இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

அறிவியல் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 12, 2010

மர்ம தேசம் - இருள் பொருள் இருள் ஆற்றல் - டாக்டர் டி.வி.வெங்கடேசுவரன். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளர்

மர்ம தேசம் - இருள் பொருள் இருள் ஆற்றல் 1

by Venkateswaran Thathamangalam Viswanathan on Thursday, July 22, 2010 at 6:22pm
அப்போது பத்துப் பதினோரு வயதிருக்கும் சிறுமி வேராவிற்கு. வாஷிங்டன் நகரில் தனது வீட்டு ஜன்னலிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தள். இரவு. மேகமற்ற தெளிவான வானம். பட்டுக் கருநீல புடவையில் பதித்த வைரம் போல விண்மீன்கள் இரவு வானில் ஜொலித்தன. மனதை மயக்கும் இந்த காட்சியில் மயங்கி வாய்த்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வேரா.
அவளது படுக்கை அறை ஜன்னல் வடக்கு நோக்கி இருந்தது. ஜன்னல் வழியே வடபுல விண்மீன்கள் தாம் அவளுக்கு புலப்பட்டன. இரவில் கண் விழித்த வேரா விண்மீன்களின் இயக்கம் கண்கொண்டு வியந்தாள். வடபுல விண்மீன்கள் துருவ நக்க்ஷத்திரத்தை சுற்றி வளம் வந்த காட்சி கண்டு பிரமித்துப் போனாள். அன்று அவளது முதல் காதல் பிறந்தது; வாழ் நாள் முழுவதும் அவள் விண்மீன்கள் மீதும், பிரபஞ்சம் மீதும் காதல் கொண்டு திரிந்தாள்.
உறங்கப் போவதற்கு முன்பு வடகிழக்கு அடிவானில் தெரிந்த விண்மீன்கள், மெல்ல மெல்ல வட-அடிவானைத் தொட்டு வட-மேற்கு அடிவனை அடைந்து பின்னர் மறுபடி வட திசையில் சற்று மேல உயர்ந்து காட்சி தந்தது. எல்லா விண்மீன்களும் சலனம் செய்ய, வட திசையில் அவ்வளவு பிரகாசமாக இல்லாத வட விண்மீன்; துருவ நக்க்ஷத்திரம் சலனமே இல்லாமல் ஆணி அடித்தாற்போல அதே இடத்தில் இருந்தது. வட திசை விண்மீன்கள் எல்லாம் இந்த துருவ மீனை சுற்றி வரும் செக்கு மாடுகள் போல தென்பட்டன. வியந்தாள் வேரா.
1928ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று பிலிப் கூப்பர் ரோஸ் கூப்பர் தம்பதியினருக்கு இரண்டவது மகளாக பிறந்தார் வேரா கூப்பர். இவரது தந்தை அவர்களது குடும்பத்தில் முதல் முதல் கல்லூரிக்கு சென்றவர். மின்பொரியாளர். தொலைபேசி துறையில் முன்னணியில் இருந்த பெல் நிறுவனத்தில் பணியாற்றியவர். பின்னர் தாமே சுய தொழில் செய்யவேண்டுமென்று பணியை விட்டு விலகி பற்பல தொழில்கள் செய்தார். அவரும், ரோஸ்சும் கல்வி மீது ஆர்வம கொண்டவர்கள். இருவரும் தமது குழந்தைகள் படிப்பதில் கல்வி கற்பதில் பெரும் ஆர்வம் செலுத்தினர்.
தாயாரின் பள்ளித் தோழி கோல்டி கோல்டுபெர்க் அந்தக்காலத்திலேயே உயர் கல்வி கற்க வேண்டும், பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுடயவராக இருந்தவர். பொறியியல் கல்லூரியில் பெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர். அவர் மிசேல் கோல்டுபெர்க் எனும் கணிதவியலாலரை திருமணம் புரிந்திருந்தார். அவர் அந்த குடும்பத்தோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தார். கோல்டியும் அவரது கணிதவியல் கணவரும் வானவியல் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். இரவு வான் பைத்தியம் பிடித்த வேரா விற்கு விண்மீன்களை அடையாளம் காணுவது எப்படி, விண்மீன் தொகுதி (constellation) இனம் காணுவது என கற்றுக்கொடுத்தனர். வேராவிற்கு இவை பெரும் ஆர்வமுட்டின. பெயர்கள் முதலியவற்றில் அவளுக்கு அவ்வளவு ஆர்வம் ஏற்படவில்லை; மாறாக, விண்மீன் தொகுதியை மாதம் தோறும் உற்று நோக்கினால் அவையும் தினப்படி சலனத்தை தவிர மாத/ வருட சலனம் இருப்பதையும் காணலாம். ஒரு குறிப்பிட்ட மாதத்தில்/ பருவதில் தென்படும் விண்மீன் தொகுதிகள் வேறு மாதத்தில்/ பருவத்தில் தென்படாது ; அல்லது வேறு கால பொழுதில் தென்படும்.
ஜனவரி மாதத்தில் மாலை ஆறு மணிக்கு கிழக்கு கிழ்வானில் தென்படும் காஸ்சிஒபிய எனப்படும் ஷர்மிஷ்ட விண்மீன் தொகுதி விண்மீன் தொகுதி ஜூலை மாதத்தில் அதே மாலை ஆறு மணிக்கு மேற்கு அடிவானில் தென்படும். தொடர்ந்து உற்று நோக்கி விண்மீன்களின் இயக்கத்தை கண்டறிந்தாள் வேரா.
மேலும், அவ்வபோது இரவு வானில் எரிநட்சத்திரம் விழும். மத்தாப்பு போல கரும் இரவு வானில் ஒளி கீற்றை ஏற்படுத்தி வன ஜாலம் கட்டும். சில இரவுகள் வேரா கண்விழித்து எரி நட்சத்திரம் விழவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள். காலையில் இரவு கண்ட காட்சியை சித்திரமாக வரைந்து விடுவாள்.

