு) நவம்பர் புத்தக வாரத்திற்கான கூட்டம், சேலம் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலாகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட இணை செயலர் திருமிகு.G.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார், சேலம் மாவட்ட அறிவியல் வெளியீடு உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.N.கோபால் தலைமையேற்றார், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சேதுராமன் புத்தக வார திட்டங்களை பாற்றி விவரித்தார், கூட்டத்தில் அனைவரும் தாங்கள் மனம் கவர்ந்த ஒரு புத்தகம் பற்றின விமர்சனங்களை வழங்கினார், மேலும் துளிர் திறனறிதல் போட்டிகள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றியும் விவாதிக்கப்பட்டது . தர்மபுரி மாவட்ட தலைவர் திருமிகு.கலாவதி, சேலம் மாவட்ட பொருலாளர் திருமிகு.ராமமுர்த்தி, இணை செயலாளர் திருமிகு.பாலசரவணன், வந்திருந்த அனைவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட இணை செயலர் திருமிகு.அருண் பிரசாத் நன்றி கூறினார்

வியாழன், மார்ச் 04, 2010

மாநில பயிற்சிமுகாம் 27 & 28 -02-2010 ( 54 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில அளவிலான கருத்தாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சிமுகாம் 27 & 28-02-2010 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது, சேலம் மாவட்டம் சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சகஸ்ரநாமம் அவர்கள் கலந்துகொண்டார். பாடல் பயிற்சி, அறிவியல் இயக்கம் அமைப்பு செயல்பாடு, நீங்கள் வித்தியாசமானவர், ஆளுமை என பலதலைபுகளில்பயிற்சி நடைபெற்றது.

வானியல் கழகம் துவக்க நிகச்ழ்ச்சி K.S.R பொறியியல் கல்லுரி திருச்சங்கோடு மாவட்டத்தில் 24-02-2010 ( 15 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டம் இணைத்து , வானியல் கழகம் துவக்க நிகச்ழ்ச்சி K.S.R பொறியியல் கல்லுரி திருச்சங்கோடு மாவட்டத்தில் 24-02-2010 நடத்தியது, நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு இரவு வான் நோக்கு நிகழ்ச்சி நிகழ்த்தினார், குகை கிளை சார்பாக திருமிகு.ராம்குமார் அவர்கள் கலந்துகொண்டார், கல்லுரி மாணவர்கள் இரவுமுழுவதும் கலந்துகொண்டு வான்னோக்கினர்

புதன், மார்ச் 03, 2010

அறிவியல் திருவிழா கோவைமாவட்டம் 05-02-2010 ( 14 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோவை மாவட்டத்தில் K.P.R பொறியியல் கல்லூரியில் அறிவியல் திருவிழாவை 05 & 06-02-2010 ஆகிய இரு நாட்கள் நடத்தியது, கோவை மாவட்டத்தின் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பயனடைந்தானர் , பல்வேறு மாவட்டங்களில் இருந்து கருத்தாளர்கள் கலந்துகொண்டனர், சேலம் மாவட்ட செயலர் திருமிகு ஜெயமுருகன் கலந்துகொண்டு வான் நோக்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபஞ்ச ஆச்சரியங்களை மாணவர்களுக்கு விளக்கினார் அறிவியல் இயக்க ஆர்வலர்கள், நிற்வாகிகள், கருத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், பிப்ரவரி 08, 2010

இளைஞர்கள் அறிவியல் திருவிழா 23 & 24-01-2010 ( 13 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டத்தில் இளைஞர்கள் அறிவியல் திருவிழாவை 23 & 24-01-2010 ஆகிய இரு நாட்கள் நடத்தியது, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டா மாணவர்கள் காலநிலை மாற்றம், அறிவியலும் அரசியலும், அறிவியல் பரப்புதல் போன்ற கருத்தரங்கில் கலந்துகொண்டனர், சேலம் மாவட்ட செயலர் திருமிகு ஜெயமுருகன் கலந்துகொண்டு வான் நோக்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபஞ்ச ஆச்சரியங்களை மாணவர்களுக்கு விளக்கினார் , கருத்தாளர் திருமிகு.அஜித்.எஸ்.பத்மநாபன் மாணவர்களுக்கான இணையதளத்தை உருவாக்கி வெளியிட்டார் www.youth4earth.org , அறிவியல் இயக்க ஆர்வலர்கள், நிற்வாகிகள், கருத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சனி, பிப்ரவரி 06, 2010

