இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

அறிவியல் இயக்க செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் இயக்க செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 21, 2009

அறிவியல் இயக்க செய்திகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு மாவட்டம் சார்பாக மண்டல கல்வி கருத்தரங்கம் 09 & 10-01-2010 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது ஆகையால் ஆசிரியர் இணைய உறுப்பினர்கள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை நல்குமாறு வேண்டுகிறோம்

அறிவியல் இயக்க செய்திகள்

புதன், அக்டோபர் 21, 2009

அறிவியல் இயக்க செய்திகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினரும், சேலம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று, தேசிய அளவில் பங்கேற்ற இளம் விங்ஞானி திருமிகு. கனேஷ்வர்( சேலம் சாரதா பாலமந்திர் மாணவர் ) நேரு அறிவியல் மையம், (மும்பை ) சார்பில் 26 & 27 - 09 -2009 நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் (மாநில அளவில் முதலிடத்தையும், )தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார், திருமிகு.கணேஷ்வருக்குதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

சனி, அக்டோபர் 10, 2009

அறிவியல் இயக்க செய்திகள்







தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்ட இணை செயலர் ஜீ.சுரேஷ் , அறிவியல் இயக்க உறுப்பினர் ஜீ. ஐடா பிரிஸில்லா ஆகியோரின் மதம், சாதி, சடங்கு, சம்ப்ரதாயம் தவிர்த்த எளிய விருப்ப ( அறிவியல் ) திருமணம் இரு குடும்பத்தினர் முன்னிலையில் 13-09-2009 அன்று , சேலம் மாவட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க அலுவலகத்தில் அறிவியல் இயக்க உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்புடன், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சேதுராமன் அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சியுடன் துவங்கி, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் மாநில தலைவர் திருமிகு. ஸ்ரீராம் மற்றும் சேலம் மாவட்ட அறிவியல் இயக்க துணை தலைவர் திருமிகு. சசிகலா அவர்களின் வாழ்த்துரைகளுடன், சேலம் அக்னி கலைகுழுவின் அறிவியல் மற்றும் சமுக பாடல்களுடன் இனிதே நடைபெற்றது.

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

அறிவியல் இயக்க செய்திகள்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்துடன் இணைந்து ஏர்போர்ட் அரிமாசங்கம் சார்பில் 5000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டது.

அறிவியல் இயக்க செய்திகள்



தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்துடன் இணைந்து எக்ஸ்னோரா சார்பில் 1000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டது.

அறிவியல் இயக்க செய்திகள்


சேலம் ரோட்டரி சங்கம் சார்பில் 2000 பிரதிகள் வரை விநியோகிக்கப்பட்டது.

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

அறிவியல் இயக்க செய்திகள்



படத்தின் மேல் சொடுக்கி தேர்வு செய்வதன் மூலம் படத்தை பெரிதாக காணாலாம்


YSF2009 for youths and college students in the age group of 17 to 21.
Focal Theme : Nature, Science and Society
Areas of Projects:
1) Popularization of Science
2) Removal of Superstition
3) Preservation of Environment
4) Growth and development
5) Health and Sanitation
6) Education
7) Women Empowerment
8) Using Technology
Project Team:
* 2 to 4 person can form a team.
* Each team will be assisted by a guide who may be a teacher or Social activist.
* Project report can be presented either in English or in Tamil
Objective:
Involving College students and the youth to exhibit their creativity & innovativeness and more particularly their ability to relate science to society & the addressing various problems of society. Features of YSF Projects:
1) Innovative, simple and practical
2) Based on exploration of everyday life-situations
3) Involving field based data collection
4) Definite output thro' Scientific medhodolgy
----and so on
Dates to Remember:
* SENT Tentative title with the abstract of the propose work
* Completed projects with the final title, abstract, objectives,details of methodology employed, results & discussion, future plans and references
* Researchers of selected projects will be intimated by the last week of Sep.2009
* Project presentation on JAN.9th & 10th 2009 at Kongu Arts & Science College (KASC) ( Host of the YSF), Nanjanapuram, Erode,-638107
All particpants of YSF2009 will be appreciated with certificates
YSF State coordinator:
Dr.N.mani
9443305040
Email : ysftnsf@gmail.com & nmtnsf@yahoo.co.in
Registration fee:
Registration fee is Rs.100 for each project. DD shall be drawn in favour of " Tamil Nadu Science Forum " payable at Erode.
For further details pls see in the brochure attached with this email.

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2009

அறிவியல் இயக்க செய்திகள்


படத்தின் மேல் சொடுக்கி தேர்வு செய்வதன் மூலம் படத்தை பெரிதாக காணாலாம்

அறிவியல் இயக்க செய்திகள்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டத்தின் சார்பாக 1000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டது
படத்தின் மேல் சொடுக்கி தேர்வு செய்வதன் மூலம் படத்தை பெரிதாக காணாலாம்

செவ்வாய், ஜூலை 14, 2009

அறிவியல் இயக்க செய்திகள் ( 3 )

அறிவியல் இயக்க செய்திகள் ( 2 )

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சமம் கட்டுரை போட்டியில்,சேலம் மாவட்டத்தில் ஆத்தூர்கிளையின், சர்.ஐசக்.நியூட்டன் துளிர் இல்ல உறுப்பினரும், பெத்தநாயக்கம்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவியுமான திருமிகு.பவித்ரா அவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதலிடத்தை பெற்றுள்ளார், அவருக்கு சேலம் மாவட்டக்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதன், ஜூலை 01, 2009

அறிவியல் இயக்க செய்திகள்


சர்வதேச வானியல் ஆண்டை முன்னிட்டு, சர்வதேச வானியல் ஆராய்ச்சி நிறுவனகளின் சார்பில் 2009 - ஏப்ரல் - 02 முதல் 05 வரை ( கலிலியோ கலிலி நானுறு ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களுக்கு தனது தொலைநோகியின் மூலம் வானியல் பொருட்களை காண்பித்ததுபோன்று ) நடைபெற்ற ஒரு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க பங்களிப்பு பற்றிய விபரங்கள் அவர்களின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதனை பார்வையிட கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் http://www.100hoursofastronomy.org/component/eventlist/details/2457-astronomy-tour

செவ்வாய், ஜனவரி 27, 2009

அறிவியல் இயக்க செய்திகள்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்ட , சர்வதேச வானவியல் ஆண்டின் முதல் நிகழ்ச்சி மோகன் நகர் கிளையில்