அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
செவ்வாய், டிசம்பர் 07, 2010
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அழைப்பு
மாநில அளாவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவை K.P.R கல்லூரியில் கடந்த 3,4, மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது, இதில் நமது மாவட்டத்தை சார்ந்த 5 குழுக்களில் ஆங்கில வழி இளையவர் பிரிவின் குலூனி பள்ளி மாணவி தேசிய மாநட்டிற்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார், சிறந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கப்பட்டார் ,
மேலும் வருகின்ற 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், கிளை, தகவல் தொடர்பு முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் எந்தெந்த தேதிகளில் கலந்துகொள்ள முடியும் என்பது உட்பட மாவட்ட செயலாளர் இடம் தெரிவிக்கவும், பின்பு மாநில செயலாளருக்கு அனுப்பப்பட்டு முன்பதிவு மற்றும் தேவைகளின் அடிப்படையில் தாங்கள் மாநில மையத்தால் அழைக்கப்படலாம் ,
மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட உத்தேச திட்டங்கள்
27,28 & 29 மாலை வரையில் ஆய்வறிக்கை சமர்பித்தல், பின்
27 - மயில்சாமீ அண்ணாதுரை பங்கேற்ப்பு & பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள்,
28 - கண்காட்சி & Video conference முறையில் நாட்டிலுள்ள பல்வேறு விஞ்ஞானிகள் உடன் குழந்தை விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
30 - அறிவியல் சுற்றுலா & அப்துல்கலாம் உடன் கலந்துரையாடல்
31 - நிறைவு விழா - முதன் முறையாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள்) பங்கேற்ப்பு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு மலர் விளம்பரங்களை வரும் 12 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் , மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான நன்கொடை ரசீது
ரூ 500 ( × 20) மற்றும் ரூ1000 (× 20) உள்ளது வாய்ப்புள்ளவர்கள் வசூலித்து தருமாறும் வேண்டுகிறோம்
அன்புடன்
சுரேஷ்.G
98945 35048
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC 2010.
சனி, நவம்பர் 27, 2010
மாநில அளவிலான தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான அறிவிப்புகள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பக நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டு மாநில அளவிலான மாநாட்டில் சிறப்பாக ஆய்வு கட்டுரை சமர்பிக்க வாழ்த்துக்கள்,
மாநிலமாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆய்வுகளுக்கான முன்மதிப்பீடு ஏற்கனவே திட்டமிட்டபடி 20 மற்றும் 21 நவம்பர் தேதிகளில் கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று முடிந்துள்ளது.
மாநில மாநாடு 3, 4, 5 டிசம்பர் 2010 ல் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும்.
மாநாட்டிற்கான வரைவு திட்டம் வருமாறு-
முதல் நாள்: டிசம்பர் 3 - பிற்பகல் 3 மணிமுதல் 5 மணி வரை பதிவு
7.00 - 9.00 விஞ்ஞானிகள் சந்திப்பு. 1
9.00 மணி இரவு உணவு.
இரண்டம் நாள்: டிசம்பர் 4 - 9.00 மணிக்கு 18 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரியின் 18 இடங்களில் 18 மரங்கள் நடும் விழா குழந்தைகள் மாவட்ட வாரியாக ஊர்வலமாகச் சென்று மரங்கள் நடவேண்டும். (இதற்கானதிட்டம் முந்தைய நாள் இரவு பகிர்ந்துகொள்ளப்ப்படும்.)
காலை 10.00 - 12.00 துவக்க விழா
12.00 - 2.00 மதிய உணவு
2.00 - 5.00 ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் (12 அறைகளில் )
5.00 - 7.00 விஞ்ஞானிகளை சந்தியுங்கள் 2 (மூன்று அரங்கங்கள்)
7.00 - 9.00 கலை நிகழ்ச்சிகள்
9.00 - 10.00 இரவு உணவு
10.00 – 12.00 மேகமூட்டம் இல்லாத நிலையில் இரவு வான் நோக்கல் அல்லது குழந்தைகளுக்கான திரைப்படம்
மூன்றாம் நாள்: டிசம்பர் 5 - காலை 9.முதல் 12.00 மணி வரை
குழந்தைகளுக்கான 10 வெவ்வேறு இணைஅமர்வுகள்
ஒருங்கிணைப்பு:- திருமிகு அ.அமலராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்.
