இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

குகை கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குகை கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 04, 2010

சர்வதேச பல்லுயிர்ம ஆண்டு 2010 சிறப்பு நிகழ்ச்சி குகை கிளையில் 03-03-2010 ( 7 )

தமிநாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட குகை கிளை சார்பாக சர்வதேச பல்லுயிர்ம ஆண்டு 2010 சிறப்பு நிகழ்ச்சி 03-03-2010 அன்று சென்னி நிலையத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியை திருமிகு.ராம்குமார், திருமிகு.சண்முகம் ஐயாஒருங்கிணைத்தனர், நிகழ்ச்சியில் கருத்தாளர் இனைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு, மற்றும் திருமிகு.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பல்லுயர்மம் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் கலந்துகொண்ட குழந்தைகளிடம் விளக்கி பேசினார்கள், திருமிகு.சுரேஷ் கலந்துகொண்டு அறிவியல் பாடல்கள் பாடினார்

திங்கள், பிப்ரவரி 08, 2010

கிரகண விளக்க நிகழ்ச்சி குகை கிளை 10-01-2010 ( 6 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குகை கிளை சார்பாக சூரிய கிரகண நிகழ்வை விளக்கும் நிகழ்ச்சி 10-01-2010 அன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க துணை தலைவர் திருமிகு.பாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தார், நிகழ்ச்சியை குகை கிளை பொறுப்பாளர் திருமிகு சண்முகம் மற்றும் திருமிகு.ராம்குமார் ஒருங்கிணைத்தனர்

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

சர்.சி.வி இராமன் துளிர் இல்ல நிகழ்ச்சி 20-09-2009 ( 5 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளையின் சர்.சி.வி இராமன் துளிர் இல்ல குழந்தைகளுடன் மாவட்ட துணை தலைவரும் , துளிர் இல்ல ஒருங்கினைப்பலருமான திருமிகு.பாண்டியன் கலந்துகொண்டு 20-09-2009 அன்று துளிர் இல்ல கூட்டத்தை நடத்தினார், நிகழ்ச்சியில் துளிர் இல்ல குழந்தைகள் பங்கேற்றனர், குகை கிளை திருமிகு.ஷண்முகசுந்தரம், திருமிகு.ராம்குமார், திருமிகு.லோகேஷ் கலந்துகொண்டனர், சுற்று சூழல்பாதுகாப்பு, மரம்நடுதல், என பல கலந்துரையாடல் நடைபெற்றது.

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர்இல்ல நிகழ்ச்சி, குகை கிளை 22-08-2009 (4)


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளையின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர்இல்ல குழந்தைகளுடன் தஞ்சைமாவட்ட கருத்தாளர் திருமிகு.தயீம்அன்ஸாரி கலந்துகொண்டு 22-08-2009 சனிக்கிழமை அன்று துளிர் இல்ல கூட்டத்தை நடத்தினார், நிகழ்ச்சியில் 15 குழந்தைகள் பங்கேற்றனர், குகை கிளை திருமிகு.ராம்குமார் மற்றும், திருமிகு.ராஜ்குமார் உடனிருந்தார், மூடநம்பிகைகளை களைவது, அனைவரிடமும் தேவைகளை கேட்டு பெற முயல்வது, வகுப்பறைகளில் கேள்விகள் கேட்பது, மற்றும் துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடினார்.

சர்.சி.வி இராமன் துளிர்இல்ல நிகழ்ச்சி (குகை கிளை) 22-08-2009 ( 3 )


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளையின் சர்.சி.வி இராமன் துளிர் இல்ல குழந்தைகளுடன் தஞ்சைமாவட்ட கருத்தாளர் திருமிகு.தயீம்அன்ஸாரி கலந்துகொண்டு 22-08-2009 சனிக்கிழமை அன்று துளிர் இல்ல கூட்டத்தை நடத்தினார், நிகழ்ச்சியில் 20 குழந்தைகள் பங்கேற்றனர், குகை கிளை திருமிகு.ராம்குமார் உடனிருந்தார், மூடநம்பிகைகளை களைவது, அனைவரிடமும் தேவைகளை கேட்டு பெற முயல்வது, வகுப்பறைகளில் கேள்விகள் கேட்பது, மற்றும் துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடினார்.