சுமார் 14 வயதிற்கும் பொது அவளது தந்தையின் உதவியுடன் தன்னே ஒரு தொலைநோக்கி தயாரித்தாள் வேரா. தொலைநோக்கி உருவாக்க தேவையான லென்ஸ், குழாய் என அனைத்தையும் அவளே சேகரித்து வந்தால். தந்தையின் உதவியுடன் பொருத்தி தொலைநோக்கி உருவாக்கினாள். தொலைநோக்கி கொண்டு இரவு வானை மேலும் உற்று நோக்க தொடங்கினாள். அந்த ஊரில் உள்ள வானவியல் தன்னார்வு அமைப்பினை கண்டுபிடித்து உறப்பினர் ஆனார். தொடர்ந்து அந்த வானவியல் கழக கூட்டங்களில் பங்கெடுத்தார். ஹரோல்ட் சாப்லி முதற்கொண்டு அன்றய முன்னணி வானவியல் அறிஞர்களை சந்திக்க முடிந்தது; அவர்களது உரைகள் வேராவிர்க்கு உத்வேகமளித்தது.
சுமார் பதினாலு பதினைந்து வைத்திருக்கும் போது தொலைநோக்கி உதவியுடன் இரவு வானின் இயக்கத்தை புகைப்படம் எடுக்கவும் துணிந்தாள். காமெராவின் வாயை அசைக்காது நிலையாக வெகு நிறம் திறந்து வைத்தால் விண்மீன் இரவு வானில் சலனித்து ஓடும பொது புகைப்படத்தில் ஒளி கீற்று போல தோற்றம் ஏற்ப்படுத்தும் என ஒரு அறிவியல் நூலில் படித்த அவர் அதனை தாமே சோடனை செய்யவும் முனைந்தார். அப்படி புகைப்படம் எடுத்து புகைப்பட தாளினை பதம் (வாஷ்) செய்து புகைப்பட பிரதி எடுக்க ஸ்டுடியோவில் தந்தார். அடுத்த நாள் சென்ற அவரிடம் ஸ்டுடியோ நடத்துபவர் ‘நான் பிரதி எதுவும் எடுக்க வில்லை; புகைப்படம் எல்லாம் கொடு கோடக இருக்கிறது’ என்றாராம்! மகிழ்சியில் ஆழ்ந்த அவர் துள்ளிக் குதித்து அதைத் தான், அதைத் தான் எதிர்பார்த்ததாக கூறினார்.
பள்ளி கல்வி முடித்த அவர் வச்சார் பெண்கள் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். அங்கு வானவியலை விருப்ப பாடமாக எடுத்துப் படித்தார். அவரது ஆர்வம், துடிப்பு காரணமாக அவருக்கு உதவித்தொகை அள்ளித்தது கல்லுரி. கல்லுரி படிப்பின் போது அவருக்கும் ராபர்ட் ஜே ரூபின் என்பருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
சிறு பெண்னாக இருந்தவரை அவரது வானவியல், அறிவியல் ஆர்வத்திற்கு தடை இருக்கவில்லை; ஆனால் ஆரம்ப கல்வி முடித்து உயர் கல்வி என வந்தபோது தடை ஏற்பட்டது. அவருக்கு உக்கமும் உதவியும் அள்ளித தந்தையே வானவியல் கல்வியல் எந்த பிரோயோஜனமும் இல்லை; பெண்களுக்கு அறிவியல் துறை பொருந்தாது கூறி ஆர்வத்தை மட்டுப்படுத்தினார். ஐன்ஸ்டீன் பின்னாளில் பணியாற்றிய புகழ் மிக்க பிரின்ஸ்டன் பல்கலகழக்கத்திற்கு முதுகலை கல்விபெற விண்ணப்ப படிவம் கேட்டு எழுதிய வேராவிற்கு அங்கிருந்து பதிலே வரவில்லை! பெண் என்பதால் அறிவியல் கல்வி; அதுவும் வானவியல் சரிவராது என்று கருதியே பிரின்ஸ்டன் விண்ணப்ப படிவம் கூட அனுப்பவில்லை. 1975 வரை பிரின்ஸ்டன் பெண்களை வானவியல் கல்வியில் சேர்க்கவில்லை. இரவில் மற்ற ஆண்களுடன் தனியாக எப்படி வான ஆராய்ச்சி செய்வார்கள் என்ற “கவலையே” இதற்கு காரணம்! தன்னது உக்கத்தை கைவிடாது வேரா கார்னெல் பல்கலைகழகத்திற்கு மனு செய்தார். இயற்பியல் கல்வி தர சம்மதித்தது. கணவன் மனைவி இருவரும் கார்னெல் சென்று உயர் கல்வி கற்க முடிவு செய்தனர். இயற்பியல் பிதாமகர்கள் பிலிபி மோரிசென், ரிச்சர்ட் ஃபயின்மேன் ஹான்ஸ் பத்தே முதல்யோர் கற்பிக்க தீட்டிய வைரம் போல ஜொலித்த வேரா அங்கு முதுநிலை கல்வியை முடித்தார்.
முதுகலை கல்வி படிக்கும் போது ஆண்டு இருந்த கொள்கைக்கு மாறாக அவரது ஆய்வுக் கருத்தை வெளியிட்டு பெரும் சர்சைக்குள்ளனர். கலேக்ஸ்சி எனப்படும் உடுமீன் கூட்டம் என்ற அமைப்பு உள்ளது. நமது சூரியன் உட்பட நமது கண்களுக்கு புலப்படும் விண்மீன்கள் எல்லாம் பால்வழி மண்டலம் எனப்படும் உடுமீன் கூட்டம் சார்ந்தவை. நமது பால்வழி மண்டலம் போல பல கோடிக்கணக்கான உடுமீன் கூட்டங்கள் நமது பிரபஞ்சத்தில் உண்டு. இந்த உடுமீன் கூட்டங்கள் எல்லாம் பிரபஞ்ச தோற்றமான பெரும் வெடிப்பிற்கு பிறகு ஒன்றைவிட்டு ஒன்று விலகுகிறது என்பது அன்று வழங்கிய கருத்து. தனது முதுநிலை ஆய்வு வழி உள்ளபடியே உடுமீன் கூட்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை, ஒன்றை ஒன்று வலம் வருகிறது என்ற கருத்தை எட்டினார் இவர். அறிவியலில் பெரும் ஜாம்பவான்கள் கூறிய கருத்திற்கு விரோதமானது. வெறும் 22 வயது கூட நிரம்பாத இளம் பெண் முற்றிலும் நேர் மாறான கருத்தை கூறியது கேட்டு அறிவியல் உலகம் அதிர்ச்சியடைந்தது, பலர் அவரை கேலி செய்தனர்.
இதற்கு இடையில் அவருக்கு குழந்தை பிறந்தது. அதனால் அவரது படிப்பை உடனடியாக தொடரமுடியவில்லை. குழந்தைகள் சற்றே வளர்ந்த பிறகு தனது தாயின் உதவியுடன், கணவர் தந்த உக்கத்துடன் மேல் கல்வி தொடர முடிவு செய்தார். தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதால், மாலை நேர வகுப்பில் சேர்ந்தார். ஜார்ச்டவுன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். வீட்டில் தாய் குழந்தைகளை பார்த்துக்கொள்ள,அவரது கணவர் பாப் வேராவை கல்லூரிக்கு அழைத்து சென்று வருவர். புகழ் மிக்க வனவியல்லாளர் ஜார்ஜ் கமோவ் இவரது ஆசிரியர். முனைவர் பட்ட ஆய்வு உடுமீன் கூட்டங்களின் தற்சுழற்ச்சி தொடர்பானது.
கல்வி மட்டும் இவருக்கு கடும் பாதையாக இருக்கவில்லை. கல்விக்கு பின் வேலை கிடைப்பதும் பெரும் பாடக இருந்தது. பெண் வனவிவியலாளருக்கு வேலை தர பல ஆய்வு நிறுவனங்கள் கை விரித்தன; தயக்கம் காட்டின. இறுதியில் வாஷிண்டனில் உள்ள கார்நெகி நிறுவனத்தில் ஆய்வு பணி கிடைத்தது. இங்கு கென்ட் போர்ட் என்பாருடன் இணைந்து வனவியலை மட்டுமல்ல இயற்பியலையே புரட்டிப்போட்ட புது கண்டுபிடிப்பினை நிகழ்த்தினார்.
உடுமீன் மண்டலங்கள் தம்மைத்தாமே சுழல்வது குறித்து கூர்மையாக ஆராய்ந்தார். இயற்பியல் விதிகள் சுட்டுவதை விட அதிக முடுக்கில் சக்கரம் போல உடுமீன் கூட்டங்கள் சுழன்றன. உள்ளபடியே உடுமீன் மண்டலங்கள் சுழல்வது சரியகின், ஒன்று இயற்பியலின் விதிகள் தவறு, குறிப்பாக ஈர்ப்பு சக்தி விதிகள் தவறு என முடிவு கட்ட வேண்டும்; இல்லை என்றல் நமக்கு இதுவரை புலப்படாத “இருள் பொருள்” இருக்க வேண்டும் என முடிவுக்கு வரவேண்டும் என்றார். இருள் பொருள் ஆற்றும் ஈர்ப்பு சக்தியினால் தான் உடுமீன் மண்டலங்கள் அவ்வளவு வேகமாக சக்கரம் போல சுழலமுடிகிறது என்றார் அவர். வெறும் 22 வயது அனுபவமில்ல இளம் பெண் அல்ல, மிக மிக தெளிவான ஆதாரங்கள் அறிவியல் உலகு முன்பு வைத்தார். காலபோக்கில் ஆம் என ஏற்றது அறிவியல் உலகம்.
எழுபது வருடம் முன்பு பத்து பதினோரு வயது சிறு பெண்ணாக விண்வெளியை கண்டு வியந்து நின்ற வேரா கூப்பர் ரூபின் இன்று 80 வயதை கடந்தும் வியந்து நிற்கிறார்; நம்மை மருள வைக்கிறார். அறிவியல் உலகை மலைக்க வைக்கிறார்.
எதோ கொஞ்சம் போல இருள் பொருள் அங்கே இங்கே தொட்டுக்கொண்டிருகிறது என கருதவேண்டாம். பிரபஞ்சத்தில் மொத்த நிறையுள்ள பொருளில் சுமார் 99% சதவிகிதம் இருள் பொருள் தான். உள்ளபடியே நமக்கு புலப்படும் பொருட்கள் வெறும் 1% சதவிகிதம் தான். நம்மை சுற்றி உள்ள எங்கும் வியாபித்துள்ள இருள் பொருளை குறித்து நமக்கு அறிந்ததை விட அறியாதது தான் அதிகம்.
இந்த இருள் பொருள் என்பது என்ன? எப்படி இந்த பொருளைக்குறித்து அனுமானம் செய்தனர், இது குறித்து நமக்கு இன்று என்ன தெரியும்? இருள் பொருள் (டார்க் மேட்டர்) மட்டுமல்ல இருள் சக்தி (டார்க் எனர்ஜி) என்னும் கருத்தும் இன்று அறிவியலாளர்களை ஆட்டி வைக்கிறது. இந்தப் புதிய கருத்தாக்கத்தின்படி, உலகின் 96% பொருளும் சக்தியும் இந்த இருள் பொருள், இருள் சக்தி வடிவைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது.

சாதாரணப் பொருள் மட்டும் இருந்தால், உடுமீன் கூட்டங்கள் (கேலக்ஸிகள்) உருவாகி இருக்கவே முடியாது. உடுமீன்கள் காட்சிப்படும் முடுக்கில் சுழலமுடியாது. எனவே ‘இருள் பொருள்’ என்ற ஒன்று இருக்கவேண்டும்; இந்த இருள் பொருள், சாதாரணப் பொருள்களை இழுத்து ஒட்டவைக்கும் கோந்துபோலச் செயல்படுகிறது என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது.

இன்று பிரபஞ்சம் பயங்கர வேகத்தில் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருள்கள் விலகிச் செல்லக் காரணம் ஒருவேளை ‘இருள் சக்தி’ என்ற சக்தி ஈர்ப்புக்கு எதிராகச் செயல்படும் புதுவித சக்தி இருப்பதாலோ என வியக்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த இருள் பொருள், இருள் சக்தி போன்றவற்றின் தன்மை இன்னமும் அறிவியலாளர்களுக்கே விளங்காமல்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் இவற்றின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க முயற்சிக்கப் போகிறேன். அதன் தொடக்கமே இது.
தொடரும்... (எப்போது என உறுதி தர முடியாது..அனால் உறுதியாக தொடரும்.... உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தந்து கட்டுரையை செழுமயக்க உதவுங்கள்.)
(டாக்டர் டி.வி.வெங்கடேசுவரன். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விக்யான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.)