ஆசிரியர் பயிற்சி முகாம் ஈரோடு 09 & 10-01-2010 ( 12 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கல்வி உபகுழு சார்பாக ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிமுகாம் ஈரோடு மாவட்டத்தில் 09 & 10-01-2010 என இரு நாட்கள் நடைபெற்றது. சேலம் மாவட்டம் சார்பாக இணை செயலர் திருமிகு.பாலாசரவணன் மற்றும் திருமிகு.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, ஜனவரி 01, 2010

மாநில செயற்குழு கூட்டம் 19 & 20 - 12 - 2009 (11)

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் டிசம்பர் 19,20 ஆகிய இரு நாட்களில் சிவகாசி YRTV மேட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது சேலம் மாவட்டம் சார்பாக மாநில செயற்குழு உறுபினர் திருமிகு சஹஸ்ரநாமம் , மாவட்ட செயலாளர் திருமிகு ஜெயமுருகன் மற்றும் மாவட்ட கருத்தாளர் திருமிகு அஜித் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு உபகுழு பணிகள், வேலை பகிர்வு, செயல் வீரர்கள் பயிற்சி முகாம், மாநில மாநாடு பரிசிலனை போன்ற தலைப்புகளில் விவாதித்தனர்

சனி, டிசம்பர் 19, 2009

மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009. 27,28 & 29-11-2009 ( 10 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு புதுகோட்டை மாவட்டத்தில் 27,28 & 29-11-2009 ஆகிய தேதிகளில் நடைபெற்றது, மாநிலம் முழுவதும் இருந்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட இளம் விஞானிகள்குழு கலந்து கொண்டு ஆய்வுகளை சமர்ப்பித்து விளக்கினர், மாநாட்டில் சமசீர் கல்வி, மந்திரமா தந்திரம் மற்றும் மரபணு மற்ற கத்தரிபோன்ற தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டது, சேலம் மாவட்டத்தில் தேர்வான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், மேலு அறிவியல் இயக்கம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு.சுரேஷ்குமார், மாவட்ட ஒருகினைப்ப்ளர் திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி, கருத்தாளர் இணையம் ஒருங்கினைப்ப்ளர் திருமிகு.திருநாவுகரசு, கிளை செயலர் திருமிகு.கார்த்தி, திருமிகு.மௌலிஆகியோர் கலந்துகொண்டனர், சேலம் மாவட்டம் சார்பாக கலந்துகொண்ட ஆத்தூர் நீர்முள்ளி குட்டை அரசினர் பள்ளி மாணவர்கள் தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகினர்

ஞாயிறு, நவம்பர் 29, 2009

துளிர் திறனறிதல் போட்டி திட்டமிடுதல் கூட்டம் 08-11-2009 ( 9 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் துளிர் திறனறிதல் தேர்வுக்கான மாநில அளவிலான திட்டமிடுதல் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது சேலம் மாவட்டத்தில் இருந்து துளிர் திறனறிதல் தேர்வு ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட இணை செயலருமான திருமிகு.பாலசரவணன் அவர்கள் கலந்துகொண்டார்

சமச்சீர் கல்வி கலந்தாய்வு 08 & 09 -11-2009 ( 8 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக சமச்சீர் கல்வி குறித்த கலந்தாய்வு சென்னை தரமணியில் நடைபெற்றது தமிழகம் முழுவதிலுமிருந்து அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கலந்துகொண்டனர், சேலம் மாவட்டத்திலிருந்து திருமிகு.ஜானகிராமன், திருமிகு.ஷீலா மற்றும் செங்கோட்டுவேலன் ஆகிய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்,

சனி, நவம்பர் 28, 2009

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கலந்துரையாடல் கூட்டம் 25/10/2009 ( 7 )

தமிழ்நாடு அறிவியல் இயக்க, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2009காணகலந்துரையாடல் நிகழ்வு 25/11/2009 அன்று மாநில அளவில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி கலந்துகொண்டார்

வெள்ளி, அக்டோபர் 30, 2009

மாநில அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடிவினா போட்டி 11-10-2009 ( 6 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாநில அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடிவினா போட்டி நீடாமங்கலத்தில் 11-10-2009 அன்று நடைபெற்றது, சேலம் மாவட்டத்தில் பரிசுபெற்ற சாரதா பள்ளி மற்றும் வித்யா மந்திர்பள்ளி மாணவர்கள் இரண்டு அணியாக, மாவட்ட இணை செயலர் திருமிகு.ஆண்டோனி ஜோதி நம்பி அவர்கள் ஒருங்கிணைப்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வியாழன், அக்டோபர் 22, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்க 15 வது மாநில மாநாடு 02 / 03 & 04 - 10 -2009 ( 4 )