கல்வி உரிமை சட்டம் மீதான ஆசிரியர்களுக்கான பணிமனை (இணை & தொகுப்பு அமர்வுகள்)
ஒருங்கிணைப்பு:- திரு சா.சுப்பிரமணி, மாநில செயலாளர்.
மாநாட்டில் கலந்துகொள்ள இதுவரை ஒப்புதல் அளித்துள்ள பிரமுகர்கள் விவரம்
1. முனைவர். D.K பாண்டே , மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, இந்திய அரசு,
2. முனைவர். வின்சென்ட் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு,
3. முனைவர். ஆர். இராமானுஜம், விஞ்ஞானி, கணிதவியல் நிறுவனம், சென்னை,
4. முனைவர். இந்துமதி, விஞ்ஞானி, கணிதவியல் நிறுவனம் சென்னை,
5. பேரா. மாரிமுத்து, தலைவர், உயிரினங்களின் செயல்பாடுகள் துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
6. முனைவர். த.வி. வெங்கடேஸ்வரன், முதன்மை அறிவியல் அலுவலர்,
விஞ்ஞான் பிரசார், புதுடில்லி.
7. முனைவர். கே. கருணாகரன், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், கோவை.
( தலைவர், ஆலோசகர் குழு, 18 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு )
8. முனைவர். ச. கிருஷ்ணசாமி, தலைவர், உயிர் தொழில்நுட்பத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
இதுதவிர குழந்தை விஞ்ஞானிகளை மதிப்பீடு செய்ய 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் , விஞ்ஞானிகள் வருகை புரிய உள்ளனர்.
வருகை புரிய வாய்ப்புள்ள முக்கிய விருந்தினர்கள்
1. விஞ்ஞானி. அப்துல்கலாம், முன்னாள் ஜனாதிபதி.
2. முனைவர். டி. ராமஸ்வாமி. ஐ.ஏ.எஸ். செயலர், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை.
3. திரு தேவ. ஜோதி. ஜெகராஜன் .ஐ,ஏ,எஸ். முதன்மைச் செயலர், கல்வித்துறை, தமிழ்நாடு.
மாநாடு நடைபெறும் இடம் கோவையிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் அமைந்துள்ளது. எனவே கோவை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துசெல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே 3 ஆம் தேதி பிற்பகல் கோவையை அடையுமாறு தங்கள் பயணத் திட்டத்தினை வகுத்துகொள்ளவும்.
கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி அடைவதற்கான வழிகள்
(K.P.R. Institute of Engineering and Technology, S.F.No.204/2 Kollupalayam Village, Arasur, Coimbatore - 641 407, Phone No: 0422 2635600, web site: http://www.kpriet.com/ )
பேருந்தில் வருபவர்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சோமனூர் செல்லும் 20 ஏ பேருந்தில் ஏறி எல்.எம்.டபுள்யூ. எல்.பி.டி நிறுத்தத்தில் இறங்கவும்.
அவினாசி வழியாக வருபவர்கள் கருமத்தம்பட்டியில் இறங்கி, நகரபேருந்தில் ஏறி கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி எல்.எம்.டபுள்யூ. எல்.பி.டி நிறுத்தத்தில் இறங்கி வரவும்.
இரயில் நிலையம் மற்றும் உக்கடம் வழியாக வருபவர்கள் 90, 90 ஏ மற்றும் கருமத்தம்பட்டி , சோமனூர் பேருந்தில் ஏறி வரவும்.
குறிப்பு : மாநாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டியவைகளில் முக்கியமான சில -
1) தங்கள் ஆய்வுக்கட்டுரை புத்தகம் (Project Book),
2) தினசரி நாட்குறிப்பு (log book),
3) இருபக்கம் மிகாமல் ஆய்வு சுருக்கம் (Abstract) ஆங்கிலத்தில்,
4) ஐந்து பக்கம் மிகாமல் ஆய்வு பெருக்கம் (Abridged version) ஆங்கிலத்தில்,
4) மூன்று எண்ணிக்கைக்கு மிகாமல் அட்டை (chart)
5) ஐந்து எண்ணிக்கைக்கு மிகாமல் ஆய்வை விளக்க புகைப்படம் (Photo),
5) ஆய்வை விளக்க செயல்படும் நிலையில் உள்ள ஆய்வு மாதிரி (Working Model),
6) புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு /நேர்காணல் கண்ட தாள்கள்….
மேலும் தங்கள் இதுவரை கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் சமர்பிக்காமல் இருந்தால் உடனடியாக சமர்பிக்கவும்
1) குழு (Maxi Size), குழந்தை விஞ்ஞானிகள் (passport size), வழிகாட்டி ஆசிரியர் (passport size) ஆகியோரின் புகைப்படங்களில், பின்வருவனவற்றை குறிப்பிட்டு (CD) குறுந்தகட்டில் பதிவு செய்து தரவும், (பெயர், குழு தலைவர் பெயரின் கீழ் குழு தலைவர் என குறிப்பிடவும், பள்ளியின் பெயர், மாவட்டம், கைபேசிஎண்)
2) மேலும் இருபக்கம் மிகாமல் ஆய்வு சுருக்கம் (Abstract) ஆங்கிலத்தில் மற்றும்
ஐந்து பக்கம் மிகாமல் ஆய்வு பெருக்கம் (Abridged version) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதே (CD) குறுந்தகட்டில் பதிவு செய்து தரவும்.
* கல்லூரி வளாகத்திலேயே டிசம்பர் 3 பிற்பகல் முதல், டிசம்பர் 5 மாலை வரை தங்கும் வசதி செயப்பட்டுள்ளது, ஆகையால் எளிய படுக்கை வசதியுடன் வரவும்,
* கல்லூரி நெடுஞ்சாலையில் இருந்து தொலைவிலும், நகரத்தில் இருந்து எல்லையிலும் உள்ளதால் எளிதில் வெளியில் சென்று வர இயலாது, ஆகையால் தேவையான மற்றும் அத்தியாவசியமான பொருட்களை உடன் எடுத்து செல்லவும்
தகவல் தொடர்பிற்கு:
K.P.சுரேஷ்குமார், செயலாக்கக் குழு உறுப்பினர் NCSC 2010 – 9443391777
S. சேதுராமன், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் NCSC 2010 – 9942475155
முகமது பாதுசா, கோவை மாவட்ட செயலாளர் TNSF - 9486827773
N.மாதவன், மாநில ஒருங்கிணைப்பாளர் NCSC 2010 - 9443724762
வாழ்த்துக்களுடன்
கோ.சுரேஷ், ( 9894535048 )
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010.
திங்கள், நவம்பர் 01, 2010
" மாவட்ட அளவிலான 18 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு"


jkpo;ehL mwptpay; ,af;fj;jpd; rhh;ghf 31-10-2010 - Qhapw;Wf;fpoik Nrhdh njhopy;El;g fy;Y}hpapy;> khtl;l mstpyhd “18 tJ Njrpa Foe;ijfs; mwptpay; khehL” eilngw;wJ> khehl;il Nrhdh njhopy;El;g fy;Y}hpapd; mwptpay; Jiwj; jiyth; K.fUzhfud; Jtf;fpitj;J rpwg;Giuahw;wpdhh;> khehl;by; khtl;lj;jpd; gy;NtW gFjpfspy; ,Ue;J 16 gs;spfspd; 40 Fof;fis rhh;e;j 165 “,sk;; tpQ;Qhdpfs;” – “epytsk;; - tsj;Jf;fhf gad;gLj;JNthk;> tUq;fhyj;Jf;Fk; ghJfhg;Nghk;” vd;w nghJ jiyg;gpd; fPo; gy;NtW cg jiyg;Gfspy; 40 Ma;twpf;iffds rkh;gpj;jdh;;;. ,th;fspy; ,Ue;J rpwe;j 5 Ma;Tfis Ntshz;ik Jiw> kz;zpay; Jiw rhh;e;j 12 kjpg;gpl;lhsh;fs; Fo Njh;T nra;jdh;>
1) muR cahepiyg; gs;sp> fhkyhGuk;> XkY}h; - P.fiyaurd; Fo
2) [p.b. eha;L Jsph; ,y;yk;> jpU rpd;drhkpIah eLepiyg; gs;sp Mj;J}h; -
S.mg;Jy; fhjh; Fo
3) khy;Nfh tpj;ahyhah nkl;hpf; Nky;epiyg; gs;sp> Nkl;^h; - A.tpNehjpdp Fo
4) tpehafh tpj;ahyhah nkl;hpf; Nky;epiyg; gs;sp> Nryk; - mQ;ryp ghyhNrh Nll; Fo
5) FSdp nkl;hpf; Nky;epiyg; gs;sp> Nryk; - D.N[hl;\dh Fo
,th;fs; Nf. gp. Mh; nghwpapay; fy;Yhp Nfhdtapy; brk;gh; 3>4>5 Njjpfspy; eilngwTs;s khepy khel;by; fye;Jnfhz;L Ma;twpf;iffds rkh;gpg;ghh;fs;.