மர்ம தேசம் –பகுதி 2 -குடைராட்டிணமும் கோள்களும்

by Venkateswaran Thathamangalam Viswanathan on Monday, August 2, 2010 at 3:53pm
நமது சூரியனை எட்டு கோள்களும் பற்பல சிறு கோள்களும் குள்ளக் கோள்களும் சுற்றி வலம் வருகின்றன. குடைராடினத்தை சுற்றியும் பொம்மைக் குதிரைகள் சுற்றி வருகின்றன. இரண்டிற்கும் என ஒற்றுமை-வேற்றுமை?
எல்லா சுழலும் பொருளும் எதாவது அச்சை சுற்றிதான் வலம் வரும். சூரியன் மற்றும் குடைராடினத்தை பொருத்தவரை இரண்டும் அதன் மையப்புள்ளியை சுற்றி வருகின்றன. சூரிய குடும்பத்தை பொருத்தவரை சூரியன் தான் அச்சு; மையம். குடைராடினத்தை பொருத்தவரை குடை பொருத்தப்பட்டுள்ள கழி-கொம்பு தான் அச்சு; மையம்.
குடைராடினத்தில் குதிரைகள் எல்லாம் ஒரே கால இடைவெளியில் அச்சை சுற்றி வருகின்றன. அச்ச்சுக்கு மிக அருகே இருக்கும் குதிரை ஐந்து நிமிடத்தில் மையத்தை ஒரு சுற்று சுற்றினால் குடைராடினத்தின் விளிம்பில் இருக்கும் குதிரையும் ஐந்து நிமிடத்தில் ஒரு சுற்று சுற்றும். இடை நிலை குதிரையும் ஐந்து நிமிட நேரத்தில் தான் ஒரு சுற்று வரும்.
சூரிய குடும்பத்தை பொருத்தவரை இது பொருந்தாது. சூரியனுக்கு மிக மிக அருகாமையில் உள்ள முதல் கொள் புதன். இந்த கோள் வெறும் 88 நாளில் சூரியனை ஒரு சுற்று சுற்றிவிடுகிறது. அதே சமயம் மூன்றாவது கிரகமாக உள்ள பூமி சூரியனை ஒரு வலம் வைக்க ஒரு ஆண்டு அல்லது சுமார் 365 நாட்கள் எடுக்கிறது. எட்டாவது கோள் நெப்ட்டியூன் 60200 நாட்கள் (சுமார் 164.79 ஆண்டுகளுக்கு) ஒருமுறை தான் சூரியனை வலம் வைக்கிறது. அதாவது வேறு வேறு வகையில் கூறப்புகுந்தால் அருகே உள்ள கோள் வெகு குறைவான கால இடைவெளியிலும், தொலைவு அதிகரிக்க அதிகரிக்க வலம் வரும் கால இடைவெளி அதிகரித்து கொண்டு போவதும் தெளிவாக புலப்படும். (பட்டியல் –அ வில் கோள்களும் அதன் வலம் வரும் கால இடைவெளியும் உள்ளது காண்க) கெப்ளர் இந்த செய்தியை கண்டுனர்ந்தார். கெப்ளரின் விதி இதை சுட்டுகிறது. (கெப்ளர் விதியினை பிற்சேர்க்கையில் காண்க) குடைராடினம் சுழலுவதர்க்கும் சூரிய குடும்பம் சுற்றி வருவதற்கும் உள்ள ஒரு வேறுபாடு இது.
குடைராட்டினத்தில் விளிம்பில் குதிரை, அச்சிற்கு நெருங்கி உள்ள உள்ள குதிரையை விட வெகு வேகமாக சுற்றவேண்டும். இரண்டு குதிரையும் ஒரே கால இடைவெளியில் தான் சுற்றுகிறது. அனால் நெருங்கி உள்ள குதிரை குறைவான தூரமே கடக்க வேண்டும். விளிம்பில் உள்ள குதிரை ஒப்பீட்டில் அதிக தூரம் கடக்க வேண்டும். நெருங்கி உள்ள குதிரை சுற்றும் வட்டத்தின் சுற்றளவு சிறியதாகவும் விளிம்பில் உள்ள குதிரை சுற்றும் வட்டத்தின் சுற்றளவு பெரியதாகவும் இருக்கும். இரண்டும் ஒரே கால இடைவெளியில் சுற்றுகிறது. எனவே அருகே உள்ள குதிரை அதே கால அளவில் குறைவான தொலைவு கடக்க வேண்டும்; அதே கால அளவில் விளிம்பில் உள்ள குதிரை அதிக தூரம் கடக்க வேண்டும். எனவே நெருங்கி உள்ள குதிரை மெதுவாகவும், விளிம்பில் உள்ள குதிரை வெகு வேகமாகவும் சுற்றவேண்டும். அச்சிற்கு நெருங்கிய பகுதியிலிருந்து தொலைவு செல்ல செல்ல குதிரைகள் செல்லும் வேகமுமும் அதிகரித்த வண்ணம் அமையும். தொலைவு சார்ந்து நேர் விகிதத்தில் வேகம் அமையும்.
எனவே தான் பொதுவாக சிறு பிள்ளைகளை அச்சிற்கு நெருக்கமாகவும், வளர்ர்ந்த பிள்ளைகள் மற்றும் பதின்பருவதினரை விளிம்பிலும் அமரவைப்பர். சிறு பிள்ளைகள் வேக வேகமா சுழல்வதை தாங்க அச்சம் கொள்ளும்; வளர்ந்த பிள்ளைகள் பயமறியாது.
சுரியக்குடும்பத்தை பொருத்தவரை கோள்கள் வலம் வரும் வேகமும் மாறுபட்டு அமைகிறது. எல்லா கோள்களும் ஒரே வேகத்தில் பயனிப்பதில்லை; ஆனால் குடைராடினம் போல தொலைவு சார்ந்து மட்டும் வேகம் அமைவதில்லை. ஏனெனில் கோள்களைப் பொருத்தவரை சுற்றும் கால இடைவெளி ஒவ்வொரு கோளுக்கும் வேறுபட்டு அமைகிறது. வேகம் என்பது சுற்றும் கால இடைவெளி மற்றும் சுற்றும் தொலைவு இரண்டையும் பொருத்து அமைவதால் கோள்களைப் பொருத்தவரை குடைராடினம் போல ஒரே சீரான வேக மாறுபாடு அமையாது. நெருங்கி சுற்றும் கோள்கள் வேக வேகமாகாவும் தொலைவு அதிகரிக்க வேகம் குறைந்தும் அமையும். தொலைவில் உள்ள கோள்களை மைய சூரியன் அவ்வளவு ஈர்ப்பு சக்தி கொண்டு கவர முடியாது. எனவே மேலும் மெதுவாக தான் சுழலும்.
குடைராடினத்தில் உள்ளபடியே எல்லா குதிரைகளும் மைய அச்சுடன் பிணைக்கப்பட்டுள்ளது. குடை வழியே இந்த பிணைப்பு உள்ளது. ஆனால் கோள்களைப் பொருத்தவரை நேரடியாக மைய சூரியனுடன் பொருத்தப்படவில்லை. ஈர்ப்பு சக்தி தான் சூரியனையும் கோள்களையும் பிணைக்கும் ஆற்றல். குடைராடினம், தட்டு, வட்டு, சக்கரம் முதலிய விரைப்பான பொருள்கள் (rigid body) கோள்கள் தொகுப்பான பொருட்கள். இரண்டும் சுழலும் போது வெவ்வேறு விதமாக இயங்கும்.
வரைபட நிரலில் (கிராப் பேப்பரில்) ஒரு அச்சில் மையத்திலிருந்து தொலைவு மறு அச்சில் சுழலும் வேகம் என்பதை பொருத்தி கிராப் வரைந்தால், குடை ராட்டினம் 45 டிகிரி சாய்வான கோடக அமையும். அதே சமயம் சூரிய குடும்பத்தை வரைபட நிரல் செய்தால் கிழ் நோக்கிய வளைவு கிடைக்கும். (பார்க்க கிழே உள்ள படங்கள்)
உடுமீன் கூட்டம் உள்ளபடியே பல்வேறு தனிதனி விண்மீன்கள் கொண்ட தொகுதி. உடுமீன் கூட்டத்தின் மையத்தை சுற்றி அதன் விண்மீன்கள் வலம் வருகின்றன. உடுமீன் கூட்டத்தின் மையத்தில் கருந்துளை மற்றும் பெரும் நிறை உள்ள ராட்ச்ச விண்மீன்கள் உள்ளன என வனவியளர்கள் அனுமானித்துள்ளனர். இந்த மைய நிறையை சுற்றி ஏனைய விண்மீன்கள் வளம் வருகின்றன.
உடுமீன் கூட்டத்தில் விண்மீன்கள் எவ்வாறு சுழலவேண்டும்? குடைராடினம் போலவா? அல்லது சூரிய குடும்பம் போன்ற? உடுமீன் கூட்டம் தட்டு அல்லது வட்டு போன்ற விறைப்பான பொருள் அல்ல; விண்மீன்களின் தொகுதி. எனவே தொகுப்பு பொருள். எனவே சூரிய குடும்பத்தை போல சுழலவேண்டும்.
நமது சூரியன், நமது பூமி முதலிய உள்ள நமது உடுமீன் கூட்டத்தை எடுத்துக்கொள்வோம். சூரியன் இந்த பால் வழி மண்டலத்தில் மையத்தில் இல்லை. சற்றேறக்குறைய விளிம்பை நோக்கி அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தில் நெப்ட்டியூன் போல விளிம்பில் உள்ள விண்மீன் நமது சூரியன். சூரிய குடும்பத்தில் மையத்தின் அருகில் நெருங்கி உள்ள புதன் வெகு வேக வேகமாக சுழலும் போது, நெப்ட்டியுன் மெல்ல மெல்ல சுழல்கிறது. அதுபோல சூரியனும் உடுமீன் கூட்டத்தின் மையத்தினை மெல்ல மெல்ல சுழலவேண்டும், சூரியன் உள்ள தொலைவில் அது வினாடிக்கு 160 கி,மீ வேகத்தில் சுழலவேண்டும் என கணிப்பு செய்துள்ளனர். ஆனால் உள்ளபடியே சூரியன் சுழலும் வேகம் வினாடிக்கு 220 கி,மீ அதாவது விளிம்பு பகுதியில் இருந்தாலும் மையத்தின் அருக உள்ள வேகம் கொண்டுள்ளது நமது பால்வழி மண்டலம். தொகுதி பொருளானாலும் விறைப்பான பொருள் போல நடத்தை செய்கிறது.
புலப்படும் பொருள்கள் கொண்டு இதை விளங்கிக்கொள்ள முடியாது. விளக்க முடியாது. நமது உடு மண்டலத்தின் நிறை என கணிகப்பட்டதை விட சுமார் நூறு மடங்கு அதிக நிறை நமது பால் வழி மண்டலத்தில் இருந்தால் மட்டுமே இது போன்ற சுழற்சி சத்தியம். இந்த மறைநிலை நிறை (missing mass) தான் இருள் பொருள் என அனுமானம் செய்யப்படுகிறது.
இந்த இருள் பொருள் இதுவரை நமக்கு தெரியாத, புலப்படாத வகை பொருளாக அமையக்கூடும் என்பது தான் புதுமை.
வேரா ரூபின் மற்றும் அவரது கூட்டாளி போர்ட் கண்டது இதுதான். பற்பல உடுமீன் கூட்டங்களின் சுழற்ச்சி வேகங்களை கணக்கிட்டனர். அந்த உடுமீன் கூட்டங்களின் விளிம்பில் உள்ள விண்மீன்கள் எவ்வாறு எந்த வேகத்தில் சுழல்கிறது என்பதை அளவிட்டனர். விளிம்பில் உள்ள விண்மீன்கள் பொதுவாக மெல்ல மெல்ல தான் சுழலவேண்டும். ஆனால் அவையும் ஏனைய உடுமன்ட்ல வட்டு போன்ற வேகத்திலேய சுழன்றது.
இதன் பொருள் ஒன்று ஈர்ப்பு சக்தி குறித்த நமது அறிவு முற்றிலும் தவறானது என அமையலாம்; அல்லது நமக்கு புலப்படமால் மறைந்த நிலையில் நிறை இருக்க வேண்டும் என்பது தான். ஈர்ப்பு சக்தி குறித்து நமக்கு உள்ள அறிவு பல முறை துல்லியமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே இருள் பொருள் கருதுகோள் தான் ஏற்புடையது என முடிவுக்கு வந்தார் வேரா ரூபின்.
வேரா ருபினுக்கு முன்பே 1933இல் பிரிட்ஸ் ஜ்விக்கி என்பார் இதுபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். எப்படி விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உடுமண்டலங்கள் ஆகிறதோ அதுபோல உடுமண்டலங்கள் பிணைந்து உடுமண்டல தொகுதிகள் என அமையும். ஐந்தே உடுமண்டல தொகுதியில் ஈர்ப்பு விசை காரணமாக உடுமண்டலங்கள் தம்மைத்தாமே தமது ஈர்ப்பு மையத்தினை சுற்றி சுழலும். இங்கும் மையத்தின் அருகில் உள்ள உடுமண்டலங்கள் வேக வேகமகவும், தொகுதியின் விளிம்பில் உள்ளவை மெல்ல மெல்லவும் சுழல வேண்டும். ஆனால் விந்தை, இங்கும் விளிம்பு உடுமண்டலங்கள் அவை சுற்றவேண்டிய வேகத்தினைவிட வெகு வேகமாக சுழன்றன. இதன் தொடர்ச்சியாக ஜ்விக்கி எதோ ஒரு புதிய நிறை கொண்ட (அதாவது ஈர்ப்பு சக்தி அள்ளிக்கக்கூடிய) பொருள் இருக்க வேண்டும் எனக்கூறினார்.
அவரது ஆய்வு நடந்த காலம் ஆய்வுக்கருவிகள் அவ்வளவு துல்லியமாக இருக்கவில்லை. மேலும் ஜ்விக்கி எல்லோரையும் வெறுப்பு கொள்ள செய்பவராகவும் இருந்தார். எனவே பல ஆண்டுகள் இந்த ஆய்வு முக்கியத்துவப் படவில்லை. வேரா ரூபின் சந்தேகத்துக்கிடமின்றி நிருபித்ததின் தொடர்ச்சியாக இருள் பொருள் முக்கியத்துவம் பெற துவங்கியுள்ளது.
வானவியலின் புதிய அத்தியாயம் துவங்கியது
பட்டியல் அ
கோள்கள் சூரியனை வலம் வரும் கால இடைவெளி

கோள் சூரியனிடமிருந்து தொலைவு
(கோடி கி.மீ) சூரியனை வலம் வரும் காலம்
(நாள் கணக்கில்)
1. புதன் 5.79 88.0
2. வெள்ளி 10.82 224.7
3. பூமி 14.6 365.2
4. செவ்வாய் 22.79 687.0
5. வியாழன் 77.83 4332
6. சனி 142.7 10760
7. யுரேனஸ் 286.9 30700
8. நெப்ட்டியூன் 449.8 60200


கெப்ளர் விதிகள்
பல ஆண்டுகள் உற்று நோக்கியும், அதுவரை வேறு வானவியலாளர்கள் திரட்டி வைத்திருந்த தரவுகளையும் பயன்படுத்தி தான் கெப்ளர் தனது புதுமை கருத்தை வெளியிட்டார். செவ்வாய் கோள் இயக்கத்தை உற்று நோக்கிய அவர் அதுவரை கருதிய படி வட்டப் பாதையில் இக்கோள் செல்கிறது எனக்கொள்ள முடியாது என்பதை தெளிந்தார். இக்கோள் நீள்வட்டப் பாதையில் செல்கிறது என்று கொண்டால் தாம் காண்ட தரவுகள் பொருந்தி வருவதையும் கண்டார் இவர். இதன் வழி எல்லா கோள்களும் நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வலம் வருகின்றன என்ற புரட்சிகர கருத்தினை எட்டினார்.
1619 இல் கெப்ளர் எழுதி வெளிட்ட 'பிரபஞ்ச அமைப்பின் சீரொழுங்கு ' [The Harmony of the Cosmos] எனும் நூலில் கோள்கள் இயக்கம் குறித்த தனது மூன்று விதிகளை வெளியிட்டார். கணிதவியல் சார்ந்த பார்வையை இது சுட்டுகிறது. இவரது மூன்று விதிகள் அவன:-
முதல் விதி:- எல்லா கோள்களும் சூரியனை ஒரு குவிமையமாகக் [Focus] கொண்டு அதை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbits] சுற்றுகின்றன. கோள்களின் பாதை விதி இது. முன்பு வானியல் மேதைகள் தவறாக யூகித்தப்படி, கோள்கள் வட்ட வீதியில் சுற்றுபவை அல்ல! கோள்கள் பூமியையும் சுற்றவில்லை கோள்கள் சுரியனைத்தன் மையமாக வைத்து நீள்வட்டப் பாதையில் வலம் வருகின்றன என்றார்.
இரண்டாம் விதி:- கோள்கள் சூரியனை குவிமையமாகக் கொண்டு நீள்வட்டத்தில் சுற்றிவரும் போது கோளின் மையத்தையும் சூரிய மையப்புள்ளியையும் இணைக்கும் ஆரம் சம காலத்தில் சமப் பரப்பைத் தடவுகிறது. இது கோள்களின் பரப்பு விதி! அதாவது, நீள்வட்டப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வரும் போது ஒரு சமயம் அருகிலும் அரு சமயம் தொலைவிலும் அமைய நேரிடும். அவ்வாறு கோள் சூரியனை நெருங்க நெருங்க, அதன் வேகம் மிகையாகிறது! சூரியனை விட்டு அப்பால் செல்லச் செல்ல அதன் வேகம் குறைகிறது என்பதே இந்த விதி. சூரியனை விட்டு அப்பால் செல்லும் போது சூரியனின் ஈர்ப்பு சக்தி குறையும் அல்லவே; இதனால் கோள்களின் வேகத்தில் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ள நிலையில் ஈர்ப்பு சக்தி மிகும் அதனால் வேக முடுக்கு பெரும்.
மூன்றாம் விதி:- சூரியனிலிருந்து குறிப்பிட்ட கோள் கொண்டுள்ள தொலைவின் மூவடுக்கு [Cube of the Distance], அந்த கோள் சூரியனை சுற்றும் கால இடைவெளியின் ஈரடுக்கிற்கு [Square of the Period] நேர் விகிதத்தில் உள்ளது. சுருங்கக் கூறினால், அண்டத்தின் தூர மூவடுக்கு/அண்டத்தின் சுற்றுக் கால ஈரடுக்கு விகிதம் ஓர் மாறிலி. [(Cube of the Distance)/(Square of the Period), Ratio is a constant].
பிரபஞ்சத்தில் விண்கோள்கள் சுற்றி வரும் வீதிகள், அவற்றின் வேகம், சூரியனை அவை நெருங்கும் போது ஏற்படும் வேக வளர்ச்சி, சூரியனை விட்டு அவை அகலும் போது நிகழும் வேகத் தளர்ச்சி, அவை மேவும் விண்பரப்புக்கும் [Spatial Setup] காலத்திற்கும் உள்ள உறவு, அவற்றின் தூரத்திற்கும், சுற்றும் காலத்திற்கும் உள்ள தொடர்பு போன்ற கணிதக் கோட்பாடுகளைக் கூறுவது, கெப்ளரின் மூன்று விதிகள் [Kepler 's Laws].
கெப்ளரின் மூன்று விதிகளும் பட்டறிவின் வழி உருவானவை. கணித சார் விதிகள் ஆயினும் காரண-காரிய அடிப்படைகளைக் கையாண்டு, அவை தர்க்க முறையில் படிப்படியாக உருவாக்கப் பட்டவை அல்ல. இவ்விதிகளைப் பயன்படுத்தி, எதிர் காலத்தில் கோள்கள் எங்கே இருக்கும் என்று அவற்றின் இடத்தை முன் அனுமானம் செய்யல்லாம். கோள்களின் இயக்கத்தை இவை கணக்கிட உதவிய போதும் ஏன் என்ற கேள்விக்கு விடை இருக்கவில்லை.
தொலைவு அதிகரிக்க அதிகரிக்க சூரியனின் ஈர்ப்பு விசை எதிர் வீதத்தில் [Force inversely diminishes with distance] குறைகிறது அதன் பொருட்டே கெப்ளரின் விதிகள் உருவாகின்றன என்ற கருத்து ஐசக் நியூட்டன் தன்னது இயக்க விதிகளை உருவாக்கிய போது விளங்கியது.

புதன், செப்டம்பர் 22, 2010

இலையுதிர்கால சம இரவு-பகல் நாள் 22.09.2010











வணக்கம்.இன்று இரவு 11மணிக்கு, சமகால நாள் ஏற்பட உள்ளது. சமகால நாட்கள் என்பவை, ஒரு நாளில் இரவும் பகலும், சம கால அளவில்,அதாவது பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என, இருக்கும்.நமது பூமி 231/2 டிகிரி சாய்வாக இருப்பதால் வருடத்தில் இரு நாட்கள் சமகால நாட்கள் வரும். அவை வசந்தத்தின் சமகால நாள் மற்றும் இலையுதிர்கால சமகால நாள் எனப்படும். பொதுவாக வசந்த சமகால நாள் மார்ச் 21 ம் நாளும், இலையுதிர்கால சமகால நாள் செப்டம்பர் 22 ம் வரும். சமகால் நாள் அன்று சூரியன் நிலநடு கோட்டை கடக்கும். வசந்த சமகால நாள் அன்று, . சூரியன் , பூமியின் தெற்குப் பகுதியிலிருந்து நிலநடுக்கோட்டை கடந்து, வடக்கு நோக்கி நகரும். இலையுதிர் கால சமகால நாள் அன்று,.சூரியன் வடபகுதியிலிருந்து நிலநடுக்கோட்டை கடந்து தெற்கு நோக்கி நகரும் .. ஆனால் 2010 ம் ஆண்டின் வசந்த சமகால நாள், மார்ச் 20 ல்மாலை 5 .39 க்கு நிகழ்ந்தது. இலையுதிர்கால சமகால நாள் செப்டம்பர் 22 ல், இரவு11.09மணியளவில் நிகழ உள்ளது.

Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

````````````````````````````````````````````````



22.09.2010 இன்று இலையுதிர்கால சம இரவு-பகல் நாள் ( Autumnal Equinox). இன்றுமுதல் பூமியின் வடகோளத்தில் இருந்த சூரியன் தென்கோளத்திற்கு செல்வதால் இனி வடகோளத்தில் இரவு காலம் அதிகமாகும்.


அன்புடன்
சே. பார்த்தசாரதி

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

வியாழன் பூமியில்ருந்து சூரியனுக்கு நேர் எதிரே



அனைவருக்கும் வணக்கம்.

20.09.2010 இன்று வியாழன் பூமியில்ருந்து சூரியனுக்கு நேர் எதிரே ஊள்ளது. அதாவது சூரியன் மறையவும் இது கிழக்கில் உதயமாகம். இதுவே வியாழன் பூமிக்கு அருகில் உள்ள காலம. மேலும் யுரேனஸ் வியாழனுக்கு மிக அருகில் (>
இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்! வாய்ப்பு இல்லாதவர்கள் படத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

மேலும் இன்று வியாழனை சுற்றியுள்ள ஒளிவட்டத்தையும் படத்தில் காணலாம்.

அன்புடன்
சே.பார்த்தசாரதி


ஞாயிறு, ஜூலை 11, 2010

சூரியனைச் சுற்றி ஒரு ஒளி வட்டம்

2010/7/11
இன்று சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியனைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் தெரிந்தது-தெரிகின்றது. இதை 22 டிகிரி ஒளி வட்டம் என்பர்.சுமார் 8கி.மீ. உயரத்தில் இருக்கும் சைரஸ் வகை மேகங்களில் இருக்கும் அருங்கோண வடிவ பனிப் படிகங்கள் வழியே ஊடுருவும் சூரிய கதிர்கள் 22 பாகை ஒளி விலகல் அடைவதால் 22 பாகை ஆரமுடைய ஒரு வட்டம் தோன்றுகின்றது.
sarathy_sun22halo3.jpg

அன்புடன்
சே.பார்த்தசாரதி

வெள்ளி, ஜூலை 09, 2010

2010ஜூலை..11 , முழு சூரிய கிரகணம்.. ! நிலம் .. காண ..மறுக்கும் ..கிரகணம்..!

2010ஜூலை..11 , முழு சூரிய கிரகணம்.. !
நண்பர்களே , நாளை மறு நாள்,ஒரு முழு சூரிய கிரகணம். ஜூலை 11 , 2010 அன்று நிகழ உள்ளது . இந்த முறை வர உள்ள சூரிய கிரகணம் கொஞ்சம் வித்தியாசமானது. சுவையானதும் கூட. காரணம் கிரகணப் பாதை, கிட்டத்தட்ட, பாதிக்கு மேல்,கடலின் மேலேயே நகர்ந்து, தென் பசிபிக் பெருங்கடலிலேயே.. சின்ன சின்ன தீவுகளை மட்டுமே முத்தமிட்டு அணைத்துக் கொண்டு போகிறது சூரியன் .சூரிய கிரகணம் முடியும் தறுவாயில்தான்,மாலை கடலில் முழுகும் முன்தான், தென் அமெரிக்காவின் தென் முனையை , தரைப் பகுதியைத் தொட்டுப் பார்க்கிறது.எனவே சூரிய கிரகணத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், உலகின் தென் முனையான சிலிக்கும், அர்ஜென்டினாவுக்கும் தான் போகவேண்டும்.


சிலியில் கிரகணம் தெரியும் இடங்கள்.. முழு மறைப்பு நேரம்..2.நிமிடம், 46 நொ

நிலம் .. காண ..மறுக்கும் ..கிரகணம்..!
ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கிரகணம், உலகின் அதிசய தீவான ஈஸ்டர் தீவுகளுக்கும் விஜயம் செய்வதுதான். இந்த தீவுகளிலுள்ள சிலைகள்தான் உலக அதிசயம். இந்த தீவு பசுபிக் பெருங்கடலின் கடை கோடியில் அமைந்துள்ளது. தென் அமெரிக்க சிலி நகரிலிருந்து 2 .335 கி.மீ தூரத்திலும். தாகிதி தீவிலிருந்து 3 , 000கி.மீ தொலைவிலும் பசிபிக் பெருங்கடலில் தன்னந்தனியாக பயமின்றி உள்ளது. இத்தீவு. 18 கி.மீ நீளமும், 12 கி.மீ அகலமுமே உள்ளது. இங்கே, 1722 ல். டச்சு கப்பல் மாலுமி ஒருவர் பல டன்கள் எடையும், 30 அடி உயரமும் உள்ள நூற்றுக் கணக்கான சிலைகள் இருப்பதையும் கண்டு பிடித்தார். மனித வாசனையே இல்லாத, உலகின் கடைக்கோடி தீவில் இந்த சிலைகளைக் கொண்டுவந்து வைத்தது, யார். இன்றுவரை விடை காண முடியாத விடுகதை அது. இந்த சிலைகளின் பெயர்" மாவோய்கள்" சிலைகள் அனைத்தும் கடலை நோக்கியே அமைந்துள்ளன.
சூரியனைவிட.. பெரிய..நிழலான.. சந்திரன்..!
சமீபத்தில்தான் ஒரு சூரிய கிரகணம் 2010 ஜனவரி 15 ல் தமிழக தென் கடற்கரைக்கு வந்து கலக்கியது. , அதுவும் அரிதான வளைய கிரகணம். அது வந்த , ஆறு மாதத்துக்குள்ளேயே இன்னொரு முழு சூரிய கிரகணம். இதுவும் ஒரு சிறப்புத் தகுதி வாய்ந்ததுதான்.ஓர் ஆண்டுக்குள்ளேயே இரண்டு முழு சூரிய கிரகணங்கள்.!இது உலகின் கோடியில் நகர்ந்து போகிறது. நிலத்தையே காண மறுத்து , ஒரு சில குட்டி தீவுகளை மட்டும் பார்க்கிறது.ஈஸ்டர் தீவுகள் தவிர, பிரெஞ்சு பாலிநேசியாவைச் சேர்ந்த சிறு தீவுக்கூட்டமான "டுவோமோட்டு" தீவுகளில் தெரிகிறது. இந்த கிரகணத்தின் முக்கிய அம்சம் ,நிலவின் நிழல் சூரியனைவிட கொஞ்சம் பெரியதாக உள்ளதுதான். நிழலின்
அளவு, 1 .058.பொதுவாக, சூரிய கிரகணத்தின் 15 நாள் முன்பு/பின்பு சந்திர கிரகணம் வரும். . .
கருப்பு.. சூரியன்..கடலில் .. மறைவு..!.
இந்த சூரிய கிரகணம், ஜூலை 11 ம நாள், சர்வதேச நேரப்படி, 18 .15 .15 (காலை 6 .15 ) க்கு
நியுசிலாந்துக்கு வடகிழக்காக துவங்குகிறது.கிட்டத்தட்ட சர்வதேச தேதிக்கோடு கடந்து செல்லும் இடத்தில்தான் இது துவங்குகிறது.தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் படகோனியாவில், மாலை 8 .52 .42 க்கு (சர்வ தேச நேரம் 20௦.52 .42 )முடிகிறது.மொத்த கிரகண நேரம் 19 .33 .34 முழு மறைப்பு என்பது 5 நிமிடம், 20 நொடி நிகழ உள்ளது. இந்நிகழ்வு கடலில், மனிதனோ, நிலமோ இல்லாத இடத்தில் நிகழ்வதால், இதனை நாம் காண்பது சிரமம். ஒருக்கால், விமானத்தில் பறந்தால்,பார்க்கலாம். ஆனால் ஈஸ்டர் தீவில் 4 நிமிடம், 39 நொடி மட்டுமே நீடிக்கிறது.. சூரிய கிரகண பாதையின் அகலம் 249 கி.மீ. ஆனால் நிலவின் நிழல், சூரியனை சுமார், 3 ,700௦௦ கி.மீ தூரம் துரத்திச் சென்று கடலில் மூழ்க அடிக்கிறது. .முழு மறைப்பு சரியாக, 18 .15 .15 க்கு துவங்கி, 20௦.51 .42 க்கு முடிகிறது. உச்சபட்ச முழு மறைப்பு 19 .34 .18 க்கு நடக்கிறது.இந்த முழு சூரிய கிரகணத்தில் முழு மறைப்பு என்பது மாலை நேரத்தில் நிகழ்வதால், இங்கே சூரியன் 40௦ டிகிரி உயரத்தில் தெரியும். பகுதி கிரகணம் பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் அமெரிக்காவின் தென் பகுதிகளில் தெரியும்.இந்த சூரிய கிரகணத்திலுள்ள சிறப்பு என்னவெனில் ,சிலி, அர்ஜென்டினாவில் முழு சூரியனும் மறைந்து, கருப்பு சூரியானாக காட்சி அளிக்கும் இங்கே சூரியன் ."கருப்பு சூரியனாக" தன் முகத்தை, 2 .நிமிடம், 45 நொடிகள் காட்ட உள்ளது . அது மட்டுமல்ல.அன்று சிலியில் நம்ம சூரியனார், கருப்பு சூரியனாகவே, கடலுக்குள் குளித்துக் கொண்டே மறைவார்.
கிரகணப் பிரியர்கள்.. ஈஸ்டர் தீவு.. நோக்கி..!
இந்த சூரிய கிரகணம், சாரோஸ் 146 வகையைச் சேர்ந்தது, பொதுவாக ஒரு சாரோஸ் சுழற்சி என்பது, 18 ஆண்டுகள்,11 நாட்கள், 8 மணி நேர காலம் அடங்கியது.,சார் என்ற பழங்கால சுமேரியன் அலகில் இருந்தே, சாரோஸ் என்ற கிரேக்க பெயர் உருவானது. ஈஸ்டர் தீவில் இன்னொரு சிறப்பு காட்சியும் தென்படும். மாலை வேளையில் காணப்படும் முழு சூரிய கிரகணம், அந்த பிரம்மாண்டமான, 10 மீ. உயர சிலைகளின் ஊடே. கருப்பு சூரியனாய் மிளிர்வதை படம் எடுக்க , கண்டு களிக்க உலகின் பல பகுதிகளிருந்து கிரகணப் பிரியர்கள். மற்றும் நிழற்பட நிபுணர்கள் பறந்து செல்ல உள்ளனர். இது மாலை நேரம் நிகழவதால், கருப்பு சூரியன், அந்தியை சந்தித்துக் கொண்டே கடலில், சந்தோஷமாக முக்குளிக்கிறது..இது ஓர் அற்புதமான நிகழ்வு. அடுத்த் முழு சூரிய கிரகணத்தைச் சந்திக்க நாம் இன்னும் ஓர் ஆண்டு, 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆம், அடுத்த முழு சூரிய கிரகணம் நிகழும் நாள், 2012 .
நவம்பர் 13 ..!

கிரகண நிகழ்வு


என்றும் அன்புடன்,
மோகனா


செவ்வாய், ஜூலை 06, 2010

அகங்காரத் தமிழ் -ச.மாடசாமி

அன்பு நண்பர்களே.

பேராசிரியர் ச மாடசாமி தனித்தன்மை வாய்ந்த ஒரு கல்வியாளர், சிந்தனையாளர்,
நாட்டுப்புறக் கலை ஆய்வாளர், அற்புதமான ஆசிரியர், மகத்தான மனிதநேயமிக்க
எளிமையானவர்.....
சமச்சீர் கல்வி துவக்கப் படும் வேலையில், பாட நூல் உருவாக்கும் பணி
முதன்முறையாக சமூக ஆர்வலர்கள் கைக்குக் கிடைத்தது...அதன் அனுபவங்கள்
ஒன்றும் அப்படி நேர்க்கோட்டில் விருப்பமான திசையில் பயனப்படுவதாக
இருந்துவிடவில்லை. என்றாலும் கூட....என்ன, நான் என்ன குறுக்கீடு....இது
குறித்த அவரது கட்டுரை செம்மலர் இதழில் வெளிவந்ததை இணைத்துள்ளேன்.
வாசியுங்கள். உங்கள் பதிலை எனக்கும் மாடசாமிக்கும் , நண்பர்madasamy_ts@yahoo.com>
அனுப்பி வையுங்கள். இப்படி நான் அனுப்பிக் கொண்டிருப்பதே அவருக்குத்
தெரியாதுதான் என்றாலும்...

அகங்காரத் தமிழ்
-ச.மாடசாமி

எளிய தமிழ் அலங்காரமற்ற இயற்கையான தமிழ் சகமனிதனோடு நாம் தினசரி பேசிப்
பழகும் தமிழ் மதிப்பிழந்து நிற்பது நமது பண்பாட்டின் நேர்மை குறித்த
பிரச்சினைகளில் ஒன்று.

பாராட்டு மேடைப் பக்கம் திரும்பினால், கொண்டாட்டத் தமிழ்..! கூஜாத் தமிழ்
.
தொலைக்காட்சியில், சிதைவுண்ட தமிழ்..!

தீவிர இலக்கிய உலகில், முடிச்சு விழுந்து சிக்குண்ட தமிழ்..!

பிள்ளைகளின் பாடப்புத்த உலகில் - ஓர் அகங்காரத் தமிழ்..!

தமிழின் மீது உண்மையாகப் பற்று கொண்டவரிடம் இருந்து பல கேள்விகள்
பிறக்கின்றன. கோடிக்கணக்கான சாதாரண மனிதனின் தமிழ் எது? அவனைத் தூக்கி
நிறுத்தும் தமிழ் எது ? விரிவான உலகை அவனுக்குப் பிரியமாய் அறிமுகம்
செய்யும் தமிழ் எது ? உலகில் கவனத்தை நம் பக்கம் திரும்ப வைக்கும்
ஆய்வுத் தமிழ் ஏன் வளரவில்லை..? ஆய்வுத் தமிழைப் பின்னுக்குத் தள்ளி
ஆர்ப்பாட்டத் தமிழ் ஏனிப்படி வெளிச்சமும் சத்தமுமாய்த் திரிகிறது..? ஓர்
அரசாங்கத்துக்கு இதிலென்ன இவ்வளவு ருசி..?

நானொரு தமிழாசிரியன், பாடப்புத்தகங்களின் வழியே மாணவர்களைச் சந்தித்து வந்தவன்.
பாடப்புத்தகங்கள் இரு பிழையான அளவு கோல்கள் கொண்டே உருவாக்கப்பட்டு வந்துள்ளன

ஒன்று - திணிப்பதுதான் கல்வி..!
இரண்டு -கடினமாக இருப்பது தான் தரம்

பாடப்புத்தகக் குழுவில் இருப்பவருத்ககுத் தெரிந்ததை அல்லது அவர்
விரும்பியதைக் கொட்டத்தான் பாடப் புத்தகம்..!

மாணவரின் மொழி -மாணவரின் விருப்பம் - மாணவரின் உலகம் குறித்துப்
பாடப்புத்தகம் கவலைப்பட்டதே இல்லை. பாடப் புத்தகம் -அகங்காரத்தின் வடிவம்
..! ஆசிரிய அகங்காரம், மொழி அகங்காரம், அதிகார அகங்காரம் மூன்றும் இணைந்த
வடிவம். இந்த அகங்காரம், தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விடாதபடி
காலமெல்லாம் பிள்ளைகளைப் பிரம்பேடுத்துக் துரத்தியிருக்கிறது.
`பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம் கொடுப்போம்`என்று தமிழ்நாடு அறிவியல்
இயக்கம் பாட்டாக வைத்த கோரிக்கை சாதாரணமானது அல்ல, அது கல்வி உலகில்
உயிர்த்துடிப்பு..!

செயல்வழிக் கற்றல் வந்த பின்னர் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கான
பாடப்புத்தகங்கள் ஒழிக்கப்பட்டன. அதற்கு முன்னால் இருந்த
பாடப்புத்தகங்களைப் பார்க்க வேண்டுமே..! கொடுமை..!
முதல் வகுப்புத் தமிழ்ப்பாடத்தில் அகவை, ஞாலம், நெய்தல், நன்னூல் போன்ற
பல சொற்கள் அறிமுகம். முதல்வகுப்பு மாணவனுக்குக் கற்பிக்கிற சொற்களா?
இவை? `ஞாலம்` என்ற சொல்லுக்கு அறிவு என்று ஒர் ஆசிரியர் வகுப்பில் பொருள்
சொன்னதை நானே கண்கூடாகப் பார்த்தேன்! அகவை என்பது வயதைக் குறிக்கும் சொல்
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தச் சொற்களை
அறிமுகப்படுத்திய பாடத்திட்டக் குழுவினரே வீட்டிலும் வீதியிலும் பேசாத
சொற்கள் இவை. இந்தச் சொற்களைத் திணிப்பதற்குச் சின்னஞ்சிறு பிள்ளைகளின்
பிஞ்சு மூளைகள் தானா கிடைத்தன? திணிப்பது அகங்காரம் அல்லவா?

முதல் வகுப்பு புத்தகத்தில் இருந்த மற்றொரு அநீதி `ஆத்திசூடி !`
முதல்வகுப்பு மாணவனுக்கான உபதேசம்- அறஞ் செய விரும்பு! குழந்தைக்
கல்வியாளர்கள் இதை ஒரு வன்முறை என்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்
மதுரையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசினேன். அப்போது முதல்
வகுப்பு மாணவனுக்கு ஆத்திசூடி தேவையா என்று கேட்டேன். தேவை! தேவை!
ஆசிரியர்கள் உரத்த குரல் எழுப்பினார்கள். காரணம் கேட்டேன்.-ரொம்ப
எளிமையான முறையில் சொல்லப்பட்ட அறம் என்றார்.ஓர் ஆசிரியை அவரிடம்
-இயல்வது கரவேல் என்றால் என்ன பொருள்? என்றேன். சொல்லச் சிரமப்பட்டார்.
`கரவேல்` என்ற சொல்லுக்கான பொருள் அந்தக் கூட்டத்தில் விரல் விட்டு
எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது. உடையது விளம்பேல் என்ற
வரிக்கு ஓர் ஒருமித்த பொருளை அன்று ஆசிரியர் கூட்டம் தரவில்லை. வீண்
குழப்பமே மிகுந்தது. `ஙப்போல் வளை`யும் அப்படித்தான்.! ஆத்திசூடி
எளிமையானதும் அல்ல. ஞானத்தின் தொகுதியும் அல்ல தையல் சொல் கேளேல்.! (பெண்
பேச்சைக் கேட்காதே) என்று சொன்ன நூல் தான் ஆத்திசூடி.

நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குத் தொடக்கக்கல்வி தந்த
ஸிவ்வியா என்ற ஆசிரியையின் அனுபவம் (வநயஉhநச என்ற நூல்) இங்கு
குறிப்பிடத்தக்கது. தன் விருப்பப்படி கல்வியைத் தொடங்காமல் ஒவ்வொரு
மாணவரிடமும் தனித்தனியே உரையாடி ஒவ்வொருவருக்கும் உரிய ஆரம்பச் சொற்களைத்
தேடியவர் அவர். ஒரு மாணவிக்கு `அம்மா` ஒரு மாணவனுக்கு `துப்பாக்கி` ஒரு
மாணவனுக்கு -`கார்` அவர்களுக்குள் வட்டமிடும் சொற்களைக் கொண்டே
அவர்களுக்கான கல்வியைத் தொடங்கினார் ஸில்வியா

மிகவும் பொறுமையும் அக்கறையும் இருந்தால் மட்டுமே கல்வியில் இப்படிப்பட்ட
தொடக்கத்தைப் தரமுடியும்.

இன்றைக்கு முதல் முறையாகச் சமச்சீர்க் கல்வி முதல் வகுப்புத் தமிழ்
பாடநூல் பிற்போக்கான பல தடைகளைத் தாண்டி கொஞ்சம் முன்னேறியிருப்பது
மகிழ்ச்சியை தருகிறது.

சமச்சீர்க்கல்வி ஆறாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல் உருவாக்கத்தில்
பங்கேற்றவர்களுள் நானும் ஒருவன் ஆசிரியர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள்,
சமூக சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினரும் பாடநூல் உருவாக்கத்தில்
பங்கேற்றிருந்தார்கள். பாடநூல் இது முதல் அனுபவம்.
ஆசிரியரின் பிடியைக் கொஞ்சம் தளர்த்தி மாணவரை நோக்கிப் பாடப்புத்தகத்தை
நகர்த்துவது புத்தகத் தயாரிப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. பாடப்
பொருள், மொழி, இலக்கணம், திறன் என எல்லாமே வகுப்பறையில் ஆசிரியரின் இடம்
குறைந்து மாணவரின் இடம் அதிகரிக்க வேண்டும் என்பது புத்தக தயாரிப்பில்
உழைத்தவர்களின் விருப்பமாக இருந்தது.

புத்தக உருவாக்கம் கமுக்கமாக நடைபெறவில்லை. அது ஒரு திறந்த மேடையாக
இருந்தது. படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் ஒரு பொது அழைப்பு இருந்தது.

பலரும் வந்து படித்துப் பார்த்துத் தட்டிக் கொடுத்துச் சென்றார்கள்
ஆனால், ஒரு சில ஆசிரியர்களின் இருந்து மனத்தாங்கலான ஒரு கருத்து வந்தது.
பாடப் புத்தகம் இத்தனை எளிமையாக இருந்தால் ஆசிரியர் எதற்கு? என்று
அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இன்று புத்தகம் முடிந்து வெளிவந்த பிறகு
நோட்ஸ் போடும் நிறுவனத்தார் ஒருவர் என் வீடு தேடி வந்து கேட்டார். ``
புத்தகம் இவ்வளவு எளிமையாக இருந்தால் எப்படி நோட்ஸ் போடுவது? இரண்டு
கேள்விகளுக்கும் இடையே ஒரங்குல தூரமும் இல்லை.

சமீபத்தில் ஒரு நாளிதழில் ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் குறித்து
மதிப்பிட்டிருந்தவர். நூல் மிக எளிமையாக இருக்கிறது எனக்
குறைப்பட்டிருந்தார். `மலிவு விலையில் கூறு கட்டி விற்கப்படும்
வாழைப்பழம்` என அவர் அங்கலாய்த்திருந்தார்.ஆசிரியரின் தேவையும்,
இருந்தால்தான் அது கனமான - தரமான கல்வி என்பது இவர்கள் அபிப்பிராயம்.

தமிழ்நாட்டு வகுப்பறைகளில் மாணவரின் வாசிப்புத் திறன் பலவீனமாக
இருக்கிறது என்பதுவே, சில மாதங்களுக்கு முன் வெளியான `அஸர் அறிக்கை` யில்
கிடைக்கும் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அறிவொளியின் போதும் இதே
அனுபவம் தான். ஆறாம் வகுப்பில் படித்த மாணவனுக்கு அறிவொளிப் பாடத்தை
வாசிப்பது சிரமமாக இருந்தது. அவன்தான் கிராமங்களில் எங்களுக்குக்
கிடைத்த தொண்டன்!

எளிமை என்பது எவருடைய தனிப்பட்ட விருப்பமும் அன்று, அது காந்தத்துண்டாய்
ஈர்க்கப்படவும், இது அத்தியாவசியத் தேவை.

ஆறாம் வகுப்புப் பாடநூல் உருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் சிறுசிறு
தடைகள் முளைக்க ஆரம்பித்தன. பிழைகளைத் திருத்த வந்தோர் திருத்தங்களை
வலியச் செய்தனர். அகராதி அகரமுதலி ஆனது. பெரியார் ராமசாமி பெரியார்
இராமசாமி ஆனார்.ர,ல , இரண்டையும் இன்று மொழி முதல் எழுத்துக்களாக
கொள்வதில் தடையே இல்லை என்று மொழியியல் அறிஞர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லி
வருகின்றனர்.பிழை திருத்துபவர்கள் நவீன உரையாடல்களைக் காதில்
வாங்காதவர்கள்.!

மாணவர்களை வகுப்பறையில் பேசவைக்கும் நோக்கில் துணைப்பாடமாக
வைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கதைகள் ஒவ்வொன்றாய்ப்
பறிபோயின.நாட்டுப்புறக் கதை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் இல்லையா?
இல்லையாம்..! வடமொழி கலவாமல் பேசுவதும் எழுவதும் தான்
தமிழ்ப்பண்பாடாம்..! கேலிக்கூத்து..!

வேரின் துடிப்பு`என்ற அற்புதமான நாட்டுப்புறக் கதையை நீக்கி விட்டு
விவேகானந்தரைப் பாடமாக வைத்தார்கள்..! பாடப்புத்தகம் இன்னும் கணமாக
வேண்டும் என்பதற்காக 15 ஆக இருந்த திருக்குறள் பாடல்களை 20 ஆக
ஆக்கினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலான, `நாட்டுப்புறம்` என்று வருகிற இடத்தில் எல்லாம்,
நாட்டுப்புரம் எனத் திருத்தி, கடுமையான உழைத்து உருவாக்கப்பட்ட இப்
பாடப்புத்தகத்துக்குத் தீராத களங்கத்தை உண்டு பண்ணினார்கள்.

இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் விரும்பிக் கையிலெடுக்கும் விதத்தில் -
ஆர்வமுடன் வாசிக்கும்படி - சமச்சீர்க்கல்வி ஆறாம் வகுப்புத் தமிழ்ப்
பாடப் புத்தகம் வந்திருக்கிறது. தமிழ்ப்பாடப் புத்தகம் இவ்வளவு அழகான
தோற்றத்துடன். இதுவரை வந்ததும் இல்லை. மாணவர்களை நோக்கிய அற்புதமான
நகர்வு இது.

ஆனால், நகர்வு தொடருமா? தடுத்து நிறுத்தப்பட்டு,ஆசிரியர் கையிலேயே
புத்தகம் அடைக்கலம் ஆகுமா என்பதேல்லாம் அடுத்தடுத்த பாடப்புத்தகங்கள்
வரும் போது தெரியும்..!

நன்றி: செம்மலர் ஜூலை இதழ்

by
M. DAVID AMALANADANE
PHARMACIST-ONGC
CHELLAMAL ILLAM, Ist FLOOR
123, Ist CROSS, BHARATHY NAGAR,
KARAIKAL 609 602.
Mobile: 94425 93448

திங்கள், ஜூலை 05, 2010

ஆல்ப்ஸ் ..மலையின் ..ஓரத்தில்..!!அழகிய ..ரைன் நதி.. இன்நதி ..ஓரத்தில்..!! இஞ்சி மம்மி...!

அன்பு நண்பர்களே..
வணக்கம். இந்த சுட்ட மனிதனையும். உறைந்த மனிதனையும் பாருங்கள்.

ஆல்ப்ஸ் ..மலையின் ..ஓரத்தில்..!!அழகிய ..ரைன் நதி.. இன்நதி ..ஓரத்தில்..!!

இஞ்சி மம்மி...!

Ginger, the world's oldest mummy

நண்பா , நீங்கள் பார்க்கும் படம், ஆப்பிரிக்காவின், எகிப்திய பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இயற்கை மம்மி.

The Ice Man pictured on a sheet covered stainless steel autopsy table.

மம்மி என்ற சொல் அரேபிய மொழியிலிருந்து வந்ததாம்..இதுதான் மிக வயதான மம்மியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 5 ,400௦௦. கருவின் நிலையில், கவிழ்ந்து காணப்படும் இதன் பெயர், இஞ்சி மம்மி. நிறத்தை வைத்தும, முடி சிவப்பாக இருப்பதாலும் இப்படி பெயரிடப்பட்டது. இது எகிப்திய கெபெளின் பாலைவனத்தில் , இயற்கையாக மணலில் சூரிய வெப்பத்தில் கருவாடு ஆக்கப்பட்ட மம்மி. நம்ம ஊர்லே கடற்கரையிலே கருவாடு காயப்போட்டு இருப்பாங்களே .. அதுபோல்தான் இதுவும். வெயிலில் உடலின் 75 % நீர் ஆவியாகி போனபின்பு பாக்டீரியா அதன் உடலை சிதைக்க முடியாது. மம்மியின் அருகில் கிடக்கும் மண் பானைகள் ,இறந்த மனிதன் அவனின் சொர்க்க/பாதாள வாழ்க்கை வாழ உணவு, பொருள்கள் மற்றும் நீர் அவனுடன், அவனை புதைத்தவர்கள் வைத்துள்ளனர். கல்லறையின் மேல் ஏராளமான கற்கள் அடுக்கப்பட்டு இருந்தன.. என்ன ஓநாய்கள் உடலை கூறு போடாமல் இருக்கவே..!
இப்போது இது லண்டனிலுள்ள அருங்காட்சியத்தில்.. அறை எண் 64ல் ..!..
ஓட்சி...பனிமனிதன்...!
ஒட்சி போட்டிருந்த பொருட்கள் இவை..!
Artist rendition of Ötzi right shoe. Made of Bear skin and waterproof, quite sophisticated for 53 hundred years ago.
நம்ம கால காலேஜ்மேட் போல, அந்தக் கால மம்மிமேட்டும் இருந்திருக்கே..! அதாங்க இஞ்சி மம்மி போல,சம காலத்தில் , ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலை பள்ளத்தாக்கில் , ஆஸ்த்திரிய ,இத்தாலிய எல்லையிலும் இதே போல ஒரு மம்மி..!இதன் எடை 50 கிலோ. உயரம் 5 ' 5 ''.இந்த மம்மியை மத சடங்குக்காக பலி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அங்கே சூரியனால் பாடம் செய்யப்பட கருவாடு. இங்கே பனிக்கட்டியால் பாடம்செய்யப்பட்டது, . இதன் பெயர் ஓட்சி பனிமனிதன். வயது. 5 ,300 .இது இன் நதி ஓரத்தில் ." இஞ்சி" ரைன் நதி ஓரம்... வயிற்றிலுள்ள குடலில் சாட்டைப்புழு உள்ளதாம் ..!. உடலில் புல்லினால் ஆனா லூசாக உள்ள உடை உள்ளது. கோட், பெல்ட்தோலாலான தொப்பி ,ஒரு ஜோடி ஷுக்கள் இருந்தன. ஷுக்கள் நீர் புகாவண்ணம் , பனிக்கட்டியில் நடக்க ஏதுவாக இருக்கிறது . எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.. !! அதுவும் 5 ,300௦௦ ஆண்டுகளுக்கு முன்...!

--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

வெள்ளி, ஜூலை 02, 2010

பேப்பர் .கூடு கட்டும் குளவி..

அன்பு நண்பர்களே.
வணக்கம். ,நாங்கள், NCSC, வழிகாட்டி கையேடு தயாரிப்புக்காக, அதன் மூளை புயல் அமர்வுக்காக, Brain storming session என்பதை கொஞ்சம் விளையாட்டாய் சொன்னேன். அப்போது நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு அருகில் காகிதத்தால் கூடு கட்டும் குளவி பார்த்தேன். அதனை படமும் பிடித்தேன். பின் அது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி உள்ளேன் அதனை இத்துடன் இணைத்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.
நன்றி.
என்றும் அன்புடன்,
மோகனா .


பேப்பர் .கூடு கட்டும் குளவி..
நம்மில் பெரும்பாலோருக்கு குளவியை நன்றாகவே தெரியும். நம்வீடுகளில் மண் வீடு கட்டுமே .. அதுதானே..! அந்த குளவி மண் வீடு கட்டினால், வீட்டில் குழந்தை பிறக்கும் என்றுகூட சொல்வார்களே.. அந்த குளவிதான் இது பட்டாம் பூச்சி இனத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, இது தேனீயும் அல்ல, எறும்பும் அல்ல. பயிர்களை சாப்பிடும், பூச்சிகளை குளவி வேட்டையாடும்.சூழல் மண்டலத்தின் நெருங்கிய நண்பன்தான் குளவி.இவை துருவப் பிரதேசம் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றன. இதன் எடை 1 கிராமுக்கும் குறைவே. வாழ்நாள் 12-22 நாட்களே.
குளவி இனத்தில்,சுமார், 100,000௦௦௦ இனங்கள் உள்ளன. பெரும்பாலும் இவை ஒட்டுண்ணிகளாகவே இருக்கின்றன. சில குளவிகள் தனியாகவும், சில கூட்டு சமூக வாழ்க்கையும் நடத்துகின்றன. பெரும்பாலும் இவை கூடு கட்டுவதில்லை. ஆனால் சில குளவிகள் அற்புதமாக வீட்டை கட்டுகின்றன. குளவிகளுக்கு, எறும்புகள் போலவே, கூட்டுக் கண்கள உண்டு.குளவிகள், கம்பளிப் புழுவாய் இருக்கும் போது ஒட்டுண்ணியாகவும், வளர்ந்து முதிர்ந்த பருவத்தில் தேன் மற்றும் மகரந்தத்தை உண்பவர்களாகவும் இருக்கின்றன. சமூக குளவிகள், சர்வபட்சிணிகள். எதை வேண்டுமானாலும், போட்டு தள்ளும்.சில குளவிகள் ஆச்சரியமான பழக்கம் , வழக்கம், உடையவை.இதில் மஞ்சள் சட்டைகாரன் என்ற குளவி, இறந்த விலங்குகளை தன் குஞ்சான கம்பளிபுழுவுக்கு பொறுக்கி வந்து தரும்.சில இனங்களில், கம்பளிப் புழு தன் உடலில் இருந்து, தேன் போல ஒரு சுரப்பை முதிர்ந்த குளவிக்குத் தரும்.மஞ்சள் சட்டைக்காரன் குளவி, தன் குஞ்சு கம்பளிக்கு, தேனீக்களின் கூட்டிலிருந்து தேனைத் திருடிவந்து கொடுக்கும் .
பெரும்பாலான சமூக குளவிகள், பேப்பர் கூடுதான் கட்டு கின்றன.குளவியின் இனம் மற்றும் இருக்கும் இடம் பொறுத்தே கூடுகள் கட்டப் படுகின்றன. இவை மரத்திலோ, பொந்திலோ, தரையில் உள்ள பள்ளங்களிலோதான் தங்களின் கூட்டை கட்டுகின்றன. இவைகளுக்கு, தேனீக்கள் போல, மெழுகு சுரக்கும் சுரப்பி கிடையாது. இவை மரத்தின் கூழிலிருந்து, பேப்பரை உற்பத்தி செய்கின்றன. ,இவை, சிதைந்து போன மரங்களிலிருந்து,மரத்தூளைக்கொண்டு வரும்.அதனை தன் பற்களால் கடித்து மென்மையாக்கும். பின் தனது எச்சிலை அதில் நன்றாக கலந்து கொண்டு, நிறைய அறைகளுள்ள கூட்டை உருவாக்கும் .கூட்டை முதலில் ராணிதான் கட்டத் துவங்கும். ஒரு வாதுமை அளவுக்கு கூடு வந்ததும், அதனைப் பின்பு வேலைக்காரர்கள் /பணியாட்கள் கையில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் படும். நிறைய அறைகள் உள்ள கூடவே இது இருக்கும்.ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு முட்டை பத்திரமாக வைக்கப்படும். பின்னர் அதன் வாயில் மூடப்படும்.இப்படியே, அடுக்குக்கு மேல் அடுக்காக மாடி கட்டி முட்டையை ராணி குளவி இடும். கூடு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அதனை வைத்து அதில் எத்தனை பெண் வலைக்கரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியும்.ஒரு கூட்டில் பல ஆயிரம் பெண் பணியாட்களும், ஒரே ஒரு ராணி குளவியும் இருக்கும்.
கூடுகட்டும் குளவிகள், சுமார் 1 100 வகைகள் உள்ளன. குளவிகள், இணைதேடுவதற்காக பறக்காது..பருவம் வந்த இளைய ராணியுடன், ஆண் இணையும். அதன் பின் பெண்ணின்வயிற்றிலுள்ள ஒரு பந்து போன்ற அமைப்பில், ராணி ஆணின் விந்து செல்களை சேமித்து வைத்திருக்கும்..எனவே, ஒவ்வொரு முறை முட்டையிடும்போதும்.சேமித்த வைத்துள்ள விந்தே, முட்டையுடன் இணைந்து, பெண் குளவிகள் உருவாகின்றன. இதில் கருவுற்ற முட்டைகளும், கருவுறாத முட்டைகளும் இருக்கின்றன. ஆனால் கருவுற்ற முட்டையிலிருந்து, பணிப்பெண்ணும், கருவுறாத முட்டையிலிருந்து, ஆணும் உருவாகின்றன. , பல முட்டைகளிலிருந்து, கரு உருவாக்க முடியாத மலட்டு குளவிகளேப பிறக்கின்றன.

Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642

வியாழன், ஜூலை 01, 2010

புவிக் கோள் காப்போம் ( Save Planet Earth ) வலைப்பூ

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநில மையம் சார்பாக புவிக் கோள் காப்போம் ( Save Planet Earth ) என்னும் தலைப்பில் பருவநிலை மாற்றம் குறித்த தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் வலைப்பூ துவக்கி உள்ளது.


Link: http://climatechangetnsf.blogspot.com/2010/06/blog-post_28.html


நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்