தமிழ்நாடு அறிவியல் இயக்க 15 வது மாநில மாநாடு , நஞ்சையா லிங்கம்மாள் கல்யாண மண்டபம் , மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்தில் 02 / 03 & 04 - 10 -2009 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது, மாநாட்டில் அனைத்து அறிவியல் இயக்க முன்னோடிகள், வழிகாட்டிகள், விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், நிர்வாககுழு , செயற்குழு, பொதுகுழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர், முதல் நாள் முனைவர் ஆர்.இளங்கோவன் ( இயக்குனர் , ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ) அவர்களின் " தமிழகத்தில் தரமான பள்ளி கல்வி " கருத்தரங்கமும், முன்றாம் நாள் திரைப்பட இயக்குனர் திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் " பெண்ணும் ஆணும் சரி நிகரென ..." , AIPSN இன் முன்னால் தலைவர் முனைவர் V.B.ஆத்ரேயா அவர்களின் " உணவு பாதுகாப்பு " மற்றும் மும்பை TISS விஞ்ஞானி முனைவர் T.ஜெயராமன் அவர்களின் " கால நிலை மாற்றம் " கருத்தரங்கும் சிறப்பாக அமைந்தது, குறிச்சி IBEA பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அரங்கில் அனைவரையும் சிந்திக்கும் வகையில் மிகவும் சிறப்பாக அமைந்தது, மாநாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை சமர்பித்து விவாதிக்கப்பட்டது, புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது, புத்தகங்கள், அறிவியல் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டது.

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

அறிவியல் இயக்க பாடல் பதிவு 19, 20 -09-2009 ( 3 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கான அறிவியல் பாடல்கள் பயிற்சி மற்றும் ஒலி பதிவு மதுரையில் நடைபெற்றது சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், திருமிகு.வின்சென்ட், திருமிகு.G.சுப்ரமாணிஆகியோர் கலந்துகொண்டு பாடல்களை பதிவு செய்யப்பெற்றது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கூட்டம் ( 5 )

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் கூட்டம் பாண்டிச்சேரியில் நடைபெற்றது, சேலம் மாவட்டத்திலிருந்து மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமிகு. சுரேஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டார்

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

அறிவியல் பிரச்சார உபகுழு மாநில மாநாடு 15 & 16-08-2009 (2)


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் " அறிவியல் பிரச்சார உபகுழு மாநில மாநாடு " திருநெல்வேலி மாவட்டத்தில் 15 மற்றும் 16-08-2009 ஆகிய இருநாட்கள் சிறப்பாக நடைபெற்றது, சேலம் மாவட்டம் சார்பாக நிர்வாகிகள் திருமிகு.பாலசரவணன், திருமிகு.சுப்ரமணி, திருமிகு.அந்தோனி ஜோதி நம்பி மற்றும் திருமிகு.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

அறிவியல் வெளியீடு உபகுழு மாநாடு 08 & 09 -08-2009 (1)

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில அறிவியல் வெளியீடு மாநாடு 08 & 09-08-2009 ஆகிய இரண்டு நாட்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புகோட்டை தேவாங்கர் கலைக்கல்லுரி, பாரதி அரங்கில் நடைபெற்றது, சேலம் மாவட்டம் சார்பாக பொருளாளர் திருமிகு. ராமமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டார்

வியாழன், ஜூன் 18, 2009

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சிமுகாம் 13 & 14 -06-2009

தேசி குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி மாநில அளவில் மாவாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சிமுகாம் கரூர் மாவட்டம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் 13 மற்றும் 14 - 06 - 2009 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது இதில் மாநிலமுலுவதிலுமிருந்து ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர், சேலம் மாவட்டம் சார்பாக திரு. ஆண்டனி ஜோதிநம்பி அவர்கள் கலந்துகொண்டார்

சனி, மார்ச் 28, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானியல் (மாநிலஅளவிலான) பயிற்சிமுகாம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில அளவிலான சர்வதேச வானியல் ஆண்டு 2009 பயிற்சி முகாம், 28 & 29 / MARCH / 2009 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் , ரெட்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்.