இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

#தாரமங்கலம் கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#தாரமங்கலம் கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 18, 2018

ஓரிகாமி பயிற்சிமுகாம் -தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -தாரமங்கலம் கிளை

தாரமங்கலம் ஓரிகாமி வகுப்புகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தாரமங்கலம் கிளை ஏற்பாடு செய்திருந்த ஓரிகாமி வகுப்பு - ஒருநாள் பயிற்சி வகுப்பு.. 29/03/2018.
வட்டாரத்தலைவர் திரு.வள்ளிமுத்து தலைமையேற்றார்.
Nice kids college பள்ளியின் தாளாளர் சேகர், TNSF மாவட்ட இணைச் செயலாளர் செங்கோட்டுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.சந்தோஷ்குமார் வட்டார செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை ஆசிரியர்கள் சரவணன் , ஆசைத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினர்.

மாவட்டத்தலைவர் .திரு.ஜெயமுருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 ஒரிகாமி மாவட்ட கருத்தாளர் சத்தியமூர்த்தி ஆசிரியர் அவர்கள் ஓரிகாமி குறித்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயல் முறையில் விளக்கினார்.ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பல்வேறு வடிவங்கள் செய்தனர். வட்டாரத் துணைத் தலைவர் லூர்து சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு காகித பூக்கள் செய்து காண்பித்தார்.

பிற்பகல் நிகழ்வாக 
வெங்கடேசன் ஜலகண்டபுரம் கிளை செயலாளர்,  
கலைச்செல்வன் சேலம் பறவையியல் கழகம், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்..

முடிவில் சீனிவாசகர், வட்டாரச் செயற்குழு உறுப்பினர்அவர்கள் நன்றி கூறினார்..

 சுமார் 85பேர் கலந்து கொண்ட மிகவும் பயனுள்ள வகுப்பாக  இது அமைந்தது. ...குறிப்பாய் சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு...