இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

#தாரமங்கலம்கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#தாரமங்கலம்கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 07, 2018

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாரமங்கலம் கிளை சார்பாக அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் -(01/06/2018) வெள்ளிக்கிழமை- தாரமங்கலம் பேருந்து நிலையம்







அன்பார்ந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுப்பினர்கள் - ஆசிரியர்கள் - பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏

இன்று


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - தாரமங்கலம் கிளை சார்பாக அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று(01/06/2018) வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் தாரமங்கலம் பேருந்து நிலையம் நடைபெற்றது.💐💐💐💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻



இந்நிகழ்விற்கு எங்கள் மரியாதைக்குரிய தலைமையாசிரியர்கள் திருமிகு.பழனிவேல் ஐயா அவர்களும் & திருமிகு.செந்தில்குமார் அவர்களும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


அதைத்தொடர்ந்து அறிவியல் இயக்க உறுப்பினர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களிடமும் , கடைகளிலும் , கல்லூரி மாணவர்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐



அதற்கு முன்னதாகவே 800 துண்டு பிரசுரங்கள் தினத்தந்தி செய்திதாளில் இணைத்து விடியற் காலை 5 மணிக்கு செய்தித்தாள் வாங்கும் கடைகளுக்கும் , வீடுகளுக்கும் அனுப்பப்பட்டது.
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐💐💐


*இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர்கள் திருமிகு.பழனிவேல்
திருமிகு.செந்தில்குமார்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் & ஆசிரியர் திருமிகு.சுந்தரலிங்கம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்  திருமிகு.ரமேஷ்
வட்டாரச் செயலாளர் திருமிகு.சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி்னர்.
💐💐💐💐💐




அரசுப்பள்ளி நம் பள்ளி - அரசுப்பள்ளி மக்கள் பள்ளி


அரசுப்பள்ளியை பாதுகாப்போம் - கல்வி வியாபாரமயமாய் மாறுவதை தடுப்போம்


மாணவர் நலன் காப்போம் - சமூக மாற்றத்தை உருவாக்குவோம்

💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻


அன்பால் இணைவோம் ..!

 அறிவியல் பரப்புவோம்..!
😊😊😊😊😊😊


சி.சந்தோஷ் குமார் / செயலாளர்



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் / தாரமங்கலம் கிளை.

புதன், ஏப்ரல் 18, 2018

தேசிய அறிவியல் தினம் (28.02.2018) தாரமங்கலம் கிளை

அன்பார்ந்த அறிவியல் இயக்க நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

நேற்று தேசிய அறிவியல் தினம் (28.02.2018) தாரமங்கலம் கிளை  சார்பாக 5 தாரமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  நடுநிலைப்பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.


இந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் பள்ளியில் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் நமது மாவட்ட அறிவியல் இயக்கம் சர்.சி.வி.ராமன் எழுதிய வானம் நீல நிறமா? ( தமிழில் சி.எஸ்.வெங்டேஸ்வரன் ) என்ற ₹20 மதிப்புள்ள புத்தகத்தை ஒளிநகல்(xerox) எடுத்து ₹ 3 க்கு வழங்க ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு ராமன் விளைவை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் புத்தகம் படிக்கும் ஆர்வத்தையும் , அறிவியல் மேல் ஈடுபாட்டையும் , அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் கொண்டு வர நமது சேலம் மாவட்டம் அறிவியல் இயக்கம் முயற்சி எடுத்து அதை நேற்று வெற்றிகரமாக செய்து முடித்தது.



மாவட்டத்தில் இருந்து திருமிகு.ஜெயமுருகன் மாவட்டத் தலைவர் , அவர்களும்


திருமிகு.சுரேஷ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவரகளும்


தாரமங்கலம் பகுதிக்கே வந்து தேசிய அறிவியல் தின சிறப்புகளையும் , சர்.சி.வி.ராமன்அவர்களின் ராமன் விளைவு ( வானம் ஏன் நீல நிறமாக உள்ளது ) பற்றியும் அந்த ஐந்து பள்ளிகளுக்கும்


1.எம்.ஜி.ஆர் காலனி - ஜெயமுருகன் .(150 புத்தகம் வாசிக்கப்பட்டது )

2.செங்கோடனூர் - சுரேஷ்

3.ஆ.ப.வட்டம் - ஜெயமுருகன் (25 புத்தகம் வாசிக்கப்பட்டது)

4.மாட்டையாம்பட்டி - சுரேஷ் ( 25 புத்தகம் வாசிக்கப்பட்டது )

5. கிருஷ்ணம்புதூர் - ஜெயமுருகன் , சுரேஷ் ( 25 புத்தகம் வாசிக்கப்பட்டது)

6. சிவகாமி அம்மாள் பள்ளி - தொளசம்பட்டி (100 புத்தகங்கள் வாசிக்கப்பட்டது.)

விளக்கினார்கள் .மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு அறிவியல் மேல் ஆர்வம் ஏற்பட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த பாடல்களையும், அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை பாடியும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.




மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை எங்களுக்கும் நடத்தி தாருங்கள் என்று பல பள்ளிகளில் இருந்து ( தாரமங்கலம் , ஓமலூர் , மேச்சேரி ஒன்றியங்களில் ) தலைமையாசிரியர்கள்  கேட்டுள்ளார்கள் .


அந்த அளவுக்கு நேற்றைய தாரமங்கலம் அறிவியல் இயக்க நிகழ்வுகள் மாவட்ட முழுக்க பரவியுள்ளது.


இந்த நிகழ்வுக்கு ஆதரவு தந்த அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் , மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , தாரமங்கலம் கிளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



மேலும் இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட


 திருமிகு.ஜெயமுருகன் மாவட்டத் தலைவர் , அவர்களுமக்கும்


திருமிகு.சுரேஷ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவரகளுக்கும்


தாரமங்கலம் அறிவியல் இயக்க கிளை நன்றியை தெரிவித்தது கொள்கிறது.🙏🏻🙏🏻



சி.சந்தோஷ்குமார் / செயலாளர் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , தாரமங்கலம் .