இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சேலம் மாவட்ட பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேலம் மாவட்ட பயிற்சி முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 06, 2010

பயிற்சி முகாம், கோனேரிபட்டி, எடப்பாடி 09 & 10-01-2010 ( 1 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் பயிற்சி முகாம் 09 & 10-01-2010 ஆகிய இரு நாட்கள் எடப்பாடி கோனேரிபட்டியில் திருவள்ளுவர் தமிழ் பள்ளியில் நடைபெற்றது, பயிற்சிமுகமில் 25 பேர் வரை கலந்து கொண்டானர்,
முதல் நாள் அறிமுகத்திற்கு பிறகு மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்களின் சூரியகிரகண விளக்கநிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சகசரநாமம் அவர்கள் அறிவியல் இயக்கம் ஏன் எதற்கு மற்றும் இயக்க வரலாறு குறித்து விலகினார், இடையில் அறிவியல் பாடல்கள் படபெற்றது, இரண்டாம் நாள் மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.செந்தமிழ் செல்வன் அவர்கள் நாம் வித்தியசாமானவர்கள் எனும் தலைப்பிலும், இயங்குவோம் இயக்குவோம் எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்கினார் , முடிவில் குழுவிவாதம் நடைபெற்று தான் சார்ந்த பகுதியில் செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது, நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் எடப்பாடி கிளை பொறுப்பாளர் திருமிகு.ஸ்டாலின் மற்றும் திருமிகு.தமிழ்இயன்
ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

ஞாயிறு, ஜூலை 19, 2009

சேலம் மாவட்ட வானியல் பயிற்சி முகாம் 18-07-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,சேலம் மாவட்டத்தின் சார்பாக வானியல் பயிற்சி முகாம் திருமிகு.அஜித் எஸ் பத்மநாபன் அவர்களால் 18-07-2009 அன்று நடத்தப்பட்டது, நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் ராம்குமார், லோகேஷ்சக்ரவர்த்தி, கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். குறிப்பாக கிரகணங்கள் பற்றிய பல தகவல்களை வழங்கினார்.