இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஆத்தூர் கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்தூர் கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 08, 2010

விஞ்ஞான் ரயில் 13, 14 & 15-01-2010 ( 6 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆத்தூர் கிளை சதாசிவபுரம்துளிர் இல்ல குழந்தைகள் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு நாட்டின் அறிவியல் வளர்ச்சியை விளக்கிய விஞ்ஞான் ரயிலை பார்வையிட்டனர்

திங்கள், டிசம்பர் 21, 2009

அனைவருக்கும் கல்வி ஆசிரியபயிற்றுனர் கூட்டத்தில் அறிவியல் நிகழ்ச்சி,ஆத்தூர் 05-12-2009 ( 5 )

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் அனைவர்க்கும் கல்வி இயக்க ஆசிரிய பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்களுக்கான கூட்டம் 05-12-2009 அன்று பெத்தநாயக்கம்பாளையம் அரசு மாணவர் பள்ளியில் நடைபெற்றது கூட்டத்தில் அறிவியல் இயக்கம் சார்பாக மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார், அறிவியல் இயக்க செயல்பாடுகள், துளிர், விஞான சிறகு, ஜந்தர் மாந்தர், அறிவியல் வெள்யீட்டு புத்தகங்கள் குறித்தும் அறிமுகபடுத்தினார்

சனி, டிசம்பர் 19, 2009

அறிவியல் கண்காட்சி ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வீரகனூர். ஆத்தூர். 23 & 24-11-2009 ( 4 )

ஆத்தூர் மாவட்டம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வீரகனூரில் 23 & 24-11-2009 ஆகிய நாட்களில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், துணை தலைவர் திருமிகு.பாண்டியன், கருதாளர் திருமிகு.தாமோதரன், ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கோபால், அம்மாபேட்டை கிளை செயலர் திருமிகு.கார்த்தி ஆகியோரே கலந்துகொண்டு சிறப்புரை, ஒரிகாமி, சூரிய குடும்பம் விளக்க நிகழ்ச்சி, தொலைநோக்கி நிகழ்ச்சி, அறிவியல் பாடல்கள் என நிகழ்சிகளை நிகழ்த்தினர்

ஹோமி பாபா துளிர் இல்ல துவக்கவிழா ஆத்தூர் 23-11-2009 ( 3 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆத்தூர் கிளை, ஹோமி பாபா துளிர் இல்ல துவக்கவிழா 23-11-2009 அன்று நடைபெற்றது, விழாவில் சேலம் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன் மற்றும் துணை தலைவர் திருமிகு.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார், நிகழ்ச்சியை M.P.K.சீனிவாசன் அவர்கள் ஒருகினைத்தார்,

வெள்ளி, அக்டோபர் 30, 2009

சமம் பரிசளிப்பு விழா 08-10-2009 ( 2 )

சேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க சமம் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுபெற்ற ஆத்தூர் கிளை பெதனாயக்கம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிக்கு 08-10-2009 அன்று பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணை தலைவர் திருமிகு.பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு மாணவிக்கு பரிசுகளை வழங்கினார், மேலும் துளிர் திறனறிதல் தேர்வுக்கான அறிவிப்பும் செயப்பட்டது.

புதன், அக்டோபர் 21, 2009

ஆத்தூர் அறிவியல் நிகழ்ச்சிகள் 29-09-2009 ( 1 )

சேலம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆத்தூர் கிளை சார்பாக 29-09-2009 அன்று பெதனாயக்கம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் திருமிகு.தாமோதரன் அவர்களின் அறிவியல் சிறப்புரைகளுடன்கூடிய தொலைநோக்கி நிகழ்ச்சி மற்றும் அறிவியல் இயக்க கருத்தாளர் திருமிகு.மோகன்ராஜ் அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெள்ளி, ஜூலை 17, 2009

ஆத்தூர் பெத்தநாயக்கம் பாளையம் வானவில் துளிர் இல்ல நிகழ்ச்சி 16-07-2009

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆத்தூர் கிளை பெத்தநாயக்கம் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வானவில் துளிர் இல்லத்தில் கிரகணம் காணலாம் வாங்க ! , சூரிய கிரகண விளக்க நிகழ்ச்சி 16-07-2009 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் திருமிகு.ஜெயமுருகன், துணை தலைவர் திருமிகு.பாண்டியன், மற்றும் திருமிகு.ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினர், நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு மகிழ்ந்தனர், சமம் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற செல்வி. பவித்ராவை பாராட்டி அறிவியல் வெளியீடு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.