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2009

பன்றிக்கய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி குகை கிளை சார்பாக ( 2 )


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பாக பன்றிக்கய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ வித்யா மந்திர் உயர்நிலை பள்ளியில் 22-08-2009 அன்று மாலை 3:00 மணிமுதல் 5:00 மணி வரை நடைபெற்றது நிகழ்ச்சியில் திருமிகு.D.திருநாவுகரசு,உதவி பேராசிரியர், Medical Microbiologist,(அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவக்கல்லுரி, சேலம்.) மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட கருதாளர் இணைய ஒருங்கிணைப்பாளர் சிறப்புரையாற்றினார், நிகழ்ச்சியை குகை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர் இல்ல குழந்தைகள் என அனைவரும் ஒருங்கிணைத்து சிறப்பித்தனர் 50 இகும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர், மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், குகை கிளை நிர்வாகிகள் திருமிகு.சண்முகம் ஜயா, திருமிகு.ராம்குமார், திருமிகு.ராஜ்குமார் கலந்துகொண்டனர். தஞ்சைமாவட்ட கருத்தாளர் திருமிகு.தயீம்அன்ஸாரி அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி அனைவரையும் சிந்திக்கும் வகையில் அமைந்தது, நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக துளிர்இல்ல குழந்தைகளாகவே அறிவியல் வெளியீடு புத்தகவிற்பனை செய்தனர்.(Rs 545)

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகைகிளை துளிர்இல்ல துவக்கவிழா 16-08-2009 (1)


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பாக துளிர் இல்ல துவக்க விழா நிகழ்ச்சி 16-08-2009 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணிவரை நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி 46 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் திருமிகு. E.பாலசுப்பிரமணியம் மற்றும் ரோட்டேரியன் V.பொன்முடி வழக்கறிஞர் ஆகியோர்முன்னிலை வகித்தனர், முன்னதாக அனைவரையும் திருமிகு.ராம்குமார் வரவேற்றார், சர்.சி.வி ராமன் துளிர் இல்லத்தை செயலர்.திருமிகு.ஜெயமுருகன் துவக்கிவைத்து துளிர் இல்ல நிர்வாகிகளை நியமித்தார், துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றி துணை தலைவரும், துளிர் இல்ல பொறுப்பாளருமான திருமிகு.பாண்டியன் விளக்கினார், கலந்துகொண்ட அனைவருக்கும் திருமிகு.எக்ஸ்னோரா சண்முகம் அவர்கள் நன்றி கூறினார்.

புதன், ஜூலை 22, 2009

சூரியகிரகண நேரடி விளக்க நிகழ்ச்சி 22-07-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பாக சூரியகிரகண நேரடிவிளக்கம் திருமிகு. அஜித்.எஸ்.பத்மநாபன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் குகை கிளை உறுப்பினர்கள் திருமிகு.ஷண்முகம், திருமிகு.சரவணகுமார், திருமிகு.ராஜ்குமார், திருமிகு.ராம்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் பெரியவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து வயதினரும் நிகழ்வினை கண்டுரசித்தனர்.

நிகழ்ச்சியின் செய்தி தி ஹிந்து நாளிதழில் வெளியாகியுள்ளதை காண சொடுக்கவும்.

www.hindu.com/2009/07/23/stories/2009072353020300.htm


திங்கள், ஜூலை 20, 2009

கிரகணம் காணலாம் வாங்க! குகை கிளை வானியல் நிகழ்ச்சி 19-07-2009


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குகை கிளை சார்பாக " கிரகணம் காணலாம் வாங்க! " வானியல் நிகழ்ச்சி 19-07-2009 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியை திருமிகு.சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார், மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் கிரகணம்பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கமாக விவரித்தார், குகை கிளை உறுப்பினர்கள் உட்பட சுமார் 60 கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அறிவியல் வெளியீடு புத்தக விற்பனை நடைபெற்றது.