gpd;dh; eilngw;w epiwT tpohtpy; ,d;[pdpah; K.Gfo; ,sk;; tpQ;Qhdpfis tho;j;jp Ngrpdhh;> nghpahh; gy;fiyf; fofj; JizNte;jh; Oidth; fp.Kj;Jr;nropad; ghprspj;J ghuhl;b Ngrpdhh;.
புதன், அக்டோபர் 27, 2010
திங்கள், அக்டோபர் 18, 2010
சேலம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 5 பதிவுகளுக்கு மேலுள்ள பள்ளிகளுக்கான பள்ளியளவில் குழந்தைகள் அறிவியல் மாநாடு



சேலம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இடைக்கால ஆய்வு
வியாழன், செப்டம்பர் 02, 2010
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம்
வியாழன், ஜூலை 01, 2010
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வலைப்பூ
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்போடு ஒருங்கிணைந்து நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010 இக்கான தகவல்களை நாம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவிலான வலைப்பூ ( BLOGSPOT) துவக்கப்பட்டுள்ளது
கீழ் உள்ள LINK சொடுக்கவும்
Link: http://ncsc2010tnsf.blogspot.
செவ்வாய், ஜூன் 29, 2010
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010 இகான சேலம் மாவட்ட தாலுக்க ஒருங்கிணைபாளர்கள் கூட்டம் 20-06-2010 ( 2 )
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் சார்பாக 20-06-2010 அன்று தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010 இகான சேலம் மாவட்ட தாலுக்க ஒருங்கிணைபாளர்கள் கூட்டம் நடைபெற்றது , நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.சேதுராமன் கலந்துகொண்டு விவரித்தார், மேலும் தலுக்க ஒருங்கிணைபாளர்கள், நிர்வாகிகள் என 15 பேர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010 இக்கான திட்டமிடல் கூட்டம் (06-06-2010) 1
சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் 2010 திட்டமிடல் கூட்டம் 06/06/2010 அன்று 4.30 PM TO 7.15 PM வரை நடைபெற்றது
கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து பரவலாக 26 பேர் கலந்துகொண்டனர்,
1) திருமிகு K.P. சுரேஷ்குமார் - ( NCSC 2010 செயலக்ககுழு ) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றிவிவரித்தார்
2) திருமிகு .அந்தோனி ஜோதி நம்பி - ( NCSC 2010 மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ) பள்ளிகளை மாநாட்டிற்காக எவ்வாறு அணுகுவது என விவரித்தார்
3) திருமிகு. G.சுரேஷ் - ( NCSC 2010 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ) இந்த வருட தலைப்பு மற்றும் உப தலைப்பு பற்றியும் தெரிவித்தார்
4) திருமிகு. சஹஸ்ரநாமம் - ( மாநில செயற்குழு உறுப்பினர் ) மாநில வழிகாட்டுதல் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றியும்
5) திருமிகு. சசிகலா - ( மாவட்ட துணை தலைவர்) பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களை அணுகுவது அறிவியல் இயக்கத்தில் இணைப்பது குறித்து விவரித்தார்
6) திருமிகு. ராமமூர்த்தி - (மாவட்ட பொருளாலர்) மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நிதி தேவை பற்றி விவரித்தார்
கூட்டத்தின் இறுதியில்
தாலுக்க அளவிலான ஒருங்கிணைபாளர்கள் ( 10 ) நியமிக்கப்பட்டுள்ளனர்.