சனி, ஜூலை 04, 2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குகை கிளை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர் இல்ல கூட்டம் 04-07-2009


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், குகை கிளையின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர் இல்லம் சார்பாக கூட்டம் 04.07.2009 அன்று நடைபெற்றது, கூட்டத்தில் குகை கிளை ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ராஜ்குமார், குகை கிளை உறுப்பினர்கள், துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.சரண்யா, துளிர் இல்ல நிர்வாகிகள், உறுப்பினர்கள் என இருபது நபர்கள் வரை கலந்துகொண்டனர், நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட செயலாளர் திருமிகு.ஜெயமுருகன் வருகைபுரிந்து துளிர் இல்ல குழந்தைகளின் பள்ளி கல்வியில் மற்றும் அறிவியலில் அவர்களின் அச்சத்தை போக்கும்வகையில் எளியமுறையில் பாடல், எளிய பரிசோதனைகள், நினைவாற்றல், எவ்வாறு கல்வியை புரிந்துக்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை வழங்கினார்.

திங்கள், ஜூன் 29, 2009

துளிர் இல்ல துவக்க விழா நிகழ்ச்சி சேலம் குகை கிளை 28-06-2009


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குகை கிளை சார்பாக 28-06-2009 அன்று அறிவியல் இயக்க குழந்தைகளுக்கான துளிர் இல்ல துவக்க விழா நிகழ்ச்சி, குகை கிளை பொறுப்பளார் திரு. ராஜ்குமார் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட துளிர் இல்ல பொறுப்பாளர் திரு. பாண்டியன் கலந்துகொண்டு துளிர் இல்ல செயல்பாடுகள் குறித்து விவரித்தார், செயலர் திரு.ஜெயமுருகன் எளிய அறிவியல் பரிசோதனைகள் மூலம் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனைகளை தூண்டினார் மேலும், நிகழ்ச்சியில் குகை கிளை நண்பர்கள் திரு. சண்முகசுந்தரம், திரு. சரவணகுமார், திரு.ராஜ்குமார், திரு.கோகுல், திரு.பிரசாத்உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர், அம்மாபேட்டை கிளை சார்பாக செயலர் திரு. கார்த்திக், திரு.ஒப்லி என அனைவரும் கலந்துகொண்டனர் , இறுதியாக முறையாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் துளிர் இல்லம் துவக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

புதன், மே 27, 2009

சேலம் குகை கிளை அறிவியல் நிகழ்ச்சிகள் 24-05-2009






தினமணி நாளிதழில் இயக்க செய்தி
அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் விளக்க நிகழ்ச்சி
First Published : 25 May 2009 08:54:00 AM IST
Last Updated :
சேலம், மே 24: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் குறித்த விளக்க நிகழ்ச்சி, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச வானியல் ஆண்டாக இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வானியல் குறித்த உண்மைகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கப்படுகின்றன.
அறிவியல் இயக்க சேலம் குகை பகுதி கிளை சார்பில் இதற்கான நிகழ்ச்சி மூங்கப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
46-வது டிவிஷன் கவுன்சிலர் இ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். எஸ்க்னோரா சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
அறிவியல் இயக்க கருத்தாளர்களால் வானியல் விளக்க உரை, குறும்படம் திரையிடல், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் ஜெயமுருகன், கருத்தாளர் மோகன்ராஜ், பொருளாளர் பவளவள்ளி, கார்த்திக், சுரேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, டிசம்பர் 28, 2008

நலுவுபட காட்சி, குகை கிளை, கருத்தாளர்.: தி. ஜெயமுருகன்





திரு. ஜெயமுருகன் அவர்களின் சேலம் குகை கிளை நிகழ்ச்சி,
அணு முதல் அண்டம் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சி, பிரபஞ்சம் பற்றிய படவிளக்க கட்சி நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி .